Sani Peyarchi: ராஜயோகத்தில் வரும் சனி.. மகர ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்.. ஏழரை சனிக்கு குட்பை சொல்லுங்க!
Sani Peyarchi : கோச்சாரப்படி சனி பகவான் 3, 6,11 ஆகிய இடங்களில் அமரும் பொழுது ராஜயோகம் தருவார். அப்படிப்பட்ட அமைப்பில்தான் மகர ராசியினருக்கு இந்த சனி பெயர்ச்சியில் சனி பகவான் அமரப்போகிறார். மகர ராசியைப் பொறுத்தவரை இவர்களுக்கு பணத்தின் அருமை தெரியாது.
Sani Peyarchi : சனி பகவான் நீதியின் கடவுளாக பார்க்கப்படுகிறார். ஒவ்வொருவரும் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப சனிபகவான் பலன்களை தருகிறார். இதனால் தான் சனி பகவானை நினைத்தாலே பலரும் பயப்படுகின்றனர். இந்த நிலையில் வரும் 2025 மார்ச் மாதம் 29 ஆம் தேதிக்கு பின்னர் சனி பகவான் மகர ராசியிலிருந்து முழுவதுமாக விலக உள்ளார். இதன் மூலம் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த ஏழரை சனி மகர ராசி அன்பர்களுக்கு முழுவதுமாக முடியப்போகிறது. குறிப்பாக 2020 முதல் 2023 வரையிலான காலகட்டம் மகர ராசி அன்பர்களுக்கு மிகுந்த பிரச்சனை நிறைந்த காலகட்டமாகவே இருந்திருக்கும். வரும் சனிப் பெயர்ச்சிக்கு பிறகு மகர ராசிக்கு மூன்றாம் இடமான மீன ராசியில் சனி பகவான் அமர உள்ளார்.
ராஜயோகம் தரும் சனி
கோச்சாரப்படி சனி பகவான் 3, 6,11 ஆகிய இடங்களில் அமரும் பொழுது ராஜயோகம் தருவார். அப்படிப்பட்ட அமைப்பில்தான் மகர ராசியினருக்கு இந்த சனி பெயர்ச்சியில் சனி பகவான் அமரப்போகிறார். மகர ராசியைப் பொறுத்தவரை இவர்களுக்கு பணத்தின் அருமை தெரியாது. பணத்தின் அருமை எப்பொழுது தெரிகிறதோ அப்பொழுது முதல் வாழ்க்கையில் முன்னேற்றம் தொடங்கும். அந்த அருமையை கடந்த ஏழரை வருடத்தில் நீங்கள் அனுபவித்திருப்பீர்கள். பணம் என்ன செய்யும். பணம் யாரிடம் போனால் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதனை நீங்கள் அனுபவத்தில் அறிந்திருப்பீர்கள். எனவே இனியாவது பணத்தின் அருமையை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி வாழ்க்கையில் முன்னேற முயற்சி செய்யுங்கள்.
2020 முதல் 2023 ஆகிய காலகட்டத்தில் பெரிய கஷ்டங்களை ராசி அன்பர்கள் அனுபவித்திருக்க நேரிட்டிருக்கும். இந்த காலகட்டத்தில் நிறைய அனுபவ பாடங்கள் உங்களுக்கு கிடைத்திருக்கும். தன்னையும் தன்னைச் சுற்றி உள்ளவர்களின் உண்மை முகத்தையும் நீங்கள் அறிந்து கொள்ளக்கூடிய காலகட்டமாகவே கடந்த இரண்டரை வருட காலம் உங்களுக்கு பெரிய அனுபவமாக அமைந்திருக்கும். இனி எல்லா கஷ்டங்களும் தீரும் காலமும் நெருங்கி வந்துவிட்டது.
2025 சனி பெயர்ச்சிக்கு பிந்தைய காலகட்டம்
சனி பெயர்ச்சிக்கு பிந்தைய காலகட்டம் உங்களுக்கு மிகவும் சிறப்பான காலகட்டமாகவே அமையப்போகிறது. இந்த காலகட்டத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுவதோடு நல்ல வாழ்க்கை துணை அமையும் வாய்ப்பும் சிறப்பாகவே அமையப்போகிறது. மேலும் குறிப்பாக வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பும் சிறப்பாகவே அமையப்போகிறது.
மூன்றாம் இடத்தில் அமரும் சனி பகவான் மூலம் அதிர்ஷ்டமும் செல்வாக்கும் உங்களுக்கு அதிகரிக்கப் போகிறது. குறிப்பாக மூன்றாம் இடமான தைரியம் வெற்றி ஆபரணம் முயற்சி ஆகிய பலன்களை குறிக்கும் இடத்தில் சனி பகவான் அமரப்போகிறார். எனவே மனதில் தைரியம் பிறக்கும். முயற்சிகள் கைகூடும். போட்டித் தேர்வுகளை எழுதக்கூடியவர்களுக்கு அதில் வெற்றியும் கிடைக்கும்.
குறிப்பாக கமிஷன் ஷேர் மார்க்கெட் தகவல் தொழில்நுட்பம் கணினி சார்ந்த வேலைகளில் இருப்பவர்களுக்கு பெருத்த நன்மைகள் இந்த காலகட்டத்தில் ஏற்பட போகிறது. இந்த சனி பெயர்ச்சிக்கு பிறகு நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் எதை நோக்கி செல்கிறீர்களோ அது உங்களுக்கு கிடைக்கும். அதில் வெற்றியும் நிச்சயம் கிடைக்கும்.
இந்த நேரத்தில் பிடிவாதம் கொள்ளாமல் சற்று விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. நீண்ட காலமாக உயர் பதவி கிடைக்காதவர்களுக்கு உயர் பதவிகளில் அமரும் நிலை உண்டாகப் போகிறது. குறிப்பாக குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கித் தவிப்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் குழந்தை உங்கள் கையில் தவழப்போகிறது.
மேலும் நீண்ட காலமாக வாழ்க்கையில் தொழில் செய்ய வேண்டும். என்று நினைப்பவர்களுக்கு புதிய தொழில் அமையும். வியாபாரத் துறையில் கொடிகட்டியும் பறக்கப் போகிறீர்கள். தொழிலை விரிவு செய்யும் காலகட்டமாகவும் இருக்கும் . இனிவரும் சனி பெயர்ச்சிக்கு பிறகு உள்ள காலகட்டம் நல்ல படியாக உங்களுக்கு அமையப் போகிறது.
இந்த காலகட்டத்தில் நீண்ட நாட்களாக இருந்த உடல் ரீதியான பிரச்சனைகள் தீரப்போகிறது. தாம்பத்தியத்துக்கு இடையே பிரச்சனைகள் இருந்தாலும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மேலும் கூட்டுத்தொழிலில் இருந்த சிக்கல்களும் நீங்க போகிறது மேலதிகாரியுடன் இருந்த மனக்கசப்பும் முடிவுக்கு வரப்போகிறது. மொத்தத்தில் இந்த சனி பெயர்ச்சி மகர ராசி அன்பர்களுக்கு மன அழுத்தம் நீங்கி மகிழ்ச்சியாக வாழும் காலகட்டமாகவே அமையப்போகிறது.
ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!
தொடர்புடையை செய்திகள்