மகர ராசி 2025 புத்தாண்டு பலன்கள்: திருமண வாழ்க்கை நல்லா இருக்கும்.. உடம்ப பாத்துக்கோங்க பாஸ்.. என்ன நடக்க போகுதோ?
New Year 2025: இந்த 2025 புத்தாண்டில் பல எதிர்பார்ப்புகளோடு காத்திருப்பவர்கள் கிரகங்களின் மாற்றத்தால் கலவையான பலன்களை பெறுவார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் இருந்த 2025 ஆம் ஆண்டு மகர ராசி குடும்ப பலன்கள் குறித்து இங்கு காணலாம்.
New Year 2025: இந்த 2025 புத்தாண்டு எதிர்பார்த்து காத்திருபவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். இந்த ஆண்டு பெரிய கிரகங்களாக கருதப்படும். குரு, சனி, ராகு, கேது இவர்கள் தங்களது இடத்தை மாற்றுகிறார்கள். இந்த 2025 புத்தாண்டில் பல எதிர்பார்ப்புகளோடு காத்திருப்பவர்கள் கிரகங்களின் மாற்றத்தால் கலவையான பலன்களை பெறுவார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் இருந்த 2025 ஆம் ஆண்டு மகர ராசி குடும்ப பலன்கள் குறித்து இங்கு காணலாம்.
மகர ராசி பொது பலன்கள்
இந்த 2025 புத்தாண்டு உங்களுக்கு பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு பாராட்டுகளை கொடுப்பார்கள். திருமணமாகாமல் இருந்தவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. காதல் வாழ்க்கை மிகவும் அருமையாக இருக்கும்.
வேலை செய்யும் இடத்தில் கூடுதல் பொறுப்புகள் உங்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
கட்டுமானத்துறையில் பணியாற்றபவர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றமாக இருக்கும். பொருளாதாரத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கக்கூடும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் பெறுகின்ற ஆண்டாக இது அமையும்.
வேலை மற்றும் தொழில்
இந்த 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு நல்ல முன்னேற்ற காலமாக இருக்கும். ஜனவரி மாதத்தில் உங்களுக்கு வருவாய் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பிப்ரவரி மாதத்தில் பொறியாளர்களுக்கான யோகமாக அந்த மாதம் அமைய உள்ளது. பனிச்சுவை உங்களுக்கு அதிகரித்தாலும் பணிகளை முடிப்பதற்கான காரணிகள் அனைத்தும் உங்களுக்கு ஏற்றவாறு அமையும். மார்ச் மாதத்தில் இருந்து உங்களுக்கு நல்ல மதிப்பு மற்றவர்களிடத்தில் கிடைக்கக்கூடும்.
ஏப்ரல் மாதத்தில் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய அளவிற்கு உங்களுடைய செயல்பாடுகள் அனைத்தும் இருக்கும். உயர் அலுவலர்களிடம் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கக்கூடும். மே மாதத்திற்கு பிறகு அதிக வேலை காரணமாக உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
உடற்பயிற்சி மூலம் அதனை நீங்கள் தவிர்த்து விடலாம். ஜூன் மாதத்திற்கு பிறகு தொழிலில் உங்களுக்கு அதிக லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆகஸ்ட் மாதம் விற்பனை செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கு அமோகமான லாபம் கிடைக்கக்கூடும். கட்டுமான தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை
இந்த 2025 புத்தாண்டு உங்களுக்கு திருமண வாழ்க்கையில் சாதகமாக பல பலன்களை கொடுக்கப் போகின்றது காதல் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கக்கூடும். ஆன்மீக பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். திருமண உறவில் சில சிக்கல்கள் பிப்ரவரி மாதத்தில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த மாதத்தில் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால் மனம் வருத்தம் ஏற்படக்கூடும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். மாதமாக மார்ச் மாதம் உங்களுக்கு அமைய அதிக வாய்ப்பு உள்ளது. ஏப்ரல் மாதத்தில் புதிய தம்பதிகள் வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. காதல் வாழ்க்கையில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கக்கூடும்.
வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்க கூடும். உறவினர்கள் மூலம் உங்களுக்கு யோகம் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. காதல் வாழ்க்கையில் இருப்பவர்கள் ஒருவர் ஒருவர் விட்டுக் கொடுத்து சென்றால் நல்லது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.