Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.13 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.13 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.13 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Kathiravan V HT Tamil
Nov 12, 2024 04:03 PM IST

Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் நவம்பர் 13 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.13 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை நவ.13 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் சற்று கவனமாக செயல்பட்டு வெற்றிகளை ஈட்ட வேண்டிய நாள். குடும்பத்தினர் உடன் அனுசரித்து செல்வது நல்லது. உடல்நலம் தொடர்பான கவலைகள் இருக்கலாம். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்ற கடினமாக உழைக்க வேண்டிய நாள். உங்கள் பணிகளை தனியாக முடிக்க வேண்டும்.  பணியிடங்களில் அழுத்தம் உண்டாகலாம். புதிய முதலீடுகளில் எச்சரிக்கையும், கவனமும் தேவை. 

தனுசு 

தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய வியாபார வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணியிடங்களில் அதிக வேலைகள் உண்டாகலாம். வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அது உங்களுக்கு சாதகமாகவே அமையும். சிலர் இன்று பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ளலாம். வாழ்கை துணை மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். 

மகரம் 

மகரம் ராசிக்காரர்கள் பேச்சில் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள்.  அலுவலகத்தில் சக ஊழியர்கள் உடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், இருப்பினும் வாழ்கை துணை உடன் கவனமாக பேசவும். புதிய செயல்களை நிதானம் உடன் செய்யுங்கள். புதிய முதலீடுகளில் எச்சரிக்கை தேவை. உடல்நலனில் அக்கறை காட்டுவது அவசியம்.

கும்பம் 

கும்ப ராசிக்காரர்கள் எதிர்மறை சிந்தனையை விடுத்து நேர்மறை சிந்தனை உடன் செயல்பட வேண்டிய நாள். புதிய சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள். புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு சில பிரச்சனைகளால் கவலைகள் உண்டாகலாம். ஆனால் அவை விரைவில் தீர்ந்து மகிழ்ச்சியை உண்டாக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடலாம். சகபணியாளர்களிடம் உதவிகள் கேட்க தயக்கம் வேண்டாம். சொத்துப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதிய முதலீடுகளை செய்து மகிழ்வீர்கள். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner