அலப்பறை செய்யும் சூரியன்.. ஒரு மாத காலம் அடி உறுதி.. சிக்கலில் சிக்கிக்கொண்ட ராசிகள்
Lord Surya: சூரிய பகவானின் இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவானின் சஞ்சாரத்தால் சில ராசிகளுக்கு சிரமமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சூரிய பகவான் நவகிரகங்களின் தலைவனாக திகழ்ந்த வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் ஒவ்வொரு முறையும் தனது இடத்தை மாற்றும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் வழங்கி வருகின்றார்.
சூரிய பகவான் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். தற்போது அந்த ராசியில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். அதே சமயம் மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார்.
சூரிய பகவானின் இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவானின் சஞ்சாரத்தால் சில ராசிகளுக்கு சிரமமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கடக ராசி
சூரிய பகவானால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அவருடைய இடமாற்றத்தால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் அதிக கவனம் வேண்டும். வணிகம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் சற்று காலதாமதம் தேவை. திருமண வாழ்க்கையில் சங்கடங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணையோடு சண்டைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம் ராசி
சூரிய பகவானில் சஞ்சாரத்தால் உங்களுக்கு இந்த காலம் கட்டம் மிகவும் சிக்கலாக இருக்கும். நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறாமல் போவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆசைகள் அனைத்தும் நிறைவேறாமல் நிற்கும். இந்த காலகட்டத்தில் புதிய முதலீடுகள் செய்வது தவிர்ப்பது நல்லது. வருமானம் சற்று மந்தமாக இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் அவ்வப்போது நஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய திட்டங்களை தற்போது தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு ராசி
சூரியனின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. அதே சமயம் கலவையான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்ப வாழ்க்கையில் சண்டைகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் வாழ்க்கைத் துணையோடு அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் ஏற்படும் பெற்றோரின் உறவோடு ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடும். சில காரியங்களால் உங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மகர ராசி
சூரியனின் சஞ்சாரம் உங்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தப் போகின்றது. மற்றவர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய மனநிலை சீர்குள்ளே அதிக வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களுடன் பேசும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லை என்றால் சண்டைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. கடன் சிக்கல்கள் உங்களுக்கு ஏற்படும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.