தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: அர்ஜுனன் எய்த பிறை அம்பு.. உளி படாத சிவலிங்கம்.. தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்

HT Yatra: அர்ஜுனன் எய்த பிறை அம்பு.. உளி படாத சிவலிங்கம்.. தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்

Suriyakumar Jayabalan HT Tamil
May 25, 2024 06:30 AM IST

HT Yatra: எத்தனையோ கோயில்கள் சிறப்புகளை தன் வசம் வைத்துக்கொண்டு கம்பீரமாக நின்று வருகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் சேலம் மாவட்டத்தில் உள்ள பேளூர் அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்.

அர்ஜுனன் எய்த பிறை அம்பு.. உளி படாத சிவலிங்கம்.. தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்
அர்ஜுனன் எய்த பிறை அம்பு.. உளி படாத சிவலிங்கம்.. தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்

நாட்டிற்காக பல மன்னர்கள் போர் செய்து வந்தாலும் அனைத்து மன்னர்களுக்கும் பிரதான கடவுளாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார். இந்தியாவில் சிவபெருமானுக்கென மிகப் பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. திரும்பும் இடமெல்லாம் சிவபெருமான் கோயில்கள் இருந்து வருகின்றன.

குறிப்பாக தமிழ்நாட்டில் அனைத்து திசையிலும் சிவபெருமான் கோயில்கள் கட்டாயம் இருக்கும். வரலாறு தெரியாத எத்தனையோ கோயில்கள் தற்போது கம்பீரமாக இருந்து வருகின்றன. தோழர்களில் மிகப்பெரிய ராஜாவாக விளங்கி வந்த ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் இன்று வரை வரலாற்றுச் சான்றாக திகழ்ந்து வருகின்றது.

இதுபோல எத்தனையோ கோயில்கள் சிறப்புகளை தன் வசம் வைத்துக்கொண்டு கம்பீரமாக நின்று வருகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் சேலம் மாவட்டத்தில் உள்ள பேளூர் அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்.

தல சிறப்பு

இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் உளி படாத லிங்கமாக விளங்கி வருகிறார். சித்திரை மாதத்தில் சுவாமியின் மீது சூரிய ஒளி படுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. முனிவர்களில் சிறப்பாக விளங்கிய வசிஷ்ட மாமுனி வேள்வி நடத்திய கோயிலாக விளங்கி வருகிறது.

ஒரே கல்லில் செய்யப்பட்ட குதிரை வாகனம் இந்த கோயிலில் உள்ளது. இந்த கோயிலில் இருக்கக்கூடிய யாழியின் வாய்க்குள் உருண்டைகள் உருவது மிகவும் சிறப்பாகும். குறிப்பாக வன்னி மரத்தடியில் சனீஸ்வரன் காட்சி கொடுப்பது மேலும் சிறப்பாகும்.

இந்த கோயிலில் மா பலா இலுப்பை ஆசிய மூன்று மரங்களும் ஒரே மரமாக இருந்து வருகிறது. தான்தோன்றீஸ்வரர் வழிபாட்டிற்காக வசிஷ்ட முனிவர் இங்கு பலா மரத்தை உண்டாக்கினார் என்பது தலபுராணமாகும்.

சிவபெருமானை வழிபடுவதற்காகவே வசிஷ்ட மாமுனிவர் இங்கு தங்கியுள்ளார். அவர் தியாகம் செய்த பூமியில் இருக்கின்ற மண்ணே திருக்கோயிலில் திருநீறாக வழங்கப்பட்டு வருகிறது. வசிஷ்ட மாமுனிவரின் யாக சாலையில் இருக்கக்கூடிய விபூதி உடலில் பட்டால் நமது வாழ்வில் செல்வம் பொங்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

தல வரலாறு

பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் தமிழ்நாட்டில் தீர்த்த யாத்திரைக்காக வந்துள்ளார். அப்போது தீர்த்த மலையை நோக்கிச் சென்றுள்ளார். சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்டவர் அர்ஜுனன். அதனால் மலையில் சிவ பூஜை செய்வதற்காக உனது பானத்தை இங்கு செலுத்து என திருமால் கூறியுள்ளார்.

சிவபெருமானை நினைத்துக் கொண்டு அர்ஜுனன் பிறை வடிவ பானத்தை மலை அடிவாரத்தில் செலுத்தியுள்ளார். இதன் மூலம் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் கங்கை நதி போல அதன் பத்தில் ஒரு பங்கு அம்பு பாய்ந்த இடத்திலிருந்து பெருகுமாறு வரம் அளித்துள்ளார்.

அதிலிருந்து வெளிப்பட்ட நீர் வெண்மை பிரபாகமாக இருந்துள்ளது. அந்த நதியை தற்போது வெள்ளாறு என பெயர் பெற்று உள்ளது. இங்கு இருக்கக்கூடிய சிவபெருமான் ஒளிபடாத லிங்கமாக காட்சி கொடுக்கின்றார். அதாவது சுயம்பு லிங்கமாக அருள்பாளித்து வருகிறார். அதனால் இவர் தான்தோன்றீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel