தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Palli Vilum Palan : இது ஆபத்து.. பல்லி நம் உடம்பில் எந்த இடத்தில் விழுந்தால் என்ன பலன்? பரிகாரம் என்ன? இதோ பாருங்க!

Palli Vilum Palan : இது ஆபத்து.. பல்லி நம் உடம்பில் எந்த இடத்தில் விழுந்தால் என்ன பலன்? பரிகாரம் என்ன? இதோ பாருங்க!

Divya Sekar HT Tamil
Apr 16, 2024 09:36 AM IST

பஞ்சாங்கத்தில் ஒரு சில இடங்கள் பல்லிகள் விழுந்தால் யோகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது எந்த இடம் என்ன யோகம் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

பல்லி விழும் பலன்
பல்லி விழும் பலன்

பல்லி தென்கிழக்கில் இருந்து சத்தமிட்டால் அது தீமை என சொல்லப்படுகிறது. அதேபோல பல்லி தெற்கிலிருந்து சத்தமிட்டால் அது சுபம் என பஞ்சாங்கத்தில் கூறப்படுகிறது.

அதேபோல தென் மேற்கிலிருந்து நமக்கு பல்லி சத்தமிட்டால் அது பந்து வரவு. வடமேற்கிலிருந்து சப்தமிட்டால் அது வஸ்திர லாபம். அதாவது உடைகள் தானமாக கிடைக்கும்.

வடக்கிலிருந்து நமக்கு சத்தமிட்டால் திரவிய லாபம் கிடைக்கும். ஏதாவது பொருள் நம்மிடம் சேரும். வட கிழக்கிலிருந்து பல்லி பலன் சொன்னால் லாபகரமான விஷயங்கள் நடக்கும் என்று அர்த்தமாம்.

நம் தலைக்கு மேல் இருந்து சத்தம் எழுப்பினால் நாம் செய்யப்போகும் காரியம் வெற்றி அடையும் என்பது அர்த்தமாம். அதாவது பூமியின் கீழ் நம் பாதத்தின் கீழ் இருந்து சத்தம் எழுப்பினால் காரிய அனுகூலம் உண்டு.

பல்லி நம் குடிமி அதாவது தலைமுடி மீது விழுந்தால் சுபம் என்று பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. கபாலத்தில் விழுந்தால் பிரிய சம்பத்து, இடது கபாலத்தில் விழுந்தால் பிரியதரிசனம், நெற்றியில் விழுந்தால் லட்சுமி கரம், புருவத்தில் விழுந்தால் அரசன் நன்மை, வலது கண்ணில் விழுந்தால் சுபம் என பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ளது.

பரிகாரம்

பல்லி விழுந்தால் அந்த தோஷத்தில் இருந்து நாம் மீள காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு பின்புறம் வரும்போது அங்கு உள்ள படிகள் மீது ஏறி அங்கு இருக்கும் பல்லியை தொட்டு விட்டு வருவது பல்லியினால் ஏற்பட்டிருக்கும் தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

பெண்கள் உடலில் பல்லி விழும் பலன்களை குறித்து இங்கு காணலாம்

உதடு - சில பிரச்சினைகள் வரலாம் 

முதுகு - மரண செய்தி வரும் 

நகங்கள் - ஏதேனும் பிரச்சனை வரலாம் 

கை - நிதி மேம்பாட்டை எதிர்பார்க்கலாம்

தலை - மரண பயம் 

தலை பின்னல் - சில நோய்கள் குறித்து பயம் 

இடது கண் - துணை உங்களை விருப்பம் கொள்வார்

வலது கண் - மன அழுத்தம் ஏற்படும்

தொடை- ரொமாண்டிக் விவகாரங்களை சந்திப்பீர்கள்

 முழங்கால் - உங்கள் மீது யாரேனும் அன்பு மழை பொழியலாம் 

மூட்டு - ஏதோ பிரச்சனை வருவதன் அறிகுறி

 வலது கால் - சில தோல்விகளை சந்திக்க நேரிடும்

இடது கை - மன உளைச்சல் வரலாம்

 விரல்கள் - புதிய ஆபரணங்கள் வாங்குவீர்கள்

 வலது தோள் - ரொமாண்டிக் சம்பவம் வரும் 

தோள்ப்பட்டை - புதிய நகைகளை வாங்குவீர்கள்

கால் விரல்கள் - ஆண் குழந்தை பிறக்கும்

 கெண்டைக்கால் - வீட்டிற்கு விருந்தாளி வருவர்

வலது கன்னம் - உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும்

 வலது காதின் மேற்புறம் - பொருளாதார மேம்பாடு கிடைக்கும் 

மேல் உதடு - சில அவமானங்களை சந்திப்பீர்கள் 

கீழ் உதடு - புதிய பொருள்கள் வாங்கும் யோகம்

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்