திருமண பாக்கியம் வேண்டிய மண்டோதரி.. ராவணனை கைகாட்டிய சிவபெருமான்.. ஆசி வழங்கிய அம்பலவாணர்
Ambalavanar: சிறப்பு மிகுந்த வரலாற்று களஞ்சியமாக திகழ்ந்து வரக்கூடிய கோயில்கள் எத்தனையோ நமது நாட்டில் இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முடுக்கன்குளம் அருள்மிகு அம்பலவாணர் திருக்கோயில்.
Ambalavanar: நமது இந்தியாவில் எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன.
உலகம் முழுவதும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல கோயில்களை மன்னர்கள் கட்டி வைத்து சென்றுள்ளனர். அதுபோல இந்தியாவில் திரும்பும் திசை எல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் உண்டு. மன்னர்கள் மண்ணுக்காக போரிட்டு வந்தாலும் அனைத்து மன்னர்களும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர்.
சிவபெருமானுக்கு வழிபாடு செய்வது மட்டுமல்லாது தங்களது கலைநயத்தை அனைத்தையும் உள்ளடக்கி சிவபெருமானை மூலவராக வைத்து மிகப்பெரிய கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு பிரம்மாண்ட கோயில்கள் காணப்படுகின்றன.
குலதெய்வமாக வணங்கப்பட்ட சிவபெருமானுக்கு வானுயர்ந்த கோயில்களை மன்னர்கள் கட்டி வைத்து சென்றுள்ளனர். சில கோயில்களின் கட்டுமானங்கள் இன்று வரை ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பாக இருந்து வருகிறது. மிகப்பெரிய சோழ மன்னனாக விளங்கி வந்த ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இன்றுவரை பிரம்மாண்டத்தின் உச்சமாக இருந்து வருகிறது.
சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் யாரால் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. திருவாரூரில் இருக்கக்கூடிய தியாகராஜர் கோயில் இன்று வரை எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு மிகவும் பிரம்மாண்டமான கோயிலாக அது திகழ்ந்து வருகிறது.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த வரலாற்று களஞ்சியமாக திகழ்ந்து வரக்கூடிய கோயில்கள் எத்தனையோ நமது நாட்டில் இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முடுக்கன்குளம் அருள்மிகு அம்பலவாணர் திருக்கோயில்.
தல சிறப்பு
இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் அம்பலவாணர் எனவும் தாயார் சிவகாம சுந்தரி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர். கோயிலின் தீர்த்தமாக சிவகாமி புஷ்கரணி திகழ்ந்து வருகிறது.
குறிப்பாக மகா சிவராத்திரி திருநாள் இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது மேலும் மாசு மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி திருநாளில் சூரிய பகவானின் ஒளியானது சுவாமி மீது படுவது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. பாண்டியர் கால கட்டிடக்கலை இந்த கோயிலில் தெரிகின்றது. இது பாண்டியர்களால் கட்டப்பட்டு இருக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எதிரிகளால் ஏற்பட்டு வரும் சிக்கல்கள் அனைத்தும் இங்கு இருக்கக்கூடிய சிவபெருமானை வழிபட்டால் நிவர்த்தி அடையும் என நம்பப்படுகிறது. அதனால் பல அரசியல்வாதிகள் இங்கு வந்து வழிபாடுகள் நடத்தி விட்டு செல்கின்றனர்.
கல்யாண விநாயகர்
கோயிலின் வாசலிலேயே கல்யாண விநாயகர் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார். வடக்கு முகமாக அமர்ந்து வரம் வேண்டி வழிபடுபவர்களுக்கு கல்யாண வரம் கொடுப்பதாக நம்பப்பட்டு வருகிறது. ராவணனின் மனைவியான மண்டோதரி திருமணம் நடக்க வேண்டி வழிபட்ட தலமாக இது கருதப்பட்டு வருகிறது.
திருமண வரம் வேண்டி வழிபாடு நடத்தக்கூடிய சிறப்பு மிகுந்த கோயில்களில் இதுவும் ஒன்றாகும். சிவகாமி புஷ்கரணி தீர்த்தம் மட்டுமல்லாது கோயிலுக்குள் சதுர வடிவிலான கிணறு ஒன்று காணப்படுகிறது.
மாசி மாத சிவராத்திரி திருநாளில் சூரிய பகவான் தனது ஒளியை மூலவர் மீது செலுத்தி வழிபாடு நடத்தி வருகிறார். அன்றைய தினம் சூரிய பகவானை நேரடியாக வந்து இறைவனை வழிபடுவதாக மக்கள் கூறுகின்றனர்.
தல வரலாறு
மண்டோதரி இளம் பெண்ணாக இருந்த பொழுது தனக்கு ஏற்பட்டிருந்த திருமண தடை விலக வேண்டி அசுரக் குருவான சுக்ராச்சாரியரை சென்று விமோசனம் கேட்டார். அதற்கு தென்னாட்டிலுள்ள முடுக்கன்குளம் பகுதியில் அம்பலவாணர் என்ற பெயரில் சிவபெருமான் காட்சி கொடுத்த வருகிறார். அவரை வழிபட்டால் உனக்கு கேட்கும் வரம் கிடைக்கும் என கூறியுள்ளார் அசுர குரு.
உடனே மண்டோதரி அந்த கோவிலுக்கு சென்று தற்போது இருக்கக்கூடிய சிவகாம புஷ்கரணி தீர்த்தத்தில் குளித்துவிட்டு அம்பலவாணரான சிவபெருமானை வழிபட்டுள்ளார். அதற்குப் பிறகு சிவபெருமான் தனது தீவிர பக்தனான ராவணனை திருமணம் செய்யும் பாக்கியத்தை மண்டோதரிக்கு கொடுத்தார். இந்த கோயிலில் பாண்டியர் காலத்து சின்னமான மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சிலைகள் காணப்படுகின்றன.