INDvsBAN:பாண்டியா எழுச்சி, குல்தீப் பவுலிங்கில் கிளர்ச்சி.. 50 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Indvsban:பாண்டியா எழுச்சி, குல்தீப் பவுலிங்கில் கிளர்ச்சி.. 50 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா

INDvsBAN:பாண்டியா எழுச்சி, குல்தீப் பவுலிங்கில் கிளர்ச்சி.. 50 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா

Marimuthu M HT Tamil
Jun 23, 2024 12:58 AM IST

INDvsBAN: 50 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி, மேலும் பாண்டியா ஆட்டமிழக்காமல் 50 ரன்களை எடுத்ததோடு, ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

INDvsBAN:பாண்டியா எழுச்சி, குல்தீப் பவுலிங்கில் கிளர்ச்சி.. 50 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா
INDvsBAN:பாண்டியா எழுச்சி, குல்தீப் பவுலிங்கில் கிளர்ச்சி.. 50 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா (Surjeet Yadav)

இதில் முதலில் டாஸ் வென்ற வங்கதேசம் அணியானது, இந்தியாவை பேட்டிங் செய்யுமாறு பணித்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி:

அதன்படி முதலில் இந்திய அணி களத்தில் குதித்தது. இந்தியாவின் முதல் இருதொடக்க வீரர்களாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும், நட்சத்திர வீரர் விராட் கோலியும் களமிறங்கினர்.

ரோஹித் சர்மா 23 ரன்கள் எடுத்திருந்தபோத வங்காளதேச வீரர் ஷேக் ஐ ஹசனின் பந்தில், ஜகர் அலியிடம் கேட்ச் கொடுத்து, பெவிலியன் திரும்பினார். விராட் கோலி 37 ரன்கள் எடுத்திருந்தபோது, டன்ஸிம் ஹசன் சகிப் பந்தில் போல்டு ஆனார். இதைத்தொடர்ந்து மூன்றாவதாக களமிறங்கிய ரிஷப் பண்ட் நிதானமாக ஆடி, 24 பந்துகளில் 36 ரன்களை எடுத்தபோது, ரிஷப் ஹோசைன் பந்தில் அவுட்டானார்.

பின் ஆடிய சூர்யகுமார் ஆறு ரன்களில், டன்ஸிம் ஹசன் சகிப் பந்தில்,லிட்டன் தாஸிடம் கேட்ச் கொடுத்து மைதானத்தை விட்டு வெளியேறினார். அடுத்து வந்த சிவம் துபே கொஞ்சம் பொறுமை காத்து ஆடி, 34 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா 27 ரன்களில் 50 ரன்கள் எடுத்து, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அக்சர் பட்டேல் மூன்று ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியாக, இந்தியா 20 ஓவர்களில் எக்ஸ்ட்ரா அனைத்தையும் சேர்த்து, ஐந்து விக்கெட் இழப்புக்கு, 196 ரன்களை எடுத்தது.

இந்திய அணிக்கு எதிராக முதலில் பந்துவீசிய டன்ஸிம் ஹசன் சகிப் 2 விக்கெட்களையும், ரிஷத் ஹோசைன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். சகிப் அல் ஹசன் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இரண்டாவதாக சேஸிங்கில் ஈடுபட்ட வங்கதேச அணி:

அதன்பின் 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் சேஸிங்கில் களமிறங்கிய வங்கதேச அணி, ஆரம்பத்தில் நிதானமாக ஆடியது.

தொடக்க வீரர்களாக லிட்டன் தாஸ் மற்றும் டன்ஸிட் ஹசன் வங்கதேச அணிக்காக இறங்கினர். இதில் லிட்டன் தாஸ் 13 ரன்கள் எடுத்தபோது, பாண்டியாவின் பந்தில், சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து மைதானத்தை விட்டுக் கிளம்பினார்.

அடுத்து குல்தீப் யாதவ்வின் பந்தில் டன்ஸிட் ஹசன் 29 ரன்கள் எடுத்தபோது எல்பிடபிள்யூ செய்யப்பட்டார்.

அடுத்து மூன்றாவதாக களமிறங்கிய வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹூசைன் சாண்டோ, 32 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தபோது, பும்ராவின் பந்தில், அர்ஷிட் சிங்கிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். வங்கதேசத்தின் முக்கிய மூன்று வீரர்களை வெளியேற்றியபின்,

இந்தியாவுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம் ஆனது. அடுத்து டவ்ஹிட் ஹிருடோயை 4 ரன்கள் எடுத்தபோது எல்பிடபிள்யூ செய்தார், குல்தீப் யாதவ். மேலும், சகிப் அல் ஹசனை 11 ரன்கள் எடுத்திருந்தபோது, சாதுர்யமாக பந்துவீசிய குல்தீப் யாதவ், சர்மாவின் உதவியின் மூலம் கேட்ச் ஆக்கினார். அடுத்து பந்துவீசிய அர்ஷ்தீப் சிங், முகமதுல்லா, ஜகர் அலி ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்தார்.

பின் ரிஷத் ஹூசைன், பும்ராவின் பந்தில், ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்போது அவர் 24 ரன்கள் எடுத்திருந்தார். அதன்பின், மஹிதி ஹசன் 5 ரன்களுடனும், டன்ஸிம் ஹசன் சகிப் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தபோது, வங்கதேசத்தால் மொத்தம் 146 ரன்களை மட்டுமே எடுக்கமுடிந்தது. இதனால், இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது.

இந்திய அணியின் சார்பில் பந்துவீசிய குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதன்பின் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இறுதியாக, ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.