மீன ராசி புத்தாண்டு 2025 பலன்கள்: உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம்.. சில வேலைகள் இன்னும் இருக்கு.. என்ன செய்யலாம்?
New Year 2025: இந்த 2025 புத்தாண்டு சில ராசிகளுக்கு நன்மைகள் மற்றும் சில ராசிகளுக்கு தீமைகள் என அனைத்தும் கலவையான பலன்களாக கிடைக்கக்கூடும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறுகின்றனர். அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு மீன ராசி பெறக்கூடிய பொதுப் பலன்கள் குறித்து இங்கு காண்போம்.
New Year 2025: புத்தாண்டு என்றாலே அனைவருக்கும் இன்பம் தான். பலரும் பல ஆண்டுகள் கடந்து சென்றாலும் புத்தாண்டு எதிர்பார்த்து காத்து இருப்பார்கள். இந்த ஆண்டும் நமக்கு சிறப்பாக இருக்க வேண்டும் என எண்ணக்கூடியவர்கள் சிலர்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் பலன்கள் அமையும் என கூறப்படுகிறது. இந்த 2025 ஆம் ஆண்டு மிகப்பெரிய கிரகங்கள் தங்களது இடத்தை மாற்றுகின்றனர். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த 2025 புத்தாண்டு சில ராசிகளுக்கு நன்மைகள் மற்றும் சில ராசிகளுக்கு தீமைகள் என அனைத்தும் கலவையான பலன்களாக கிடைக்கக்கூடும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறுகின்றனர். அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு மீன ராசி பெறக்கூடிய பொதுப் பலன்கள் குறித்து இங்கு காண்போம்.
நிதி நிலைமை
இந்த 2025 வருடம் உங்களுக்கு கூட்டுத் தொழில் முயற்சிகளில் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை கற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி மாதம் முதல் உங்களுக்கு சிறிய மற்றும் பெரிய முதலீடுகள் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்றுத்தரும். மளிகை வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கப்படும். பிப்ரவரி மாதத்தில் இருந்து தனியார் துறையில் பணியாற்றுபவர்களுக்கு செலவுகள் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பொருளாதார நிலையில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரை பங்குச்சந்தை முதலீடு செய்தவர்களுக்கு சில சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வர்த்தக துறையில் பல இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். கடன் சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.
கடன் தேவையில்லாமல் வாங்குவது உங்களுக்கு நல்லது கிடையாது. டிசம்பர் மாதத்தில் புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். டிசம்பர் மாதத்தில் உங்களுக்கு தொழில் நிமித்தமாக பல லாபங்களை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும் அவ்வப்போது செலவுகளும் இருக்கும்.
கல்வி
2025 புத்தாண்டு உங்களுக்கு கல்வியில் மேன்மையை ஏற்படுத்திக் கொடுக்கும் ஆண்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயர்கல்வியில் இருக்கக்கூடிய மாணவர்கள் மிகவும் நன்றாக படிப்பார்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி காண்பார்கள். பொதுத் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நினைத்த மதிப்பெண்களை பெற்று மாணவர்கள் வெற்றி காண்பார்கள்.
ஆரம்பக் கல்வியில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு விளையாட்டில் அதிக கவனம் இருக்கின்ற காரணத்தினால் கல்வி சிதறல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கல்லூரி மாணவர்கள் மிகவும் கவனத்தோடு இறுதித் தேர்வுகளில் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி காண்பார்கள். மார்ச் மாதத்திற்கு பிறகு உங்களுடைய அதிக முயற்சிகள் உங்களுக்கு நல்ல மதிப்பெண்களை தேர்வுகளில் பெற்று தரும்.
கல்லூரி படிக்கும் மாணவர்கள் வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெற்று நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். வெளிநாடு சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கக்கூடும். இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடல் ஆரோக்கியம்
இந்த 2025 புத்தாண்டு தொடக்கத்திலிருந்து உங்களுக்கு சில உடல் ஆரோக்கிய சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஜனவரி மாதம் தொடங்கிய பிறகு உங்களுக்கு தலைவலி சிக்கல்வில் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். பிப்ரவரி மாதம் உங்களுக்கு அஜீரண கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
வயிற்று உபாதைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. வெளியே இருக்கக்கூடிய கடைகளில் உணவு அருந்துவதை தவிர்த்துக் கொள்வது நல்லது. உடற்பயிற்சி உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். நடை பயிற்சி உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை தரும்.
வயதில் மூத்த ஆண்களுக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் நலனில் அக்கறை தேவை. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே சுற்றுப்புறங்களை நீங்கள் மிகவும் தூய்மையாக வைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பரிகாரங்கள்
நரசிம்மர் கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் உங்களுக்கு கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்ற வழிபட்டால் குடும்பத்தின் மிகவும் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் வழிபாடு செய்தால் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.