எதிர்ப்புகளை கடந்து வந்த பக்தர்.. ஓய்வெடுத்த இடத்தில் காட்சி தந்த சிவபெருமான்.. அருள்பாலித்த ஏகாம்பரேஸ்வரர்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  எதிர்ப்புகளை கடந்து வந்த பக்தர்.. ஓய்வெடுத்த இடத்தில் காட்சி தந்த சிவபெருமான்.. அருள்பாலித்த ஏகாம்பரேஸ்வரர்

எதிர்ப்புகளை கடந்து வந்த பக்தர்.. ஓய்வெடுத்த இடத்தில் காட்சி தந்த சிவபெருமான்.. அருள்பாலித்த ஏகாம்பரேஸ்வரர்

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 13, 2024 06:00 AM IST

Ekambareswarar: எத்தனையோ கோயில்கள் திரும்பும் திசை எல்லாம் தமிழ்நாட்டில் நாம் காண முடியும். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் சென்னை சவுகார்பேட்டை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்.

எதிர்ப்புகளை கடந்து வந்த பக்தர்.. ஓய்வெடுத்த இடத்தில் காட்சி தந்த சிவபெருமான்.. அருள்பாலித்த ஏகாம்பரேஸ்வரர்
எதிர்ப்புகளை கடந்து வந்த பக்தர்.. ஓய்வெடுத்த இடத்தில் காட்சி தந்த சிவபெருமான்.. அருள்பாலித்த ஏகாம்பரேஸ்வரர்

தனக்கென உருவம் இல்லாமல் லிங்கத்திருமேனியாக உலகமெங்கும் சிவபெருமான் காட்சி கொடுத்து வருகிறார். எளிய மக்கள் தொடங்கி பொருளாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தில் இருப்பவர்கள் என அனைவரும் சிவபெருமானின் பக்தர்களாக திகழ்ந்த வருகின்றனர்.

மண்ணுக்காக மன்னர்கள் ஒருபுறம் போரிட்டு வந்தாலும் மறுபுறம் சிவபெருமானை குலதெய்வமாக அனைவரும் வணங்கி வந்துள்ளனர். சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள் என அனைவரும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி உலகமெங்கும் சிவபெருமானுக்கு கோயில் எழுப்பி வழிபாடுகள் நடத்தி வந்துள்ளனர்.

சோழர்கள் பாண்டியர்கள் இருவரும் மிகப்பெரிய எதிரிகளாக இருந்தாலும், இருவருக்குமே குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார். இந்தியாவின் தெற்கு பகுதியை ஆண்ட பல மன்னர்கள் கடல் கடந்தும் பல போர்களை செய்து நிலத்தை வென்றெடுத்தனர்.

தாங்கள் வென்ற அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு கோயில்கள் எழுப்பி வழிபாடுகளை செய்து வந்துள்ளனர். அதுதான் தற்போது உலகமெங்கும் சிவபெருமானுக்கு கோயில்கள் இருப்பதற்கான காரணம். புலம்பெயர்ந்து தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற மக்களும் சிவபெருமானுக்கு கோயில் எழுப்பி வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இதுபோன்ற எத்தனையோ கோயில்கள் திரும்பும் திசை எல்லாம் தமிழ்நாட்டில் நாம் காண முடியும். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் சென்னை சவுகார்பேட்டை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்.

தல வரலாறு

இந்த கோயிலில் மூலவரான சிவபெருமான் ஏகாம்பரேஸ்வரர் எனவும் தாயார் காமாட்சியம்மன் என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர். இந்த கோயிலின் தல விருட்சமாக மாமரம் விளங்கி வருகிறது. தீர்த்தமாக கம்பா நதி திகழ்ந்து வருகிறது.

இந்த கோயிலில் இருக்கக்கூடிய காமாட்சி அம்மன் ஆவுடையார் மீது நின்ற கோழத்தில் காட்சி கொடுத்தார் அது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர்த்துவதற்காகவே அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி காட்சி கொடுப்பார்கள். ஆவுடையார் மீது சிவபெருமான் காட்சி கொடுப்பது போலவே அம்பாளும் காட்சி கொடுப்பது அனைவரும் சமம் என்பது உணர்த்துவது போல இருக்கின்றது. அம்பாளின் பாதத்தில் முன்பு ஸ்ரீசக்கரம் காணப்படுகிறது.

இந்த கோயிலில் வந்து வழிபட்டால் திருமண வாழ்க்கை ஒற்றுமையாக இருக்கும் எனவும், சனி தோஷம் விலகும் எனவும் கூறப்படுகிறது. சனிதோஷ நாளில் இந்த கோயிலில் வந்து வழிபட்டால் சனி தோஷம் விலகும் என்பதை ஐதீகமாக இருந்து வருகிறது.

தல வரலாறு

பல ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் இருக்கக்கூடிய ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமானை தீவிர பக்தர் ஒருவர் வழிபட்டு வந்துள்ளார். பிரதோஷத்த திருநாளில் கட்டாயம் இந்த கோயிலுக்கு வந்து வழிபடுவதை அந்த பக்தர் தொடர்ச்சியாக வைத்து வந்துள்ளார்.

ஒருமுறை பிரதோஷத்திருநாளில் ஏகாம்பரேஸ்வரரை வழிபாடு செய்வதற்காக பக்தர் கிளம்பியுள்ளார். அப்போது அவருக்கு பல தடைகள் ஏற்பட்டுள்ளன. வேலை செய்து கொண்டு இருந்த இடத்தில் பணியில் ஏற்பட்ட சிறிய சிக்கல் காரணமாக அந்த பக்தரின் முதலாளி அவரை கோயிலுக்கு அனுப்பவில்லை.

அதையும் மீறி அந்த பக்தர் கோயிலுக்கு சென்றுள்ளார். சென்று கொண்டிருந்த வழியில் திடீரென சோர்வடைந்து ஒரு இடத்தில் அமர்ந்து சற்று நேரம் ஓய்வெடுத்துள்ளார். அப்போது சிவபெருமான் பார்வதி தேவியோடு சேர்ந்து காட்சி கொடுத்து இனி தன்னை வழிபட நெடுந்தோறும் நடக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார். 

மேலும் தற்போது நீ ஓய்வெடுக்கும் இடத்திலேயே நான் சுயம்புவாக காட்சி கொடுக்கின்றேன் இங்கேயே நீ வழிபாடு செய்யலாம் என கூறினார். அதன் பின்னர் சுயம்புலிங்கமாக காட்சி கொடுத்த சிவபெருமானுக்கு அந்த இடத்திலேயே கோயில் கட்டப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது. அதுதான் தற்போது சவுகார்பேட்டையில் இருக்கக்கூடிய அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner