உக்கிரமாக இருந்த லிங்கம்.. குளத்திலிருந்து வெளியே வந்த அம்மன்.. பஞ்சத்தை போக்கிய சத்தியவாகீஸ்வரர்..!
Sathyavageeswara: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கரமனை அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில்.
Sathyavageeswara: உலகம் முழுவதும் கோயில் கொண்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வரக்கூடியவர் சிவபெருமான். உலகத்தின் கடவுளாக சிவபெருமான் விளங்கி வருவதாக புராணங்களில் கூறப்படுகின்றனர். எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்ட அந்த காலத்திலிருந்து இன்றுவரை வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மண்ணுக்காக மன்னர்கள் மிகப்பெரிய போர்களை செய்து வந்தாலும் சிவபெருமானை வணங்குவதில் ஒற்றுமையாக இருந்து வந்துள்ளனர். அனைத்து மன்னர்களும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர்.
தற்போது நாம் காணக்கூடிய மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றது அந்த மன்னர்கள் தான். ஒவ்வொரு ஆட்சி காலத்திலும் ஒவ்வொரு மன்னரும் தங்களது வரலாற்றுக் குறியீடாக கோயில்களை தான் பயன்படுத்தி உள்ளனர்.
அடுத்தடுத்து வரக்கூடிய மன்னர்கள் தங்களுக்கு முன்னால் இருந்த முன்னோடிகள் கட்டிய கோயில்களை விட பிரம்மாண்டமாக கட்ட வேண்டும் என எண்ணி பல கோயில்களை பல மன்னர்கள் கட்டி வைத்து சென்றுள்ளனர். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்கள் இந்தியா முழுவதும் இருந்தாலும் தமிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் இருக்கின்றன.
ஒருபுறம் சோழர்கள் மறுபுறம் பாண்டியர்கள் என மாறி மாறி கோயில்களை கட்டிச் சென்றுள்ளனர். இன்னொரு பக்கம் பல்லவர்கள் சிவபெருமானை வணங்கி கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். குறிப்பாக சோழர்களின் மிகப்பெரிய மன்னனாக திகழ்ந்து வந்த ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இன்று வரை வரலாற்றின் சரித்திர குறியீடாகவும் தொழில்நுட்பத்திற்கு சவால் விடும் களஞ்சியமாகவும் திகழ்ந்து வருகிறது.
இதுபோல எத்தனையோ கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இறந்து வருகின்றன. அந்த வரிசையில் இருக்கக்கூடிய சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கரமனை அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில்.
தல சிறப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சி என்ற ஊரில் சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. அந்தக் கோயிலுக்கும் திருவனந்தபுரத்தில் தற்போது இருக்கக்கூடிய சத்தியவாகீஸ்வரர் திருக்கோயிலுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு கோயில்களிலும் சமகாலத்தில் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
கால்நடைகளின் நலனுக்காக இந்த கோயிலில் இருக்கக்கூடிய நந்தி பெருமானுக்கு தைப்பூசத் திருநாளில் மாகாப்பு நடத்தப்படுகிறது. இவ்வாறு செய்யும் பட்சத்தில் நமது வீட்டில் இருக்கக்கூடிய கால்நடைகள் நோயில்லாமல் நன்றாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
தல வரலாறு
தற்போது கேரள மாநிலத்தோடு இருக்கக்கூடிய திருவனந்தபுரம் அந்த காலத்தில் அனந்தன் காடு என அழைக்கப்பட்டுள்ளது. அங்கு இருக்கக்கூடிய ஆற்றங்கரையில் கர மகரிஷி சிவலிங்கம் செய்து அதனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்துள்ளார். அதன் பிறகு அந்த ஆற்றுக்கு மகரிஷியின் பெயர் வைக்கப்பட்டு கரமனை ஆறு என அழைக்கப்பட்டது
அதற்குப் பிறகு அங்கு இருந்த லிங்கத்திற்கு அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்து தொடர்ந்து வழிபட்டு வந்துள்ளார். ஒரு நாள் அந்த ஆற்றில் தண்ணீர் வற்றி ஊரில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. திடீர்னு ஒரு நாள் சிவலிங்கத்தை வழிபடும் அர்ச்சகரின் கனவில் அசரீரி குரல் ஒன்று செய்தி ஒன்றை கூறி சென்றுள்ளது.
தற்போது நீங்கள் வழிபட்டுக் கொண்டிருக்கும் சிவலிங்கம் மிகவும் உக்கிரத்துடன் இருக்கின்றது. அருகில் பார்வதி தேவியின் சிலையை வைத்த பிரதிஷ்டை செய்தால் நிவர்த்தி கிடைக்கும் என கேட்டுள்ளது. மேலும் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் இருக்கக்கூடிய பொற்றாமரைக் குளத்தில் இந்த அம்மனின் சிலை மூழ்கிக் கிடக்கிறது அதனை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என அந்த அசரீரி கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த அர்ச்சகர் மன்னரிடம் தகவலை தெரிவித்துள்ளார். அதன் பின்னர் மன்னனின் உதவியோடு மதுரை மீனாட்சி அம்மன் போற்றாமரை குலத்தில் மூழ்கிக் கிடந்த அம்பாளின் சிலை எடுக்கப்பட்டு வந்து லிங்கத்தின் அருகே வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதுவே மீனாட்சி அம்மனின் முதல் சிலையாகவும் இருக்கலாம் எனவும் ஒரு கருத்து இருந்து வருகிறது. அதன் பின்னர் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி அந்த ஊரின் பஞ்சம் நீங்கியது.