Sukran Ketu: எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு: சுக்கிரன் கேது சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sukran Ketu: எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு: சுக்கிரன் கேது சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

Sukran Ketu: எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு: சுக்கிரன் கேது சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

Marimuthu M HT Tamil
Sep 12, 2024 03:18 PM IST

Sukran Ketu: எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு: சுக்கிரன் கேது சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.

Sukran Ketu: எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு: சுக்கிரன் கேது சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்
Sukran Ketu: எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு: சுக்கிரன் கேது சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

சுக்கிர பகவான், காதல், செல்வம், ஆடம்பரம், திறமை ஆகியவற்றின் காரணகர்த்தாவாக இருக்கிறார். கேது பகவான், சற்று சிக்கல்களைத் தரும் கிரகம். இவர் ஒரு ராசியில் 18 மாதம் சஞ்சரிப்பார்.

ஜோதிடத்தின்படி, ஒரு கிரகம் ராசியை மாற்றும்போது, அது ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் செயல்பாடுகளையும் பாதிக்கிறது. இந்நிலையில், கேது-சுக்கிரன் சேர்க்கை பொதுமக்களுக்கு மங்களகரமானதா அல்லது அமங்கலமானதா என்ற கேள்வி மக்கள் மனதில் உள்ளது.

பண்டிட் நரேந்திர உபாத்யாயாவின் கூற்றுப்படி, சுக்கிரன் மற்றும் கேதுவின் சேர்க்கை பொதுமக்களுக்கு நல்லதல்ல. இருந்தாலும், இந்த அசுபமான கிரகங்களின் சேர்க்கையானது சிலருக்கு சில நன்மைகளை வழங்கலாம்.

இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால், திருமண வாழ்க்கையில் சிலருக்கு சிக்கல்கள் அதிகரிக்கின்றன. சிலருக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது.

உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதில் சிக்கல் ஏற்படலாம். பரஸ்பர உறவுகளில் மோதல் உண்டாகலாம். இந்த சுக்கிரன் மற்றும் கேதுவின் சேர்க்கை உறவுகளில் குழப்பத்தை உருவாக்குகிறது. சுக்கிரன்-கேது சேர்க்கை திருமணத்தில் சிரமங்களையும் தாமதங்களையும் கொண்டு வரலாம்.

சுக்கிர பகவான் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி பிற்பகல் வரை கன்னி ராசியில் இருப்பார். அதன் பிறகு மதியம் 02.04 மணிக்கு துலாம் ராசிக்குள் நுழைவார். இந்த வழியில், கன்னி ராசியில் உருவாகும் சுக்கிரன்-கேது சேர்க்கை முடிவடைகிறது. சுக்கிரன் கேது சேர்க்கையினால் அதிர்ஷ்டம்பெறப்போகும் நன்மைகள் குறித்துப் பார்ப்போம்.

கடகம்:

சுக்கிரன் மற்றும் கேதுவின் சேர்க்கை, கடக ராசியினருக்குப் பல நன்மைகளைத் தருகிறது. இந்த காலத்தில் நிறையப் பணிகளை கடக ராசியினர் செய்துமுடிப்பர். வாழ்வில் இருந்த தடைகள், பிரச்னைகள் குறையும். சொந்தபந்தங்களில் உங்களுக்கு குறைந்த ஆதரவு மீண்டும் அதிகரிக்கும். கெட்டபெயரைச் சந்தித்தவர்களுக்கு நம்பிக்கையான நட்புகள் கைகொடுக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசியினருக்கு சுக்கிரன் கேது சேர்க்கை நன்மைதரும். இந்த காலத்தில் குழந்தையில்லாத தம்பதியினருக்கு குழந்தை கிடைக்கலாம். படிப்பில் இருந்த மந்தத்தன்மை நீங்கி, கல்வியில் மாணவர்களுக்கு ஆர்வம் உண்டாகும். வெகுநாட்களாக தொழிலில் இருந்து வந்த சுணக்கம் நீங்கி, கணிசமான பணவரவு கிடைக்கும். கலைசார்ந்த செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு நிச்சயம் வெற்றிகிட்டும்.

விருச்சிகம்:

கேது -சுக்கிரன் சேர்க்கையால், விருச்சிக ராசியினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெகுநாட்களாக செட் ஆகாமல் இருந்த வேலை சரியாகப் பொருந்திப்போகும். மேல் அதிகாரிகளின் தொல்லைகள் குறையலாம். கடின உழைப்புக்குப் பயன் கிடைக்கும். நிறைய நாட்களாக கிடைக்காமல் இருந்த வாய்ப்புகள் கைவசம் கிடைத்து தொழிலில் முன்னேறுவீர்கள்.

பழைய நண்பர்கள் மூலம் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பணியில் இடமாற்றம் மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கலாம்.

இதைத்தொடர்ந்து கேது பகவான், அடுத்த ஆண்டு 18.05.2025-ல் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். கேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சரிப்பதால், அதன் விளைவு 12 ராசிகளிலும் எதிரொலித்தாலும் சிம்ம ராசியினருக்குப் பாதிப்பு அதிகமாகவே இருக்கும்.

பொறுப்பு துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்