Gary Kirsten: தவறான நடத்தை, ஒழுக்கக்கேடு விஷயங்களில் ஈடுபட்ட ஷாஹீன் அப்ரிடி! பரபரப்பை ஏற்படுத்திய கேரி கிறிஸ்டன்
தவறான நடத்தை, ஒழுக்கக்கேடு போன்ற விஷயங்களில் பாகிஸ்தான் ஸ்டார் பந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி ஈடுபட்டதாக அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பல்வேறு கொந்தளிப்பான விஷயங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த மாதம் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மோசமான தோல்வியுடன் தொடரை விட்டு வெளியேறியது.
தனது முதல் லீக் போட்டியில் யுஎஸ்ஏ அணிக்கு எதிராக அதிர்ச்சியூட்டும் தோல்வியை பெற்றது. இந்த தோல்வியே லீக் சுற்றில் இருந்து பாகிஸ்தான் வெளியேற காரணமாக அமைந்தது.
அத்துடன் பரம எதிரியான இந்தியாவுக்கு எதிராகவும் குறைவான இலக்கை சேஸ் செய்யாமல் தோல்வியை தழுவியது. அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை தொடர்ந்து பாகிஸ்தான் அணி மற்றும் பாபர் அசாம் கேப்டன்சி மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
தேர்வு குழு தலைவர்கள் நீக்கம்
இந்த நிகழ்வுக்கு பின்னர் கடந்த வாரம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வு குழுவில் இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வஹாப் ரியாஸ் மற்றும் அப்துல் ரசாக் ஆகியோர் நீக்கப்பட்டனர். டி20 உலகக் கோப்பை தொடரில் மோசமான ஆட்டத்துக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட்டில் முதல் பலியாடுகளாக இவர்கள் உள்ளார்கள்.
இவர்களின் நீக்கத்துக்கு பிறகு தற்போது மற்றாரு புயல் கிளம்பியுள்ளது. கடந்த சுற்றுப்பயணங்களில் பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவு பணியாளர்களிடம் ஸ்டார் பவுலரான ஷாஹீன் அப்ரிடி தவறாக நடந்து கொண்டதாக, பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் குற்றம் சாட்டியுள்ளார்.
அப்ரிடிக்கு எதிரான நடவடிக்கை புறக்கணிப்பு
பயிற்சி ஊழியர்களிடம் அப்ரிடியின் நடத்தை பொருத்தமற்றதாக உள்ளது. இருப்பினும் "தவறான நடத்தை"யின் சரியான தன்மை வெளியிடப்படவில்லை.
சுற்றுப்பயணங்களின் போது அப்ரிடிக்கு எதிராக எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் அமல்படுத்த அணி மேலாளர்கள் புறக்கணித்தனர் என அந்நாட்டு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் அணி பயிற்சியாளரான கேரி கிறிஸ்டன் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது இது முதல் முறையல்ல. டி20 உலகக் கோப்பை தோல்வியைத் தொடர்ந்து, அணியில் "ஒற்றுமை இல்லை" என்று அவர் கூறியது சர்ச்சையை கிளப்பியது.
கிறிஸ்டன் அணியில் உள்ள உடற்தகுதி தரநிலைகளில் மிகவும் மகிழ்ச்சியடையவில்லை என்றும், "உடற்தகுதி மற்றும் ஒற்றுமைக்கு" மதிப்பளிக்க வேண்டும் என்று வீரர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் அளித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் கிறிஸ்டனின் இந்த குற்றச்சாட்டு பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மேலும் புயலை கிளப்பியுள்ளது.
கேப்டனாக நியமிக்கப்பட்ட ஷாஹீன் அப்ரிடி
கடந்த ஆண்டு மோசமான ஒரு உலகக் கோப்பையைத் தொடர்ந்து பாபர் அசாம் பதவி விலகினார். அதன் பின்னர் பாகிஸ்தானின் வெள்ளை பந்து கிரிக்கெட் அணி கேப்டனாக ஷாஹீன் அப்ரிடி நியமிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஷாஹீன் தலைமையிலான பாகிஸ்தான் அணி 4-1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் பாபர் அசாம் அணியில் சேர்க்கப்பட்டதுடன், கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.
எனவே கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பல்வேறு குழப்பங்களும், சர்ச்சைகளும் தொடர்ந்து நீடித்து வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்