Shani Star Transit: சனியின் நட்சத்திரப்பெயர்ச்சி; சதயத்தில் ஏறும் சனி.. சாபங்கள் நீங்கி சர்ரென உயரப்போகும் ராசிகள்
Shani Star Transit: சனியின் நட்சத்திரப் பெயர்ச்சி.. சதயத்தில் ஏறும் சனி.. சாபங்கள் நீங்கி சர்ரென உயரப்போகும் ராசிகள்
Shani Star Transit: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒன்பது விதமான கிரகங்களும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு விதமான ராசி மற்றும் நட்சத்திரங்களுக்குப் பெயர்ச்சியாகிறது. இதன் தாக்கம் இருக்கும் 12 ராசிகளிலும் பின்விளைவுகளை உண்டாக்கிவிடும். அதில் சில ராசிகள் அதிக நன்மைகளையும், பல ராசிகள் கெடுபலன்களையும் சந்திக்கலாம்.
குறிப்பாக, செய்யும் செயல்களுக்கு எல்லாம் நீதிமான் என்று நாம் சொல்லும் சனி பகவான், ஒருவரது செயல்பாடுகளுக்கு ஏற்ப, கர்மப் பலன்களைத் தரக்கூடியவர்.
குறிப்பாக ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் சனி பகவான் சஞ்சரித்து வாழ்க்கையின் கஷ்டகாலத்தையும் யதார்த்தத்தையும் புரியவைக்கிறார். அதேபோல், சனி பகவான் நட்சத்திரப் பெயர்ச்சியையும் மேற்கொண்டு படிப்பினைகளையும் பலன்களையும் தரக்கூடியவர்.
சனியின் சஞ்சரிப்புக் காலம்:
குறிப்பாக ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் சனி பகவான் சஞ்சரித்து வாழ்க்கையின் கஷ்டகாலத்தையும் யதார்த்தத்தையும் புரியவைக்கிறார். அதேபோல், சனி பகவான் நட்சத்திரப் பெயர்ச்சியையும் மேற்கொண்டு படிப்பினைகளையும் பலன்களையும் தரக்கூடியவர்.
அதன்படி, வரக்கூடிய அக்டோபர் 3ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியின் சதயம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கவுள்ளார். சதய நட்சத்திரம், ராகுவின் சொந்த நட்சத்திரமாகப் பார்க்கப்படுகிறது. சனி பகவான் சதய நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சியாவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அப்படி அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துப் பார்க்கலாம்.
கும்பம்:
சனி பகவான் கும்ப ராசியில் சதய நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆவதால், கும்ப ராசியினருக்கு நன்மையே கிடைக்கப்போகிறது. குறிப்பாக, சனி பகவான், கும்பத்திலேயே சஞ்சரித்து வருவதால் தொழிலில் இத்தனை நாட்களாக இருந்துவந்த சுணக்கம் மாறும். நல்ல தொழில் வழிகாட்டிகள் கிடைப்பார்கள். அதனால் நிறைய ஆர்டர்களைப் பெறுவீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்கள் முன் பட்ட அவமானம் மாறி, வெற்றிவாகை சூடுவீர்கள். கடை வைத்திருப்பவர்கள், கடைக்குத் தேவையான புதிய பொருட்களை இந்த கட்டத்தில் கிடைக்கும் லாபத்தில் வாங்கிக்குவிப்பீர்கள். கல்யாணம் ஆனவர்களின் வாழ்வில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். உங்களது ஐடியாக்களில் முதலீடு செய்ய புதிய பார்ட்னர்கள் கிடைப்பார்கள்.
சரியான வேலையில் இல்லாதவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ரிஷபம்:
சனி பகவான் கும்பராசியில் உள்ள சதய நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி ஆவதால், ரிஷப ராசியினருக்குப் போதுமான அளவு நற்பலன் கிடைக்கிறது. குறிப்பாக, பணி மற்றும் தொழிலில் இத்தனை நாட்களாக கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத பொருளாதார முன்னேற்றம் ஏற்படக்கூடும். தொழில்முனைவோருக்கு நல்ல லாபம் கிட்டும். சிலநாட்களுக்கு முன், சரியான வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தீர்கள் என்றால் இந்த காலத்தில் உங்களது முயற்சி நல்லதைத்தரும். வெகுநாட்களாக தொழிலில் இருந்த போட்டிகள் மாறும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு சனி பகவான் சதய நட்சத்திரத்துக்கு செல்வதால், காரியங்களில் ஏற்பட்ட மந்தத்தன்மை மாறி அபார வெற்றி கிடைக்கும். அயல்நாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு இந்த காலத்தில் நல்ல வாய்ப்புகள் உண்டாகும். நிதி ரீதியிலான பலன்கள் கிடைக்கும். வியாபாரங்களின் பேச்சுத் தன்மையால் நிறைய ஆர்டர்களைப் பிடிக்கலாம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
ஆன்மிகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!
டாபிக்ஸ்