Sai Sudharsan Half Century: நவ்ஜோத் சிங் சித்துவுக்கு பிறகு சாய் சுதர்ஷன் செய்த சாதனை-sai sudharsan half century against south africa back to back - HT Tamil ,மட்டைப்பந்து செய்திகள்
தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Sai Sudharsan Half Century: நவ்ஜோத் சிங் சித்துவுக்கு பிறகு சாய் சுதர்ஷன் செய்த சாதனை

Sai Sudharsan Half Century: நவ்ஜோத் சிங் சித்துவுக்கு பிறகு சாய் சுதர்ஷன் செய்த சாதனை

Manigandan K T HT Tamil
Dec 19, 2023 06:55 PM IST

IND vs SA Live Score: தென்னாப்பிரிக்காவின் Gqeberha-இல் நடைபெறும் 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.

இந்திய வீரர் சாய் சுதர்ஷன்
இந்திய வீரர் சாய் சுதர்ஷன் (@SPORTYVISHAL)

இன்றைய ஆட்டத்தில் நிதானமாக விளையாடி சாய் சுதர்ஷன், 83 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். 7 ஃபோர்ஸ், 1 சிக்ஸரையும் விரட்டினார் சாய் சுதர்ஷன்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமானதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக 2வது அரை சதங்களை விளாசிய 2வது இந்திய வீரர் ஆனார் சாய் சுதர்ஷன். முதல் வீரர் நவ்ஜோத் சிங் சித்து.

தென்னாப்பிரிக்காவின் Gqeberha-இல் நடைபெறும் 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் ரிங்கு சிங் அறிமுகமானார். odi இல் இந்திய அணிக்காக முதல்முறையாக களமிறங்குகிறார் ரிங்கு சிங். இவருக்கு சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் தொப்பியை வழங்கினார்.

அடித்து ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் 4 ரன்களில் எதிர்பாராதவிதமாக ஆட்டமிழந்தார்.  அவரைத் தொடர்ந்து திலக் வர்மாவும் நடையைக் கட்டினார். எனினும், தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்ஷன் நிதானமாக செயல்பட்டு அரை சதம் பதிவு செய்தார்.

பின்னர், அவரது விக்கெட்டை வில்லியம்ஸ் எடுத்தார். பின்னர் கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். எனினும், இந்த ஜோடியை ஹென்றிக்ஸ் பிரித்தார். 

சஞ்சு சாம்சன் ஹென்றிக்ஸ் பந்துவீச்சை அடிக்க முயன்றபோது போல்டு ஆனார். 32 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து இந்தியா திணறி வருகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.