October Rasi Palan : கண்ணீர் சிந்திய துலாம் ராசியினரே.. இனி எல்லாம் வெற்றிதா.. டபுள் ஓகேதா பாஸ்! அதிர்ஷ்டம் கொட்டும்!
October Rasi Palan: உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். பிள்ளைகளால் சந்தோஷங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடி வரும். தாய் உடல் நலனில் கவனம் செலுத்தி வருவது அவசியமாகும். தெற்கு தென்கிழக்கு திசைகள் அனுகூலத்தை தரும்.
October Rasi Palan: கிரக நிலை என எடுத்துக் கொண்டால் ரிஷப ராசியில் குருபகவானும் மிதுன ராசியில் செவ்வாய் பகவானும் உள்ளனர். அக்டோபர் மாத ஆரம்பத்தில் சந்திர பகவான் சிம்ம ராசியில் தனது பயணத்தை துவக்குகிறார். கன்னி ராசியில் சூரிய பகவான், புதன் பகவான், கேது பகவான் உள்ளனர். துலாம் ராசியில் சுக்கிர பகவானும், கும்ப ராசியில் சனி பகவானும், மீன ராசியில் ராகு பகவானும் சஞ்சாரம் செய்கின்றனர். இம்மாத கிரகப் பெயற்சி என எடுத்துக்கொண்டால் புதன் பகவான் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி துலாம் ராசிக்கு பயிற்சியாகின்றார். சுக்கிர பகவான் அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி அன்று விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகின்றார். அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி இரவு 7 மணி 40 நிமிடத்திற்கு சூரிய பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகின்றார். செவ்வாய் பகவான் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி அன்று மிதுன ராசியில் இருந்து ராசிக்கு பெயர்ச்சியாகிறார். நீச்ச ஸ்தானத்திற்கு செல்லும் செவ்வாய் பகவானால் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும். இம்மாத கடைசியில் அக்டோபர் 29 ஆம் தேதி புதன் பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.
விசேஷ நாட்கள்
அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி மகாளய அமாவாசை வருகின்றது. வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய இந்த அமாவாசையில் பித்துருக்கள் மேலோகத்தில் இருந்து பூமிக்கு வந்து நம்மை ஆசீர்வதிக்கக்கூடிய விசேஷமான நாளாகும். அக்டோபர் மூன்றாம் தேதி நவராத்திரி விழா ஆரம்பமாகிறது. அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி ஆயுத பூஜை என்று சொல்லக்கூடிய சரஸ்வதி பூஜை வருகின்றது. அக்டோபர் 12 ஆம் தேதி விஜயதசமி அக்டோபர் 31 ஆம் தேதி தீப ஒளி திருநாள். இனி உங்கள் ராசிக்கு இம்மாதம் நடக்க உள்ள சுப மற்றும் அசுப பலன் என்ன என்பதனையும் அசுப பலன் ஏற்படுமாயின் ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன வழிபட வேண்டிய தெய்வம் யார் என்பதனைப் பற்றி விரிவாக காண்போம்.
எல்லாம் வெற்றிதா
எப்போதும் சதா சிந்தனையுடன் உலா வரும் துலாம் ராசி அன்பர்களே நீங்கள் எதையும் செயல்படுத்துவதில் வல்லவர். இந்த மாதம் எதிலும் முன்னேற்றம் காணப்படும் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முக்கிய நபரின் அறிமுகமும் உதவியும் கிடைக்கும் நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். மரியாதை கூடும். திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடக்கும். பணவரத்து அதிகரிக்கும். பழைய கடன்களை திருப்பி செலுத்தக்கூடிய நிலை உருவாகும். நாட்களாக இருந்து வந்த அரசாங்க ரீதியிலான சிரமங்களில் இருந்து விடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் நிலை மேம்படும். அரசாங்க அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரும். சிலருக்கு திருமணம் கைகூடி வரும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளால் நன்மைகள் உண்டாகும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.
கலைத்துறை
கலைத்துறையினரைப் பொறுத்தவரை வாகனத்தை ஓட்டும்போது கவனம் தேவை. எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வந்து சேரும். கூட இருப்பவர்களிடம் எந்த விஷயத்தையும் சொல்லும்போது கவனம் தேவை. பொருளாதார நிலை உயரும். எதிர்ப்புகள் விலகும் கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பல வகையான யோகங்கள் ஏற்படும் அரசியல் துறையினருக்கு மனக்குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும்போது நிதானம் தேவை. தொழிலில் முன்னேற்றம் காணப்படும் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும். மாணவர்களைப் பொறுத்தவரை கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
நட்சத்திர பலன்கள்
சித்திரை மூன்று நான்காம் பாதங்கள் மனதில் இருந்த காரணமில்லாத வருத்தங்களும் குழப்பங்களும் மறையும். பண நடமாற்றம் சீராக இருந்து வரும் இடமாற்றம் நிலைமாற்றம் ஆகியவை சிலருக்கு ஏற்படும். எதிரிகள் அடங்கிப் போவார்கள் கூட்டுத் தொழிலில் ஈடுபாடு உள்ளவர்கள் அதிக லாபம் பெறுவார்கள்.
சுவாதி நட்சத்திரம்
உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். பிள்ளைகளால் சந்தோஷங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடி வரும். தாய் உடல் நலனில் கவனம் செலுத்தி வருவது அவசியமாகும். தெற்கு தென்கிழக்கு திசைகள் அனுகூலத்தை தரும்.
விசாகம் ஒன்று இரண்டு மூன்றாம் பாதங்கள்
உறவினர்களுடன் கருத்துப் பரிமாற்றங்களை செய்யும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை. முயற்சிகளில் தடைகள் வந்தாலும் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணிப்பீர்கள். தாய்வழி உறவினருடன் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் வரலாம் மேலும் சிறப்பாக அமைய வெள்ளிக்கிழமை தோறும் அருகில் இருக்கும். சிவன் கோவிலில் உள்ள நவகிரக சன்னதியை ஒன்பது முறை வளம் வந்து வழிபடவும் நன்மையே நடைபெறும்.
சிறப்பு பரிகாரம்
சொந்த வீடு அமைவதற்கு எளிமையான இந்த இரண்டு பரிகாரங்களை செய்து வந்தால் விரைவில் சொந்த வீடு யோகம் அமையும். அதனால் நம்பிக்கையுடன் இந்த சக்தி வாய்ந்த வழிபாட்டை செய்து வரவும். எவ்வளவுதான் சொத்துப் பணம் இருந்தாலும் நமக்கென்று ஒரு வீடு இல்லை என்றால் அது மனக்குறையாகவே இருக்கும். சொந்த வீடு வாங்க முடியவில்லையே என்பது பலரின் ஏக்கமாகவும் கனவாகவும் இருந்து வருகிறது. சொந்த வீடு வாங்க வேண்டும். வாங்கிய இடத்தில் விரைவில் வீடு கட்ட வேண்டும். ஏற்கனவே துவங்கியிருந்த வீட்டின் பணிகளை பணப்பற்றாக்குறையால் கட்டி முடிக்க முடியவில்லையே என்ற கவலையில் இருப்பவர்கள். இப்படிப்பட்டவர்கள் வீட்டிலேயே எளிமையான இரண்டு பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தாலே போதும். சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஒரு சிறிய அகல் விளக்கில் விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான வாமனரை மனதில் நினைத்து சொந்த வீடு அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு மாதம்தோறும் வரும் திருவோண நட்சத்திரத்தன்று வீட்டின் அக்னி மூளையான தென்மேற்கு மூலையில் இந்த விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். அக்னி திசை என்பது மண்ணுக்குரிய திசையாகும். அதாவது அங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவானுக்கு உரிய திசை இதுவாகும். மூன்ற அடி மண் கேட்டு மூன்று உலகையும் அளந்தவர் வாமனன். அதனால் அவரை நினைத்து பால் பாயாசம் நிவேதனமாக படைத்து வழிபட்டு வந்தால் விரைவில் சொந்த வீடு யோகம் அமையும்.
மேலும் வீட்டில் பயன்படுத்தும் காமாட்சி விளக்கு அல்லது கஜலட்சுமி விளக்கு அல்லது வழக்கமாக பயன்படுத்தும் ஏதாவது ஒரு விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். விளக்கை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து வாசனை மிகுந்த வெள்ளை நிற பூக்கள் சாற்றுங்கள். பிறகு ஐந்து ரூபாய் நாணயத்தை விளக்கிற்குள் போட்டு நெய் அல்லது எண்ணெய் ஊற்றுங்கள் ஒரு சிறிய தட்டின் மத்தியில் மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து அதன் மீது ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து நாம் ஏற்கனவே தயார் செய்த விளக்கை இதில் வைத்து விளக்கினை ஏற்ற வேண்டும். தினமும் காலையில் 6:00 மணி முதல் 7:00 மணிக்குள் இந்த விளக்கை ஏற்றி வந்தால் விரைவில் வீடு கட்டுவீர்கள்.
ரூ.5 நாணயம் என்பது குபேரனுக்கு உரியதாகும். இதை விளக்கில் போட்டு ஏற்றுவதால் வீடு கட்டுவதற்கான அல்லது வீடு வாங்குவதற்கான பணம் ஏதாவது ஒரு வழியில் உங்களுக்கு கிடைக்கும். காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலான நேரம் என்பது ஞாயிற்றுக்கிழமையில் சூரியன் திங்கள் கிழமையில் சந்திரன், செவ்வாய் கிழமையில் செவ்வாய், புதன்கிழமையில் புதன், வியாழக்கிழமையில் குரு, வெள்ளிக்கிழமையில் சுக்கிரன், சனிக்கிழமையில் சனி என நவகிரகங்களில் பாவ கிரகங்களான ராகு கேதுவைத் தவிர்த்து மற்ற ஏழு கிரகங்களையும் குறிக்கும். ஹோரை நேரமாகும். இந்த நேரத்தில் விளக்கு ஏற்றுவதால் நவகிரகங்களின் அருள் கிடைத்து பூமி யோகம் உண்டாகும். எந்த ஒரு பரிகாரம் என்றாலும் மனதில் முழு நம்பிக்கையோடும் இறைவனை உறுதியாக வேண்டி வழிபாடு செய்தால் மட்டுமே பலன் தரும். எளிமையான இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து பயன்பெறுங்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!
தொடர்புடையை செய்திகள்