தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Csk Vs Rcb: சிஎஸ்கே அணியில் 4 அறிமுக வீரர்கள்! கேப்டன் ஆவது ஒரு வாரம் முன்னாடியே தெரியும் - ருதுராஜ் சர்ப்ரைஸ்

CSK vs RCB: சிஎஸ்கே அணியில் 4 அறிமுக வீரர்கள்! கேப்டன் ஆவது ஒரு வாரம் முன்னாடியே தெரியும் - ருதுராஜ் சர்ப்ரைஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 22, 2024 08:00 PM IST

டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் 10 வெற்றிகள், 5 தோல்விகளை சந்தித்துள்ளார். முதல் முறையாக ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக களமிறங்கும் இவர், டாஸில் தோல்வியுள்ளார்.

டாஸ் நிகழ்வில் ருதுராஜ் கெய்க்வாட்
டாஸ் நிகழ்வில் ருதுராஜ் கெய்க்வாட்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீசனின் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. நடப்பு சீசன் என் அந்தஸ்துடன் சிஎஸ்கே அணி களமிறங்குகிறது. அத்துடன் சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகிய நிலையில், புதிய கேப்டனாக ஓபனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆர்சிபி பேட்டிங்

இதையடுத்து இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டூ பிளெசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். "முதலில் பேட்டிங் செய்வதற்கு உகந்த ஆடுகளமாக சென்னை பிட்ச் இருப்பதாக" டூ பிளெசிஸ் தெரிவித்தார். அதேபோல் ருதுராஜ், " எனக்கு கேப்டன் பொறுப்பு அளிக்கப்படுவது தொடர்பாக ஒரு வாரம் முன்பே தெரியும்" என்று சர்ப்ரைஸ் தகவலை பகிர்ந்தார்.

சிஎஸ்கே அணியில் 4 அறிமுக வீரர்கள்

ஆர்சிபிக்கு எதிரான இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணியில் 5 வீரர்கள் அறிமுகமாகிறார்கள். அதன்படி நியூசிலாந்தின் டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, முஸ்தபிசுர் ரஹ்மான், சமீர் ரிஸ்வி ஆகியோர் சிஎஸ்கேவுக்காக தங்களது முதல் போட்டியில் களமிறங்குகிறார்கள்.

இதில் மிட்செல், ரவீந்திரா, முஸ்தபிசுர் ஆகியோருடன் மகேஷ் தீக்‌ஷனா வெளிநாட்டு வீரர்களாக இருக்கிறார்கள்.

ஐபிஎல் கேப்டனாக முதல் போட்டியில் ருதுராஜ் 

இளம் ஓபனிங் பேட்ஸ்மேனான ருதுராஜ் கெய்க்வாட் இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதுவரை அவர் 15 போட்டிகளில் கேப்டனாக இருந்து 10 வெற்றி, 5 தோல்விகளை பெற்றுள்ளார்.

இதையடுத்து முதல் முறையாக ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக இன்று கேப்டனாக களமிறங்குகிறார்.

கோலி கம்பேக்

கடைசியாக ஜனவரி 17ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் விளையாடினார் கோலி. அதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடவில்லை. இதையடுத்து இரண்டு மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட் விளையாட்டில் இன்று கம்பேக் கொடுக்கிறார் கோலி

இரு அணிகளின் விவரம்

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்கியா ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சஹார், மகேஷ் தீக்‌ஷனா, துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு: டூ பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ராஜத் பட்டிதார், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அனுாஜ் ராவத், கரண் ஷர்மா, அல்சாரி ஜோசப், மயங்க டாகர், முகமது சிராஜ்

கடைசியாக 2019 சீசன் முதல் போட்டியில் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் சேப்பாக்கத்தில் வைத்து மோதின. இதன் பின்னர் தற்போது மீண்டும் முதல் போட்டியில் இன்று களமிறங்குகின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point