காசிக்குச் சென்ற மன்னன்.. வில்வ வனத்தில் அமர்ந்த சிவபெருமான்.. தங்கிய இடத்தில் காசிவிஸ்வநாதர்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  காசிக்குச் சென்ற மன்னன்.. வில்வ வனத்தில் அமர்ந்த சிவபெருமான்.. தங்கிய இடத்தில் காசிவிஸ்வநாதர்

காசிக்குச் சென்ற மன்னன்.. வில்வ வனத்தில் அமர்ந்த சிவபெருமான்.. தங்கிய இடத்தில் காசிவிஸ்வநாதர்

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 04, 2024 06:00 AM IST

Kasi Viswanathar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில். இந்த கோயிலில் சிவபெருமான் காசிவிஸ்வநாதர் எனவும் தாயார் விசாலாட்சி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

காசிக்குச் சென்ற மன்னன்.. வில்வ வனத்தில் அமர்ந்த சிவபெருமான்.. தங்கிய இடத்தில் காசிவிஸ்வநாதர்
காசிக்குச் சென்ற மன்னன்.. வில்வ வனத்தில் அமர்ந்த சிவபெருமான்.. தங்கிய இடத்தில் காசிவிஸ்வநாதர்

தற்போது பல நாடுகளில் பல மன்னர்களால் கட்டப்பட்ட கோவில்கள் இன்று வரை காணப்படுகின்றன. மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது கலை நயம் மற்றும் சிவபெருமான் மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.

பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை கம்பீரமாக வானம் முட்டும் அளவிற்கு காணப்படுகின்றன. சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சில கோயில்கள் எப்படி கட்டினார்கள் என இன்றும் ஆராய்ச்சியாளர்கள் வியந்து வருகின்றனர்.

மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் திரும்பும் திசை எல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. இன்று வரை ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தும் எத்தனையோ கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அதில் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இன்று வரை கட்டுமானத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில். இந்த கோயிலில் சிவபெருமான் காசிவிஸ்வநாதர் எனவும் தாயார் விசாலாட்சி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

தல சிறப்பு

சிவபெருமான் காசியில் இருந்து எங்கு வந்து தங்கிய இடம் என்கின்ற காரணத்தினால் சிவன் காசி என்று இந்த இடம் அழைக்கப்பட்டது. அதன் பிறகு மருவி இந்த ஊர் சிவகாசி என அழைக்கப்பட்டது. எந்தப் பற்றும் இருக்கக் கூடாது ஆசையை துறக்க வேண்டும் என்பதற்காகவே பக்தர்கள் காசிக்குச் செல்கின்றனர். வெகு தூரம் செல்ல முடியாமல் தவிக்கும் பக்தர்களுக்கு இந்த கோயிலில் வந்து வழிபட்டால் காசிக்கு சென்ற புண்ணியம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

தல வரலாறு

அரிகேசரி பரங்குச மன்னன் என்பவர் தென்காசியில் சிவபெருமானுக்கு கோயில் ஒன்றை கட்டினார். அந்த கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக காசியில் இருந்து சிவலிங்கம் ஒன்றை எடுத்து வர நினைத்தார். அதனால் தனது மனைவியோடு அவர் காசைக்கு புறப்பட்டு சென்றார். காசிக்குச் சென்ற மன்னன் தனது மனைவியோடு கங்கை நீரில் புனித நீராடி பசுமீது லிங்கத்தை ஒன்றை ஏற்றுக்கொண்டு தென்காசி நோக்கி வந்தார்.

பல நாள் பயணம் செய்த காரணத்தினால் தற்போது இருக்கக்கூடிய சிவகாசியில் மன்னன், மனைவி, பசு, லிங்கம் அனைவரும் தங்கிவிட்டனர். அப்போது இந்த இடம் வில்வ வனக்காடாக இருந்துள்ளது. மறுநாள் எழுந்து புறப்படும் வேளையில் மன்னனின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. லிங்கத்தை சுமந்து வந்த பசுவும் மன்னனோடு வர மறுத்தது.

இதனால் சிவலிங்கத்தை தான் கட்டிய கோயிலுக்கு எடுத்துச் செல்ல முடியாது என மன்னன் புரிந்து கொண்டார். இதனால் காசியில் இருந்து எடுத்து வந்து சிவலிங்கத்தை மன்னன் அதே இடத்தில் வைத்து பிரதிஷ்டை செய்தார். காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட காரணத்தினால் காசி விஸ்வநாதர் பெயரால் இந்த சுவாமிக்கு விஸ்வநாதர் என்று திருநாமம் கொடுக்கப்பட்டது.

அரிகேசரி பராங்குச மன்னனுக்கு பிறகு வந்த பாண்டிய மன்னர்கள் இந்த கோயிலில் மண்டபம், தீர்த்தம், சுற்றுப்புற சுவர், ரத வீதிகள், என அனைத்தையும் அமைத்துக் கொடுத்தனர். பதினாறாம் நூற்றாண்டில் இந்த கோயில் நிறைவு பெற்றதாக தகவல்கள் மூலம் அறியப்பட்டுள்ளது.

 

Whats_app_banner