2025 புத்தாண்டு மகர ராசி பலன்கள்.. உடல் ஆரோக்கியத்தில் கவனம்.. காதல் வாழ்க்கை சூப்பரா இருக்கும்.. அப்பறம் என்ன நடக்கும்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  2025 புத்தாண்டு மகர ராசி பலன்கள்.. உடல் ஆரோக்கியத்தில் கவனம்.. காதல் வாழ்க்கை சூப்பரா இருக்கும்.. அப்பறம் என்ன நடக்கும்!

2025 புத்தாண்டு மகர ராசி பலன்கள்.. உடல் ஆரோக்கியத்தில் கவனம்.. காதல் வாழ்க்கை சூப்பரா இருக்கும்.. அப்பறம் என்ன நடக்கும்!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 11, 2024 02:01 PM IST

New Year 2025: இந்த 2025 புத்தாண்டு சில ராசிகளுக்கு நன்மைகள் மற்றும் சில ராசிகளுக்கு தீமைகள் என அனைத்தும் கலவையான பலன்களாக கிடைக்கக்கூடும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறுகின்றனர். அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு மகர ராசி பெறக்கூடிய பொதுப் பலன்கள் குறித்து இங்கு காண்போம்.

2025 புத்தாண்டு மகர ராசி பலன்கள்.. உடல் ஆரோக்கியத்தில் கவனம்.. காதல் வாழ்க்கை சூப்பரா இருக்கும்.. அப்பறம் என்ன நடக்கும்!
2025 புத்தாண்டு மகர ராசி பலன்கள்.. உடல் ஆரோக்கியத்தில் கவனம்.. காதல் வாழ்க்கை சூப்பரா இருக்கும்.. அப்பறம் என்ன நடக்கும்!

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் பலன்கள் அமையும் என கூறப்படுகிறது. இந்த 2025 ஆம் ஆண்டு மிகப்பெரிய கிரகங்கள் தங்களது இடத்தை மாற்றுகின்றனர். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சில ராசிகளுக்கு நன்மைகள் மற்றும் சில ராசிகளுக்கு தீமைகள் என அனைத்தும் கலவையான பலன்களாக கிடைக்கக்கூடும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறுகின்றனர். அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு மகர ராசி பெறக்கூடிய பொதுப் பலன்கள் குறித்து இங்கு காண்போம்.

நிதி நிலைமை

இந்த 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றத்தோடு காணப்படும். நிலத்தில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடும். பொருளாதாரம் நிலையில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். நிலம் சம்பந்தப்பட்ட முதலீடுகள் உங்களுக்கு எதிர்கால தேவைக்கு ஏற்ப பெரிய முதலீடாக அமையும்.

புதிதாக வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. செலவுகள் அதிகரிக்கக்கூடும். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீண்ட தூர பயணங்கள் செல்லும் பொழுது அதிக செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஜூன் மாதத்தில் அதிகம் உள்ளது.

வங்கி கடன்கள் அனைத்தும் நிவர்த்தி அடைய கூடிய சூழ்நிலைகள் உங்களுக்கு அமையும். வீட்டு பராமரிப்பதற்காக செலவுகள் ஏற்படக்கூடும். ஜூலை மாதத்திற்கு பிறகு தங்க நகைகள் வாங்குவதற்கான செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய முதலீடு செய்வதற்கான சூழ்நிலைகள் உங்களுக்கு அமையும்.

கல்வி

மாணவர்கள் இந்த 2025 புத்தாண்டு முதல் சாதகமான சூழ்நிலையை அனுபவிக்க போகின்றார்கள். ஆரம்பகாலகட்டத்தில் கல்வி பயிலக்கூடிய மாணவர்கள் திறமையாக செயல்படுவார்கள். பள்ளி படிக்கக்கூடிய மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று முன்னேற்றம் காண்பார்கள். சிறப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று முன்னேற்ற பாதையை நோக்கி பயணம் செய்வார்கள்.

நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி காண்பார்கள். கல்லூரி படிப்பில் இருக்கும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் மூலம் புதிய வாய்ப்புகளை பெறுவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கூட உங்களுக்கு அமைவதற்கு யோகம் உள்ளது. இளங்கலை படிப்பில் இருப்பவர்கள் பெரிய கல்லூரியில் முதுகலை படிப்பிற்காக சேர்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடல் ஆரோக்கியம்

இந்த 2025 புத்தாண்டு உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு கலவையான பலன்கள் கொடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் உங்களுக்கு அஜீரணம் சம்பந்தப்பட்ட உடல் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சாப்பிடும் உணவின் மீது நீங்கள் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பிப்ரவரி மாதம் மன இறுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

தியானம் செய்வதன் மூலம் உங்களுக்கு அமைதி கிடைக்கக்கூடும். வயது முதிர்ந்தவர்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கண் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வெளியிடங்களில் செல்லும் பொழுது அங்கே உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது. பல் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

நுரையீரல் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் உங்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஜூலை மாதத்தில் பெண்களுக்கு முதுகு சொற்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இவை அனைத்தும் உடற்பயிற்சியின் மூலம் சரி செய்ய முடியும். சரியான மருத்துவம் உங்களுக்கு முன்னேற்றத்தை தரும்.

பரிகாரங்கள்

வளர்பிறை பஞ்சமி திதி என்று வாராகி அம்மனின் வழிபட்டால் உங்களுக்கு ஐஸ்வர்யம் கிடைக்கும் என கூறப்படுகிறது. கருப்பண்ண சுவாமிக்கு சனிக்கிழமை தினத்தன்று நெய் தீபம் ஏற்று வழிபட்டால் தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

 

 

Whats_app_banner