2025 புத்தாண்டு கும்ப ராசி பலன்கள்.. குடும்பத்தில் என்ன நடக்கும்.. தொழிலில் முன்னேற்றம் அடையுமா?..
New year 2025: இந்த 2025 புத்தாண்டில் பல எதிர்பார்ப்புகளோடு காத்திருப்பவர்கள் கிரகங்களின் மாற்றத்தால் கலவையான பலன்களை பெறுவார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் இருந்த 2025 ஆம் ஆண்டு கும்ப ராசி பெறக்கூடிய பலன்கள் குறித்து இங்கு காணலாம்.
New year 2025: இந்த 2025 புத்தாண்டு எதிர்பார்த்து காத்திருபவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். இந்த ஆண்டு பெரிய கிரகங்களாக கருதப்படும். குரு, சனி, ராகு, கேது இவர்கள் தங்களது இடத்தை மாற்றுகிறார்கள். இந்த 2025 புத்தாண்டில் பல எதிர்பார்ப்புகளோடு காத்திருப்பவர்கள் கிரகங்களின் மாற்றத்தால் கலவையான பலன்களை பெறுவார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் இருந்த 2025 ஆம் ஆண்டு கும்ப ராசி பெறக்கூடிய பலன்கள் குறித்து இங்கு காணலாம்.
கும்ப ராசி பொது பலன்கள்
இந்த 2025 புத்தாண்டு உங்களுக்கு பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். புதிய ஆபரணங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எதிர்காலத்தில் உங்களுக்கு புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வது உங்கள் உடல் ஆரோக்கியத்தை காப்பாற்றும் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கக்கூடும்.
தொழில்நுட்பத் துறையில் படித்துக் கொண்டிருக்கக் கூடிய மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வாழ்க்கை துணை முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கை உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களோடு ஆன்மீக பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும். வீட்டில் இருக்கக்கூடிய வயதானவர்களின் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. சரியான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. நவம்பர் மாதத்தில் இருந்து உங்கள் வாழ்க்கை துணையோடு வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மன நிம்மதி உங்களுக்கு கிடைக்கக்கூடும்.
வேலை மற்றும் தொழில்
இந்த 2025 புத்தாண்டு உங்களுக்கு பல வாய்ப்புகளை பெற்றுத் தரப் போகின்றது. தொழிலில் உங்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். அரசு துறையில் பணியாற்றுபவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும். தனியார் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களோடு உங்களுக்கு நல்ல உறவு முறை ஏற்படும்.
தொழிற்சாலைகள் பணியாற்றுபவர்களுக்கு உயர அலுவலர்கள் சில சிக்கல்களை கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தேவையில்லாத பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சம்பந்தப்பட்ட தொழிலில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடும். உணவகத் தொழிலை நடத்துபவர்களுக்கு இடம் மாற்றம் செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படக்கூடும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.
இந்த ஆண்டு உங்களுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கக்கூடும். புதிய கிளைகள் திறப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளது. மார்ச் மாதம் தொடங்கிய பிறகு கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு புதிய நட்பு வட்டாரங்கள் உருவாகும். நண்பர்களால் உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை
இந்த 2025 புத்தாண்டு உங்களுக்கு கலவான பலன்களை கொடுக்கப் போகின்றது. காதல் வாழ்க்கை உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். காதல் ஜோடிகள் வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஜனவரி மாதத்தில் உங்களுக்கு காதல் துணையினர் பரிசுப் பொருட்கள் கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பிப்ரவரி மாதத்தில் புதிதாக ஆடை ஆபரணங்கள் உங்களுக்கு வாழ்க்கை துணை வழங்கிக் கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. காதல் வாழ்க்கை பொறுத்தளவில் உங்களுக்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும்.
வாழ்க்கைத் துணையால் உங்களுக்கு மன அமைதி கிடைக்கக்கூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் மே மாதத்தில் இருந்து திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமண வாய்ப்புகள் உண்டாகும். புதுமண தம்பதிகள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் வயதான தம்பதிகளுக்கு இடையே அன்பு அதிகரிக்கக்கூடும். பாதையாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கணவன் மனைவி இடையே மனதில் மகிழ்ச்சி அதிகரித்து வாழ்க்கை மிகவும் இன்பமாக இருக்கும். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து புதுமணத்தம்பதிகளுக்கு இடையே காதல் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையோடு நல்லிணக்கம் ஏற்படும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.