Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை நவ.13 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை நவ.13 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை நவ.13 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Kathiravan V HT Tamil
Nov 12, 2024 03:45 PM IST

Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 13 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை நவ.13 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை நவ.13 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் நிதானமாக செயல்படுவதன் மூலம் வெற்றியை குவிக்கும் நாள். காதலை வெளிப்படுத்த தயக்கம் வேண்டாம். புதிய பாதைகள் இந்த நாளில் புலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணியிடத்தில் மரியாதை உண்டாகும். 

ரிஷபம்

ரிஷபம் ராசியினருக்கு, வணிக உறவுகளை வலுப்படுத்த இன்றைய நாள் சாதகமாக இருக்கும். முறையான உடற்பயிற்சி நன்மைகளை கொண்டு வரும். பணிச்சுமைகளில் இருந்து விலகி ஓய்வை நாடுவீர்கள். குடும்பத்தில் சில பிரச்னைகள் உண்டாகலாம். 

மிதுனம் 

மிதுனம் ராசிக்காரர்கள் நிதானமாக செயல்படுவது முக்கியம். பேச்சில் பொறுமை தேவை. குடும்ப பிரச்சனைகளை தீர்க்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். கடன் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். பழைய முதலீடுகளில் இருந்து லாபம் உண்டாகும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். 

கடகம் 

கடக ராசிக்காரர்கள் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றிகளை குவிக்க வேண்டிய நாள். இந்த நாளில் உங்கள் செயல்பாடுகள் பிறரால் பாராட்டுக்களை பெறும். பணியிடங்களில் கௌரவமான நிலையை அடைவீர்கள். பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டால் சுறுசுறுப்பாக செயல்படலாம். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் வாழ்கை துணை உடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்துங்கள். மற்றவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். நேர்மறை சிந்தனையைப் பேணுவது நன்மை தரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இனிமையான நாள். எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்து நேர்மறையாக செயல்படுங்கள். எதிர்கால திட்டங்களில் கவனம் செலுத்துங்கள். காதல் உறவுகள் வளர வாய்ப்புள்ளது. குடும்பத்துடன் நேரம் செலவிடுங்கள்.

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner