Team India Coach: இந்திய அணிக்கு மீண்டும் பயிற்சியாளராக அழைப்பு - விருப்பம் இல்லை என்று சொன்ன கேரி கிறிஸ்டன்
மீண்டும் இந்திய அணிக்காக பயிற்சயாளராக செயல்படுவதில் விருப்பமில்லை என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளார். தற்போது உலகக் கோப்பை வெற்றியாளாரை இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.
இந்திய அணி இரண்டாவது முறை உலகக் கோப்பை வென்றபோது அணியின் பயிற்சியாளராக இருந்தவர் கேரி கிறிஸ்டன். தற்போது ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
இதையடுத்து இந்திய மகளிர் அணிக்கு பயிற்சியாளராக இருக்க அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் கேரி கிறிஸ்டன்.
இந்திய மகளிர் அணியின் தற்போதைய செயல் பயிற்சியாளராக இந்தியா அணி முன்னாள் வீரர் ஹிரிஷிகேஷ் கணித்கர் உள்ளார். இதையடுத்து மகளிர் அணிக்கான பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ மும்முரமாக இறங்கியுள்ளது. இந்தியா மகளிர் அணிக்கு பயிற்சியாளராக செயல்படுமாறு கிறிஸ்டனை அணுகியபோது அவருக்கு விருப்பமில்லை என கூறியதுடன், மறுப்பும் தெரிவித்துள்ளார்.
பயிற்யாளருக்கான ரோசில் இருந்து கிறிஸ்டன் விலகியிருப்பதால், அந்த இடத்தில் இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட்டர் சார்லோட் எட்வர்ட்ஸ் பரிந்துரை லிஸ்டில் உள்ளார்.
தற்போது கிறிஸ்டன் ஐபிஎல் தொடரில் குஜராத் அணி தலைமை பயிற்சியாளராக இருப்பதுடன், பிற டி20 லீக் தொடர்களிலும் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா போன்ற மிகப் பெரிய அணிக்கு முக்கியமான நபரை பயிற்சியாளராக நியமிப்பதற்கான பணிகளில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக கிறிஸ்டன் சரியான தேர்வாக இருக்ககூடும் என்று அவரது பெயரை டிக் அடித்தது. ஆனால் அவர் விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்திய உள்ளூர் கிரிக்கெட் வீரரான அமோல் மஜும்தார், இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக நியமிப்பதற்கான யோசனையும் பிசிசிஐயிடம் உள்ளது. ஏற்கனவே இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக இருந்த இந்திய அணி முன்னாள் வீரர் ரோமேஷ் பவார், கடந்த டிசம்பரில் தனது பயிற்சி காலம் முடிந்தவுடன் விலகினார்.
தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில், ஸ்பின் பவுலிங் பயிற்சியாளராக உள்ளார்.
எனவே சர்வதேச பயிற்சியாளர் என்றால் சார்லோட் எட்வர்ட்ஸ், உள்ளூர் பயிற்சியாளர் என்றால் அமோல் மஜும்தார் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து மகளிர் அணி முன்னாள் கேப்டனான சார்லோட் எட்வர்ட்ஸ் தலைமையில் அந்த அணி உலகக் கோப்பை வென்றுள்ளது.
இந்த ஆண்டில் முதல் முறையாக நடைபெற்ற மகளிர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்தார் சார்லோட் எட்வர்ட்ஸ். முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
இந்திய மகளிர் அணிக்கு நியமிக்கப்படும் புதிய பயிற்சியாளருக்கு 2 ஆண்டுகள் ஒப்பந்தம் வழங்கப்படும் எனவும், இந்த காலகட்டத்தில் இரண்டு பெரிய ஐசிசி தொடர்கள் இடம்பெறும் எனவும் தெரிகிறது.
மகளிர் கிரிக்கெட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2024ஆம் ஆண்டில் டி20 உலகக் கோப்பை வங்கதேசத்திலும், 2025ஆம் உலகக் கோப்பை ஒரு நாள் தொடர் இந்தியாவிலும் நடைபெறவுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்