Ind vs Eng 5th Test: 100 ஆண்டுகளில் தனித்துவ சாதனை! விக்கெட்டுகளை வாரி சுருட்டிய அஸ்வின் - குல்தீப் யாதவ் கூட்டணி
Ind vs Eng 5th Test Innings Break:உணவு இடைவேளை வரை 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்திருந்த இங்கிலாந்து இரண்டாவது செஷனில் அஸ்வின், குல்தீப் யாதவ் சுழலில் சிக்கி 6 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் இன்று தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் முதல் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய இங்கிலாந்து நல்ல தொடக்கத்தை தந்தது. முதல் செஷன் முடிவில் உணவு இடைவேளை வரை 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்திருந்தது. இதைத்ததொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது செஷன் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது.
இந்த செஷனில் இந்தியாவின் ஸ்பின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள். அடுத்தடுத்து 6 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் தேநீர் இடைவேளை வரை 8 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்திருந்தது.
இதன்பின்னர் மூன்றாவகு செஷன் தொடங்கிய அடுத்த 2 ஓவர்கள் முடிவதற்குள்ளாகவே எஞசிய இரண்டு விக்கெட்டுகளையும் இழந்ததது இங்கிலாந்து. 57.4 ஓவரில் 218 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியுள்ளது.
அஸ்வின் - குல்தீப் கலக்கல்
இந்திய அணியின் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியயோர் மிக துல்லியமாக பந்து வீசி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தந்தனர். இவர்களை அடித்து ஆட முடியாமலும், டிபெண்ட் செய்து சமாளிக்க முடியாமலும் தடுமாறிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
சிறப்பாக பந்து வீசிய குல்தீப் 5, அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டை எடுத்தார். இங்கிலாந்தின் 10 விக்கெட்டுகளையும் இந்திய ஸ்பின்னர்களே வீழ்த்தினார்கள்.
இந்தியா தற்போது தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.
100 ஆண்டு கால சாதனை முறியடிப்பு
டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் குறைவான பந்துகளை வீசி 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை இந்த போட்டியில் நிகழ்த்தியுள்ளார் இடதுகை ஸ்பின்னரான குல்தீப் யாதவ். 1871 பந்துகள் மட்டுமே வீசி தனது 50வது டெஸ்ட் விக்கெட்டை எடுத்துள்ளார். போட்டிகளை பொறுத்தவரை மிகவும் குறைவான போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் லிஸ்டில் சுபாஷ் குப்தே, எரபள்ளி பிரசன்னா மற்றும் அக்ஷர் படேல் ஆகியோருடன் இணைந்துள்ளார்.
டாபிக்ஸ்