October Rasi Palan: எட்டில் சனி, குரு வக்கிரம் அடையற நேரம்.. அக்டோபரில் இந்த ராசிக்காரருக்கு எப்படி இருக்கப் போகுது?-saturn in the eighth the time how will it be for this zodiac sign in october - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  October Rasi Palan: எட்டில் சனி, குரு வக்கிரம் அடையற நேரம்.. அக்டோபரில் இந்த ராசிக்காரருக்கு எப்படி இருக்கப் போகுது?

October Rasi Palan: எட்டில் சனி, குரு வக்கிரம் அடையற நேரம்.. அக்டோபரில் இந்த ராசிக்காரருக்கு எப்படி இருக்கப் போகுது?

Manigandan K T HT Tamil
Sep 23, 2024 10:38 AM IST

Rasi Palan: சனி இன்னமும் எட்டுல தான் இருக்கிறார். அவர் ஏதாவது இடையூறு பண்ணாம இருக்கணும் அப்படி இடையூறு பண்ணாலும் அதை ஸ்மார்ட்டா கலைய தெரியணும். உங்களுக்கு திருமணம் கை கூடி வர வாய்ப்புள்ளது.

October Rasi Palan: எட்டில் சனி, குரு வக்கிரம் அடையற நேரம்.. அக்டோபரில் இந்த ராசிக்காரருக்கு எப்படி இருக்கப் போகுது?
October Rasi Palan: எட்டில் சனி, குரு வக்கிரம் அடையற நேரம்.. அக்டோபரில் இந்த ராசிக்காரருக்கு எப்படி இருக்கப் போகுது?

வேலை முன்னேற்றம் எப்படி இருக்கும்?

உங்க பொருளாதாரத்துல உங்க வேலை மாற்றத்துல உங்க முன்னேற்றத்துல உங்களுக்கு தேவையான ஒரு தொழில் வளர்ச்சியில அதுக்கெல்லாம் வாய்ப்புகள் வந்து உருவாக்கக்கூடிய ஒரு காலமாக இருக்கிறது அக்டோபர் மாதம்.

அதுக்கு உண்டான அந்த டிரான்சிஷன் எல்லாம் உங்களுக்கு ஃபேவரா நடக்க போகுதுன்னு அர்த்தம்.

சனி இன்னமும் எட்டுல தான் இருக்கிறார். அவர் ஏதாவது இடையூறு பண்ணாம இருக்கணும் அப்படி இடையூறு பண்ணாலும் அதை ஸ்மார்ட்டா கலைய தெரியணும். உங்களுக்கு திருமணம் கை கூடி வர வாய்ப்புள்ளது.

ரிலேஷன்ஷிப் பொறுத்தவரைக்கு உங்களுக்கு சந்தோஷம் காத்திருக்கிறது. சனி அப்பப்ப ஏதாவது ஒரு சோதனை கொடுத்துக்கிட்டே இருக்கும் என்பதையும் கவனித்தில் கொள்வது நல்லது.

குரு வக்கிரம் அடையற நேரம்

மாணவர்களை பொறுத்தவரைக்கும் அக்டோபரில் குரு வக்கிரம் அடையற நேரம். சுப கிரகங்கள் எப்போதெல்லாம் வக்கிரமடையுதோ அது செல்வத்தை கொடுக்குதோ இல்லையோ அறிவை நல்லா வளர்க்கும்.

அறிவும் திறமையும் ஒரு மனிதனுக்கு வளரும்னா குரு சூரியன் புதன் இந்த மூணு கிரகங்கள் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும்.

பெண்களை பொறுத்தவரைக்கும் அக்டோபர் மாதத்துல கடகத்தை சேர்ந்தவர்களுக்கு ஃபேமிலி ஃபேமிலி ஸ்டேட்டஸ் ஹெல்த் இதெல்லாம் எப்படி இருக்கும்?

உங்களுக்கு குரு 11ல் தேவையான பொருள், பணம் என்ன தேவையோ குடும்பத்துக்கு என்ன தேவையோ அதை சப்போர்ட் பண்ணும்.

செவ்வாய் உங்களுக்கு 12 ல் இருந்து முதல் வீட்டுக்கு நகர்கிறது. ஃபேமிலி கமிட்மென்ட்ஸ் மற்றும் வொர்க் லோட் இதெல்லாம் இருக்கத்தான் செய்யும். இதெல்லாம் நீங்க கொஞ்சம் பேலன்ஸ் பண்ணி தான் ஆகணும்.

சனி எட்டுலதான் இருக்கார். வக்கிரம் அடைஞ்சிருக்கார். வக்கிர காலம் நல்ல காலம்தான் இருந்தாலும், வாகனத்தில் போகும்போது பயணம் செய்யும் பொழுது ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை.

இது ஒரு பொது பலன். ஒவ்வொருத்தருக்கும் ஒரு ராசி இருக்கும், ஒரு ஒரு லக்னம் இருக்கும், அதுக்குள்ள நட்சத்திரங்கள் இருக்கும். உங்களுடைய தசா புத்திகள் இருக்கும். உங்க பிறந்த ஜாதகத்துடைய அமைப்பு இருக்கும்.

இதெல்லாம் அடிப்படையாக வெச்சிதான் ஒரு மனிதனுடைய பலன்கள் என்ன நடக்கும்னா சரியா புரிஞ்சுக்க முடியும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்