’சுக்கிரன் சுகம் கொடுக்க ரெடி! அனுபவிக்க ரெடியா?’ மிதுனம் ராசிக்கான சுக்கிர பெயர்ச்சி பலன்கள்!
6ஆம் இடத்தில் இருந்து வந்த சுக்கிர பகவான் தற்போது 7ஆம் இடத்திற்கு இடம் பெயர்ந்து உள்ளார். மிதுனம் ராசிக்கு யோகம் தரக்கூடிய கிரகமாக சுக்கிர பகவான் உள்ளார். 5 மற்றும் 12ஆம் இடங்களுக்கு சுக்கிரனே அதிபதி ஆவார்.
நவகிரகங்களில் அசுர குரு எனப்படும் சுக்கிர பகவானுக்கு தனி இடம் உண்டு. பொருள் சேர்க்கை, திருமணம், மகிழ்ச்சி, கலை, திறமை, அழகு, காதல், காமம், ஆடைகள், அலங்காரம், ஆபரணங்கள் ஆகியவற்றின் காரகத்துவம் கொண்ட கிரகமாக சுக்கிரன் உள்ளார். ஜோதிடத்தில், கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் இயக்கம் மாறுவது அனைத்து ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது.
பரிவர்தனை யோகம்
விருச்சிகம் ராசியில் இருந்த சுக்கிர பகவான் நவம்பர் 8ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 3 வரையிலான 26 தனுசு ராசியில் வாசம் செய்ய உள்ளார். சுக்கிரன் அதிபதியாக உள்ள ரிஷபம் ராசியில் குரு பகவானும், குரு பகவான் அதிபதியாக உள்ள தனுசு ராசியில் சுக்கிர பகவானும் அமர்ந்து பரிவர்தனை யோகத்தை உண்டாக்கி உள்ளனர். இந்த யோகம் ஆட்சிக்கு இணையான பலன்களை கொடுக்கும் என்பது ஜோதிட விதியாக உள்ளது.
கடகம் ராசியும் சுக்கிரனும்
6ஆம் இடத்தில் இருந்து வந்த சுக்கிர பகவான் தற்போது 7ஆம் இடத்திற்கு இடம் பெயர்ந்து உள்ளார். மிதுனம் ராசிக்கு யோகம் தரக்கூடிய கிரகமாக சுக்கிர பகவான் உள்ளார். 5 மற்றும் 12ஆம் இடங்களுக்கு சுக்கிரனே அதிபதி ஆவார். சுக்கிர பகவான் 7ஆம் இடத்தில் தொடர்பு பெறுவதால் வெளியூர் பயணங்கள் உண்டாகும். வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று செல்வம் சேர்க்கும் நிலை உண்டாகும். அலுவலகத்தில் ஒரு சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.
சமூகத்தில் உயர்ந்த மதிப்பும், செல்வாக்கும் உண்டாகும் காலம் இது. தொழில் மற்றும் வேலையில் தொட்டதெல்லாம் துலங்கும். தொழிற் கூட்டாளிகள் உடன் இருந்த சிக்கல்கள் தீரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். காதலிப்பவர்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
பங்குச்சந்தை முதலீடுகளில் லாபம்
வேலையில் தலைமை பொறுப்புகள் தேடி வரும். பிள்ளைகள் சார்ந்த விவகாரங்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். எலெட்ரானிக்ஸ் மற்றும் ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பங்குச்சந்தை முதலீடுகளில் லாபம் உண்டாகும். புதிய முதலீடுகளை செய்ய முன்வருவீர்கள். தொழிலில் இருந்து வந்த தொந்தரவு, நஷ்டங்கள் தீரும். வாழ்கை துணை உங்கள் செயல்பாடுகளுக்கு உதவிகரமாக இருப்பார். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் கூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.