Shaheen Afridi Wedding: அப்ரிடி மகளை மணக்கும் ஷாஹீன் அப்ரிடி: பிப்.3ல் நிக்காஹ்!
Shaheen Afridi marries Shahid Afridi's Daughter Ansha: ஷாஹித் அப்ரிடியின் மகள் அன்ஷா அப்ரிடியும், ஷாஹீனும் திருமணம் செய்வதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
பாகிஸ்தானின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி, அந்த அணியின் முன்னாள் கேப்டனான ஷாஹித் அப்ரிடியின் மகளை பிப்ரவரி 3 ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளார்.
6 அடி 6 அங்குல உயரம் கொண்ட ஷாஹீன் ஷா அப்ரிடி, பாகிஸ்தான் அணியின் முக்கிய அதிவேகப்பந்து வீச்சாளராக உள்ளார். அவர், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாஹித் அப்ரிடியின் மகளுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
ஷாஹித் அப்ரிடியின் மகள் அன்ஷா அப்ரிடியும், ஷாஹீனும் திருமணம் செய்வதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். தற்போது திருமண நாள் குறிக்கப்பட்டு, இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர்.
பாகிஸ்தானை சேர்ந்த தொலைக்காட்சி ஒன்றின் “ஐக் தின் ஜியோ காய் சாத்” நிகழ்ச்சியில் பேசிய 21 வயதான ஷாஹின் அப்ரிடி, ‘‘அப்ரிடியின் மகள் அன்ஷாவை திருமணம் செய்து கொள்வது தனது விருப்பம், அது என் ஆசை; அல்லாவின் ஆசியால் அது இப்போது நிறைவேறியுள்ளது’’ என்று கூறியுள்ளார். மேலும், "நான் அவளைச் சந்தித்தேன், விரைவில் அவளைச் சந்திப்பேன்," என்று முகம் சிவந்த ஷஹீன், அந்த டிவி நிகழ்ச்சியில் தன் திருமண வெட்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

|#+|
ஷாஹின் அப்ரிடி, ஏப்ரல் 2018 இல் 50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமானார். அதே ஆண்டு டிசம்பரில் அவர் தனது டெஸ்ட் வாழ்க்கையைத் தொடங்கினார்.
17 வயதான வேகப்பந்து வீச்சாளராக அறிமுகமான இவர், 90 மைல் வேகத்தில் பந்தை வீசியதை உலகமே வியந்து பார்த்தது. அவர் ஒரு ஆல்-ரவுண்டராகக் கருதப்படும் வேளையில், பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்கும் வீரராக முற்படுகிறார்.
டாபிக்ஸ்