5ஆம் இட சுக்கிரனால் ஜாக்பாட் ரெடி! பணத்தில் குளிக்க போகும் சிம்மம்! சுக்கிர பெயர்ச்சி பலன்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  5ஆம் இட சுக்கிரனால் ஜாக்பாட் ரெடி! பணத்தில் குளிக்க போகும் சிம்மம்! சுக்கிர பெயர்ச்சி பலன்கள்!

5ஆம் இட சுக்கிரனால் ஜாக்பாட் ரெடி! பணத்தில் குளிக்க போகும் சிம்மம்! சுக்கிர பெயர்ச்சி பலன்கள்!

Kathiravan V HT Tamil
Published Nov 12, 2024 08:31 PM IST

சிம்மம் ராசிக்கு 3 மற்றும் 10ஆம் இடங்களுக்கு சுக்கிர பகவான் அதிபதி ஆவார். 5ஆம் இடத்தில் சுக்கிர பகவான் அமர்வதன் மூலம் தொழில் மூலம் அனுகூலங்கள் கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணம் மேற்கொள்ள அற்புதமான காலம் இது.

5ஆம் இட சுக்கிரனால் ஜாக்பாட் ரெடி! பணத்தில் குளிக்க போகும் சிம்மம்! சுக்கிர பெயர்ச்சி பலன்கள்!
5ஆம் இட சுக்கிரனால் ஜாக்பாட் ரெடி! பணத்தில் குளிக்க போகும் சிம்மம்! சுக்கிர பெயர்ச்சி பலன்கள்!

இது போன்ற போட்டோக்கள்

பரிவர்தனை யோகம்

விருச்சிகம் ராசியில் இருந்த சுக்கிர பகவான் நவம்பர் 8ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 3 வரையிலான 26 தனுசு ராசியில் வாசம் செய்ய உள்ளார். சுக்கிரன் அதிபதியாக உள்ள ரிஷபம் ராசியில் குரு பகவானும், குரு பகவான் அதிபதியாக உள்ள தனுசு ராசியில் சுக்கிர பகவானும் அமர்ந்து பரிவர்தனை யோகத்தை உண்டாக்கி உள்ளனர். இந்த யோகம் ஆட்சிக்கு இணையான பலன்களை கொடுக்கும் என்பது ஜோதிட விதியாக உள்ளது.

சிம்மமும் சுக்கிர பகவானும் 

சிம்மம் ராசிக்கு 3 மற்றும் 10ஆம் இடங்களுக்கு சுக்கிர பகவான் அதிபதி ஆவார். 5ஆம் இடத்தில் சுக்கிர பகவான் அமர்வதன் மூலம் தொழில் மூலம் அனுகூலங்கள் கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணம் மேற்கொள்ள அற்புதமான காலம் இது. வெளிநாட்டில் படிக்கவும், வேலை செய்யவும் திட்டமிடுபவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் மேன்மை பெறும். 

ஏற்கெனவே செய்யும் தொழிலில் இருந்து புதிய தொழிலை மாற்றுவீர்கள். தொழில் வியூங்களை மாற்றி அமைத்து லாபம் பார்ப்பீர்கள். வேலை மற்றும் தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் அமையும். புதிய வேலைகளை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். 

குழந்தை பாக்கியம் 

பணவரவு அதிகரிப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். சனி மற்றும் கேதுவின் தொந்தரவுகளுக்கு மத்தியில் நல்ல பலன்களை சுக்கிர பகவான் அருள்வார். இளைய சகோதரர்கள் மற்றும் சகோதரர்கள் உறவு வலுப்படும். சகோதர வழியில் ஆதாயம் உண்டாகும். தந்தை மற்றும் தாய் வழி சொந்தங்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். 

5ஆம் இட சுக்கிரன் மூலம் லட்சுமி கடாட்சம் உண்டாகும். சுக்கிர பகவானின் 11ஆம் பார்வையால் திருமணம் ஆன தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.  வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். காதல் விவகாரங்கள் மற்றும் புதிய அறிமுகங்களில் கவனம் தேவை. 

வேலை அமைப்பில் இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும் காலம் இது. தைரியம் மற்றும் தன்னம்பிக்கை உடன் செயலை தொடங்கும் போது நன்மைகளையும், வெற்றிகளையும் சுக்கிர பகவான் பெற்றுத் தருவார். புதிய வண்டி மற்றும் வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.