“பெண் படிக்கிறார், வழிநடத்துகிறார்” – பெண் கல்விக்காக கல்வியும் சட்ட ஆதரவும் இணையும் கலை விழா!-an art festival that combines education and legal support for women education - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  “பெண் படிக்கிறார், வழிநடத்துகிறார்” – பெண் கல்விக்காக கல்வியும் சட்ட ஆதரவும் இணையும் கலை விழா!

“பெண் படிக்கிறார், வழிநடத்துகிறார்” – பெண் கல்விக்காக கல்வியும் சட்ட ஆதரவும் இணையும் கலை விழா!

Manigandan K T HT Tamil
Sep 11, 2024 01:27 PM IST

சென்னை, இலயோலா கல்லூரியில் பெண் குழந்தைக்கான கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும்விதமாக; பள்ளிக்குழந்தைகளின் ஓவியங்கள், புராணமறுப்பு விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்வுகள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த கலை விழா

“பெண் படிக்கிறார், பெண் வழிநடத்துகிறார்” – பெண் கல்விக்காக கல்வியும் சட்ட ஆதரவும் இணையும் கலை விழா!
“பெண் படிக்கிறார், பெண் வழிநடத்துகிறார்” – பெண் கல்விக்காக கல்வியும் சட்ட ஆதரவும் இணையும் கலை விழா!

இங்கே பெண் குழந்தைகள் வரைந்து காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஓவியங்கள் அவர்களின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. பெண் கல்வி பலமுனை ஆற்றலைக்கொண்டது. நம் சமூகம் பெண் குழந்தைகள் தொடர் கல்வி பெறுவதை எதிர்கால சந்ததியினருக்காக உறுதி செய்ய வேண்டும்.

துல்லியமாக வெளிப்படுத்திய ஓவியங்கள்

க்ரை அமைப்பு பணிசெய்யும் தமிழ் நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலிருந்து அரசு பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகள் வரைந்த 110 ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அவ்வோவியங்கள் குழந்தை தொழில், வளரிளம் பருவ கர்ப்பம், ஆண்-பெண் பாகுபாடு மற்றும் பெண் குழந்தைகளின் தொடர் கல்வியை பாதிக்கும் காரணிகளை துல்லியமாக வெளிப்படுத்தின.

இலயோல கல்லூரியின் முதல்வர் ரெவெரண்ட் முனைவர் லூயிஸ் ஆரோக்கியராஜ் வாழ்த்துரையில், ‘பெண் கல்வியை உறுதி செய்வதில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சமூகத்தை மேம்படுத்தும் உன்னதமான கருவி கல்வியே. இந்த கலைவிழா ஒவ்வொரு பெண்குழந்தைக்குள் இருக்கும் உயர்ந்த ஆற்றலை வெளிப்படுத்துகின்றது. இச்சமூகம் பெண் கல்வியை உறுதி செய்தால், குடும்பம், சமூகம் மற்றும் வரும் தலைமுறையினரை மேம்படுத்தும்’ என்று பேசினார்.

பெண் குழந்தைகள் கல்வியே நாட்டின் வளர்ச்சி

க்ரை அமைப்பின் கருத்தாளர் திருமிகு மனிஷா ரபா இக்கலை விழா நாடுதழுவிய அளவில் பெண் கல்வியின் முக்கியத்துவம் சார்ந்த பரப்புரை, “ பூரி பதாய், தேஷ் கி பலாய்”- பெண் குழந்தைகள் கல்வியே நாட்டின் வளர்ச்சி’ எனும் தலைப்பில் பெண் குழந்தைகள் 18 வயது முடியும்வரை தொடர்கல்வியை மேற்கொள்ள வேண்டும் என்பதை முதன்மைப்படுத்தியது. மக்கள் மத்தியிலும், சமூகத்திலும் நிலவும் எண்ணங்களையும், பிற்போக்கு தனத்தையும் மாற்றி பெண் குழந்தைகள் பள்ளியில் இருக்க வேண்டும். இந்த பரப்புரையின் மூலம் பெண் குழந்தைகள் ஆற்றல் பெற்று சமூக மாற்றத்தைக்கொணரவேண்டும் என்பதே!

இந்த நாள் முழுவதும், இசை, நடணம், விளையாட்டு மற்றும் இலயோலா கல்லூரி மாணவர்கள் பெண் கல்வியை முன்வைத்து அரங்கேற்றிய நாடகம் என கல்வி விழாவாக அமைந்தது. குறிப்பாக, புரான-கட்டுக்கதை மறுப்பு விளையாட்டுகள் மேலும், சமூகம் பெண்களுடன் உரையாடல் நடத்த வேண்டும் என்பதை முன்வைத்த ‘சிவப்பு நாடா கட்டுதல்’ என பெண் கல்வி மற்றும் பாலின நிகர்நிலை சார்ந்த விழாவாக அமைந்தது.

இந்நிகழ்வு பங்கேற்பாளர்கள் மத்தியில் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை மேம்படுத்தும் விதமாக அமைந்தது. இதுபோன்ற தொடர் நிகழ்வுகள் பெண் கல்வியை சார்ந்த நேர்மறை சிந்தனையை தூண்டும் என க்ரை அமைப்பு எதிர்பார்க்கின்றது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.