GT vs MI: மும்பைக்கு விபூதி அடித்த குஜராத் டைட்டன்ஸ் - 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி; தமிழர் சாய் சுதர்ஷனால் நிமிர்வு!
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Gt Vs Mi: மும்பைக்கு விபூதி அடித்த குஜராத் டைட்டன்ஸ் - 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி; தமிழர் சாய் சுதர்ஷனால் நிமிர்வு!

GT vs MI: மும்பைக்கு விபூதி அடித்த குஜராத் டைட்டன்ஸ் - 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி; தமிழர் சாய் சுதர்ஷனால் நிமிர்வு!

Marimuthu M HT Tamil
Mar 24, 2024 11:43 PM IST

GT vs MI: மும்பை இந்தியன்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீழ்த்தியது.

மார்ச் 24, 2024, ஞாயிற்றுக்கிழமை, இந்தியாவின் அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது, இரண்டாவது இடதுபுறத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஸ்பென்சர் ஜான்சன், மும்பை இந்தியன்ஸின் ஜெரால்ட் கோட்ஸியின் விக்கெட்டைக் கொண்டாடுகிறார்.. (AP Photo/Ajit Solanki)
மார்ச் 24, 2024, ஞாயிற்றுக்கிழமை, இந்தியாவின் அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது, இரண்டாவது இடதுபுறத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஸ்பென்சர் ஜான்சன், மும்பை இந்தியன்ஸின் ஜெரால்ட் கோட்ஸியின் விக்கெட்டைக் கொண்டாடுகிறார்.. (AP Photo/Ajit Solanki) (AP)

சமீபத்தில் 17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிலும் இன்றைய மார்ச் 24ஆம் தேதிக்கான இரண்டாம் ஆட்டம் இரவு 7:30 மணிக்குத் தொடங்கியது.

அதிலும் இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் ஐந்தாவது போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே, குஜராத்தின் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

கடந்த முறை குஜராத் டைட்டன்ஸ் பைனலிஸ்ட்டாக வந்த நிலையில் இன்றைய போட்டி விறுவிறுப்பாகவே இருந்தது.

தொடக்கத்தில் டாஸ் வென்ற மும்பை அணி, குஜராத் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. அதனைத் தொடர்ந்து குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்ய, மும்பை அணி ஃபீல்டிங்கினை தேர்வு செய்தது.

இதனைத் தொடர்ந்து குஜராத் அணியின் முதல் இணை வீரர்களாக, சுப்மன் கில்லும் விருதிமான் சகாவும் களமிறங்கினர். அப்போது 19 ரன்கள் எடுத்திருந்தபோது, பும்ராவின் பந்துவீச்சில் அவுட்டானார்.

இதனைத் தொடர்ந்து, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில், தமிழரான சாய் சுதர்ஷனுடன் பார்ட்னர்ஷிப் போட்டு ரன் குவிக்க ஆரம்பித்தார். ஆனால், துயரமாக 22 ரன்களுக்கு 31 ரன்கள் எடுத்தபோது சுப்மன் கில், சாவ்லாவின் பந்தில், ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து மைதானத்தை விட்டு வெளியேறினார்.

அதன்பின் சுதாரித்து ஆடிய, தமிழ் சிங்கம் சாய் சுதர்ஷன், 39 பந்துக்கு, 45 ரன்கள் எடுத்த நிலையில், பும்ராவின் பந்துவீச்சில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதில் ஒரு சிக்ஸ், மூன்று ஃபோர் ஆகியவையும் அடங்கும்.

அடுத்து வந்த வீரர்கள் மிகச் சொற்ப ரன்களுக்கே வெளியேறினர். ஆசாதுல்லா ஓமர்ஜாய் 17 ரன்களும், டேவிட் மில்லர் 12 ரன்களும், ராகுல் டிவாட்டியா 22 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அடுத்து களமிறக்கப்பட்ட தமிழக வீரர் விஜய் ஷங்கர் 5 பந்துகளுக்கு 6 ரன்கள் எடுத்தும், ரஷித் கான் மூன்று பந்துகளுக்கு நான்கு ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஆட்டத்தில் எக்ஸ்ட்ராவாக 12 ரன்கள் கிடைத்தன. இறுதியாக, குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு, மொத்தமாக168 ரன்களை எடுத்தது.

இப்போட்டியில் முதன்முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, முதல் மூன்று ஓவர்களை வீசி, 30 ரன்களை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அள்ளிக் கொடுத்தார்.

அதன்பின் லூக் வுட்டும் இரண்டு ஓவர்களை வீசி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 25 ரன்களைக் கொடுத்தார்.

மூன்றாவதாக பந்து வீச, ஆறாவது ஓவரில் களமிறங்கிய ஜஸ்புரித் பும்ரா, 4 ஓவர்கள் வீசி, வெறும் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து, மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதற்கு அடுத்ததாக ஜெரால்டு கோட்ஸி இறுதி நான்கு ஓவர்களை வீசி, 27 ரன்களைக் கொடுத்து இரண்டு விக்கெட்டை வீழ்த்தினார். பியூஷ் சாவ்லா மூன்று ஓவர்கள் வீசி, ஒரு விக்கெட்டை மட்டும் சாய்த்தார்.

அதன்பின் களமிறங்கிய,  மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷானும் ரோஹித் ஷர்மாவும் களமிறங்கினார். ஆனால், நான்கு பந்துகள் பிடித்த நிலையில், ஒமர்ஜாயின் பந்தில் டக் அவுட்டானார். அதன்பின், நிதானித்து ஆடிய ரோஹித் சர்மா, 29 ரன்களுக்கு 43 ரன்கள் விளாசினார். இதில் 7 ஃபோர்களும் 1 சிக்ஸும் அடக்கம்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, சாய் கிஷோரிடம் எல்பிடபிள்யூ ஆனார். அதன்பின், நமன் திரும் 20 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

அதனைத்தொடர்ந்து நிதானித்து ஆடிய டேவல்டு பிரேவீஸ் 38 பந்துகளுக்கு, 46 ரன்கள் எடுத்து சர்மாவின் பந்தில் கேட்சாகி மைதானத்தை விட்டுதுரத்தப்பட்டார்.

அதன்பின் திலக் வர்மா மட்டும் 25 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் எல்லோரும் சொற்ப ரன்களே எடுத்தனர். குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, 11 ரன்கள் மட்டுமே எடுத்தபோது யாதவ் பந்தில் வெளியேறினார்.

இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபாரவெற்றிபெற்றது.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.