வறுமையை கொடுத்த சிவபெருமான்.. அன்னதானத்தை நிறுத்தாத மாறனார்.. காட்சி கொடுத்த ராஜேந்திர சோழீஸ்வரர்
Rajendra Choeeswarar: சிறப்பு மிகுந்த கோயில்களின் வரிசையில் இருப்பது தான் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் ராஜேந்திர சோழீஸ்வரர் எனவும் தாயார் ஞானாம்பிகை என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை கோயில் கொண்டு பக்தர்களை அருள்பாளித்து வருகிறார். உலக நாடுகள் முழுவதும் சிவபெருமானுக்கு கோயில்கள் இருந்து வருகின்றன.
உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தொழில்நுட்பங்களுக்கும் ஆச்சரியம் கொடுக்கும்படி சிவபெருமானுக்கு கோயில் இருப்பது இன்று வரை வியப்பாகவே இருந்து வருகிறது. அந்த காலத்தில் ஆண்டு வந்த மன்னர்கள் போரிட்டு அந்தந்த மண்ணை தன் வசமாக்கும் பொழுது தனது குல தெய்வமாக திகழ்ந்து வந்த சிவபெருமானை வணங்கி அந்த இடத்தில் கோயில் கட்டி வைத்து சென்றுள்ளனர்.
குறிப்பாக இந்தியாவில் இருக்கக்கூடியவர்கள் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து சிவபெருமானின் அடியார்களாக அன்று முதல் இன்று வரை பலர் வாழ்ந்து வருகின்றனர்.
மண்ணுக்காக மன்னர்கள் ஒரு பக்கம் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். அந்த கோயில்கள் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன.
மனித உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது இருக்கக்கூடிய அறிவியல் தொழில்நுட்பத்திற்கே சில கோயில்களின் கட்டிடக்கலை சவாலாக இருந்து வருகிறது.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களின் வரிசையில் இருப்பது தான் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் ராஜேந்திர சோழீஸ்வரர் எனவும் தாயார் ஞானாம்பிகை என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
தல சிறப்பு
63 நாயன்மார்களில் ஒருவராக திகழ்ந்து வரக்கூடிய இளையான்குடி மாற நாயனார் இந்த கோயிலில் தான் அவதரித்து முக்தி அடைந்தார் என தல புராணத்தில் கூறப்படுகிறது. இந்த கோயிலில் சிவபெருமானின் சன்னதிக்கு பின்புறத்தில் வெங்கடேச பெருமாளுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல கோஷ்டத்தில் இருக்கக்கூடிய தட்சிணாமூர்த்தி தனது இரண்டு சீடர்களோடு மட்டும் அமர்ந்து காட்சி கொடுத்து வருகிறார். இது மிகவும் சிறப்பான அம்சமாக கருதப்படுகிறது.
இந்த கோயிலில் வந்து வழிபட்டால் மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய எண்ணம் வளரும், உணவில்லாமல் தவித்து வருபவர்களுக்கு அன்னதானம் செய்யக்கூடிய எண்ணம் உண்டாகும் என நம்பப்படுகிறது.
தல வரலாறு
இந்திரன் மகரிஷி ஒரு வருடம் சாபம் பெற்றார். அதனை நிவர்த்தி செய்வதற்காக பூமியை நோக்கி வந்தார். பல கோயில்களுக்கு சென்று இந்திரன் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அப்போது இங்கும் லிங்கம் ஸ்தாபித்து வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது.
இதே ஊரில் வசித்து வந்தவர் தான் இளையான்குடி மாறனார். இவர் மிகப்பெரிய செல்வந்தராக இருந்து வந்தார். சிவபெருமான் மீது கொண்ட பக்தி காரணமாக அங்கு வரக்கூடிய அடியார்களுக்கு அன்னதானம் செய்து உபசரிப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளார்.
தனது பக்தனை சோதித்துப் பார்க்க சிவபெருமான் விரும்பினார். அதன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மாறனாரிடம் இருந்த செல்வத்தை சிவபெருமான் குறைத்து வந்தார். கடைசியில் மிகப்பெரிய பஞ்ச நிலை கொண்ட வறுமையை உருவாக்கினார்.
மாறனார் மிகப்பெரிய வறுமை நிலைக்குச் சென்றார். இருப்பினும் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்வது நிறுத்தாமல் கொடுத்து வந்தார். ஒரு நாள் சிவபெருமான் இரவு நேரத்தில் அடியார்கள் போல வேடமடைந்து மாரனார் இல்லத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு உணவு கொடுக்க மாறனார் வீட்டில் எதுவும் இல்லை.
அதன் காரணமாக உடனே மாறினார் வயலுக்குச் சென்று அங்கு விதைக்கப்பட்டிருந்த நெல்லை எடுத்து வந்து தனது மனைவியிடம் கொடுத்தார். அவர் அதனை உலர்த்தி அரிசி எடுத்து சோறு சமைத்து மற்றும் கீரை சமைத்து சிவபெருமானுக்கு கொடுத்தார்.
அடியாராக வந்த சிவபெருமான் உடனே தனது சுயரூபத்தை காட்டில் மாறனாருக்கு முக்தி கொடுத்தார். மேலும் நாயன்மார்களில் ஒருவராக இருக்க கூடிய அந்தஸ்தையும் சிவபெருமான் மாறனாருக்கு கொடுத்தார். மாறனாருக்கு காட்சி கொடுத்த சிவபெருமான் தான் ராஜேந்திர சோழீஸ்வரர் என்ற பெயரில் தற்போது அருள் வாளித்து வருகிறார்.