2ஆம் இட சுக்கிரனால் மகாலட்சுமி யோகம் பெரும் விருச்சிகம் ராசி! சுக்கிர பெயர்ச்சி பலன்கள்!

By Kathiravan V
Nov 12, 2024

Hindustan Times
Tamil

நவகிரகங்களில் அசுர குரு எனப்படும் சுக்கிர பகவானுக்கு தனி இடம் உண்டு. பொருள் சேர்க்கை, திருமணம், மகிழ்ச்சி, கலை, திறமை, அழகு, காதல், காமம், ஆடைகள், அலங்காரம், ஆபரணங்கள் ஆகியவற்றின் காரகத்துவம் கொண்ட கிரகமாக சுக்கிரன் உள்ளார். ஜோதிடத்தில், கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் இயக்கம் மாறுவது அனைத்து ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது.

விருச்சிகம் ராசியில் இருந்த சுக்கிர பகவான் நவம்பர் 8ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 3 வரையிலான 26 தனுசு ராசியில் வாசம் செய்ய உள்ளார். சுக்கிரன் அதிபதியாக உள்ள ரிஷபம் ராசியில் குரு பகவானும், குரு பகவான் அதிபதியாக உள்ள தனுசு ராசியில் சுக்கிர பகவானும் அமர்ந்து பரிவர்தனை யோகத்தை உண்டாக்கி உள்ளனர். இந்த யோகம் ஆட்சிக்கு இணையான பலன்களை கொடுக்கும் என்பது ஜோதிட விதியாக உள்ளது.

விருச்சிகம் ராசிக்கு ராசிநாதன் ஆன செவ்வாய் பகவான் நீசம் பெற்று உள்ளார். ஆனால் சுக்கிர பெயர்ச்சி யோகம் உண்டாக்கும் காலம் ஆகும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் உங்கள் செல்வ நிலை உயரும். நீண்ட நாட்களாக வில்லங்கத்தில் இருந்த சொத்து சார்ந்த பிரச்னைகள் தீரும். 

சுக்கிரன் 2ஆம் இடத்திற்கு வந்து உள்ளதால் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானங்கள் மூலம் ஆதாயமும் அனுகூலமும் உண்டாகும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். சனி பகவான் வக்ர நிவர்த்தி பெறுவது கூடுதல் நன்மைகளை ஏற்படுத்தி தரும். 

வங்கி சார்ந்த விவகாரங்களில் இருந்த சிக்கல்கள் தீரும். நீண்டநாட்களாக தள்ளி போன திருமணம் கைக்கூடும். தொழிலில் இருந்து வந்த பிரச்னைகள் வெளியாட்கள் மூலம் தீரும். புதிய கூட்டாளிகள் உடன் இணைந்து தொழிலை விரிவு செய்வீர்கள். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். வெளியாட்கள் மற்றும் வெளியூர் பயணங்கள் மூலம் ஆதாயங்கள் உண்டாகும். புதிய மாற்றங்கள் உண்டாகும் நேரத்தை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். 

இரண்டாம் இடத்தில் உள்ள சுக்கிரன் 8ஆம் இடத்தை பார்ப்பதால் கடன் சார்ந்த விஷயங்களில் இருந்த தொந்தரவுகள் விலகும். உடல்நிலை பாதிப்புகள் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும். பில்லி, சூனியம், செய்வீனைகள் அகன்று லட்சுமி கடாட்சம் பெருகும்.  காதல் உறவுகளில் இருந்த பிரச்னைகள் தீரும். காதல் திருமணம் கைக்கூடும். திருமணம் சார்ந்த முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

சங்கு பூ தேநீர் தரும் நன்மைகள்