தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Worship: சனி பகவானை கோபப்படுத்திடாதீங்க.. அப்பறம் அவ்வளவுதான்.. மறந்தும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க..!

Sani Worship: சனி பகவானை கோபப்படுத்திடாதீங்க.. அப்பறம் அவ்வளவுதான்.. மறந்தும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க..!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 23, 2023 11:00 AM IST

சனி பகவானுக்கு உகந்த சனிக்கிழமையில் நாம் சில உணவுப்பொருட்களை கண்டிப்பாக உணவில் சேர்த்து கொள்ள கூடாது அது என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

சனி
சனி

கோயில்களுக்கு சென்று சனி பகவானுக்கு நெய் தீபம் ஏற்றுவது, சனிபகவானை வழிபடுவது, காக்கைக்கு நெய் கலந்த சாதம் வைப்பது, தயிர் கலந்த சாதம் வைப்பது என சனி பகவானை குஷிப்படுத்த பக்தர்கள் முயல்கின்றனர். ஆனால் நாம் சனிக்கிழமையில் சில உணவுப்பொருட்களை கண்டிப்பாக உணவில் சேர்த்து கொள்ள கூடாது அது என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

சிவப்பு மிளகாய்

சனிக்கிழமை நாம் சிவப்பு மிளகாய் உண்பவதை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும். சனிக்கிழமை மறந்தும் கூட உணவில் சிவப்பு மிளகாய் கலக்க கூடாது. காரணம் சிவப்பு செவ்வாய் மற்றும் சூரியனுக்கு உகந்த நிறங்கள். செவ்வாய் மற்றும் சூரியன் சனி பகவானுக்கு பகையான கிரகங்கள் என்பதால் நாம் சிவப்பு மிளகாயை சேர்க்க கூடாது. ஆனால் நாம் தவறாக சனிக்கிழமையில் அதைச்சாப்பிட்டு விட்டால் உடலில் சின்ன சின்ன உபாதைகள் ஏற்படக் கூடும் என்று நம்பப்படுகிறது.

அசைவம்

சனிக்கிழமையில் பொதுவாக அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வெள்ளிக்கிழமை இறைவனுக்கு உகந்த நாள் என்பதால் அசைவத்தை தவிர்க்கும் நாம் சனிக்கிழமை சனி பகவானுக்கு உகந்த நாள் என்பதால் இந்த அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். ஆனால் தவறிப்போய் நாம் சனிக்கிழமைகளில் அசைவம் சாப்பிட்டால் செரிமான கோளாறுகள் வாயு தொல்லைகள் ஏற்படும் என நம்பப்படுகிறது. மது அருந்து வதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

ஊறுகாய்

ஊறுகாய் குபேர அம்சம் பெற்றது. எந்த வீட்டில் ஊறுகாய் நிறைந்து இருக்கிறதோ அங்கு குபேர அம்சம் நிறைந்திருப்பதாக கருதப்படுகிறது. ஊறுகாயை உணவில் சேர்க்க விரும்பாதவர்கள் கூட வியாழனன்று சிறிதளவு ஊறுகாயை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். ஆனால் புளிப்பு சுவை கொண்ட ஊறுகாயை சனிக்கிழமை தவிர்க்க வேண்டும். இது சனிபகவானுக்கு பிடித்த சுவை கிடையாது. இதனால் தான் சனிக்கிழமை ஊறுகாயை கண்டிப்பாக தவிர்ப்பது நலம்.

WhatsApp channel

டாபிக்ஸ்