October Rasi Palan : 3ல் சனி வக்கிரம்.. தொட்டது துலங்கும்.. ஒரே குஷிதா தனுசு ராசியினரே.. பெருமாள், முருகனை கும்பிடுங்க!
October Rasi Palan : இந்த அக்டோபர் மாதத்தை பொறுத்தவரைக்கும் உங்களுக்கு மிகப்பெரும் சாதகமாக இருக்கப்போகிறது குரு வக்கிரம். அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி குருபகவான் வக்கிரம் அடையக்கூடிய நாள். அந்த வக்கிரம் தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மையை தான் செய்யுமே தவிர்த்து கெடுதல் செய்யாது.
October Rasi Palan : தனுசு ராசியினரே உங்க கஷ்டங்கள் அனைத்துமே தீர்ந்து ரொம்ப நிம்மதியாக வாழக்கூடிய ஒரு காலகட்டத்துக்கு உங்களை கூட்டிச் செல்லும் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. முதலில் கிரக நிலைகள் எப்படி இருக்குகிறது பார்க்கலாம். தனுசு ராசிக்கு மூன்றாம் இடத்துல சனி வக்கிரம், நான்காம் இடத்துல ராகு, ஆறாம் இடத்துல குரு, ஏழாவது இடத்தில் செவ்வாய், 10-ல சூரியன்புதன், கேது, 11ல் சுக்கிரன் இருக்கிறார். இதுதான் அக்டோபர் மாதம் இருக்கக்கூடிய கிரக நிலை. இந்த கிரக நிலை வந்து தனுசு ராசிக்கு சாதகமாக இருக்கிறதா என்று பார்ப்போம்
சூரிய கிரகணம்
அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி புதன்கிழமை அமாவாசை வரும் அன்றைக்கு இந்திய நேரப்படி இரவு சூரிய கிரகணம் நடக்கும். இரவு சூரிய கிரகணம் நடக்குறதுனால இந்தியாவுல தெரியாது. அதனால இந்தியாவுல பாதிப்பு எதுவும் இல்லை என்று சொல்வார்கள். ஆனால் இந்தியாவில் தெரிகிறதோ இல்லையோ, பூமி எல்லாருக்கும் ஒண்ணுதான். சூரியன் எல்லாருக்கும் ஒண்ணுதான். அதனால தாக்கம் நிச்சயமாக இருக்கும். அந்த ஒரு நாள் மிகவும் ஜாக்கிரதையா இருங்கள். பெரிய பஞ்சாயத்துகள் எதிலும் மாட்டிக்கொள்ளாதீர்கள். வண்டி வாகனத்துல போகும்போதெல்லாம் கொஞ்சம் கவனமாக இருங்கள். அரை வயிறு சாப்பிடுங்கள்.
சந்திராஷ்டம தினங்கள்
அடுத்து அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி ஒரு நல்ல நாள். அடுத்தபடியாக தனுசு ராசிக்கு சந்திராஷ்டம தினங்கள் என்று நாம் பார்க்கும்போது அக்டோபர் 23, 24, 25 இந்த நாட்கள் தான் சந்திராஷ்டம தினங்களாக இருக்கும். இதனால் மூன்று நாட்கள்ல வந்து ரொம்ப ஜாக்கிரதையா இருங்கள். முக்கியமாக வீட்ல இருக்கறவங்களோட பேச்சுவார்த்தை பெரிதாக வைத்து கொள்ள வேண்டாம். ஏனென்றால். பாவ புண்ணியங்கள் கர்ம வினைகளுக்கு ஏற்ற மாதிரிதான் வீட்ல இருப்பவர்கள் அமைவார்கள். சில பேரு அதிகமான கர்மா இருக்கும். அதனால் சந்திராஷ்டம தினத்தில் வீட்லயே இருக்க சொல்கிறார்கள். இதனால் முடிந்தவரை தனிமையா இருங்கள். அதிகமான தண்ணிர் குடிப்பது, இளநீர் குடிப்பது இதெல்லாம் வந்து சந்திராஷ்டமத்துக்கு பரிகாரம். சந்திராஷ்டம நாட்களில் வந்து மூளையில இருக்கக்கூடிய ஈரப்பதம் குறைந்து போயிடும். சந்திரன் பலம் இழந்து விடுவார் இதனால் மூளையில இருக்கக்கூடிய தண்ணிர் அளவு குறையும். அதுக்குதான் நீராகரம் அதிகமா எடுக்க வேண்டும். அன்று சந்திரன் வந்து நிறைய சுக்கிரனோட ஆதிக்கமாக இருக்கும். இதனால் அன்று சனிக்கிழமை மாலை நீங்க எது ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கலாம். அது ரொம்ப நன்றாக இருக்கும். வளர்ப்பிறை திருதியா இருக்கும். மூன்றாம் பிறையாக இருக்கும்.
புதுசா நீங்க எது ஆரம்பிச்சாலும் சரி சின்ன விஷயத்திலிருந்து பெரிய விஷயம் வரைக்கும் தனுசு ராசிக்காரர்களாகிய நீங்கள் எது ஆரம்பிச்சாலும் அன்று ஆரம்பிப்பது நல்லது. அன்று சந்திரன் சுக்கிரன் சேர்க்கை தனுசு ராசிக்கு 11 ஆம் இடத்துல இருக்கக்கூடிய ஒரு நாள். இது ரொம்ப அருமையான நாள்.
குரு வக்கிரம்
இந்த அக்டோபர் மாதத்தை பொறுத்தவரைக்கும் உங்களுக்கு மிகப்பெரும் சாதகமாக இருக்கப்போகிறது குரு வக்கிரம். அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி குருபகவான் வக்கிரம் அடையக்கூடிய நாள். அந்த வக்கிரம் தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மையை தான் செய்யுமே தவிர்த்து கெடுதல் செய்யாது. ஏனென்றால் என்னதான் குரு வந்து ஆறாம் இடத்தில் இருக்கிறது உபய ராசிக்கு கெடுதல் இல்லைன்னு நம்ம சொன்னாலுமே ஒரு சில பேருக்கு குருவோட தசாபுக்திகள் நடக்கிறவங்களுக்கு கொஞ்சம் பிரச்சனைகளையும் கொடுக்கிறது.
அந்த வகையில் நாம் பார்க்கும்போது குரு வக்கிரம் அப்படின்னும்போது அந்த ஆறாம் இடத்தை எல்லாருக்கு எல்லாம் பிரச்சனை கொடுப்பது இல்லை. ஒரு சில பேருக்கு பிரச்சனைகளை தரும்.
குரு வக்கிரம் ஆறாம் இடத்தில் வக்கிரம் அடைவது என்பது ஆறாம் இடத்து பலன்களாகிய ஒரு சில விஷயங்கள் அதாவது கடன், நோய் எதிரின்னு சொல்லக்கூடிய பிரச்சனைகள் நீங்கும். இன்னொரு விஷயம் ஆறாம் இடத்தில் இப்ப வக்கிரம் அடையும் போது அந்த ஆறாம் இடத்து பலன்களை குரு செய்ய மாட்டார்.
அதே மாதிரி லக்னம் நான்காம் இடத்து பலன்கள் இந்த மாதிரி எல்லாம் செய்ய மாட்டார் அவருடைய சுய பலன்களை தான் குரு செய்யக்கூடிய ஒரு சூழ்நிலையில் இருப்பார். குரு தான் இருப்பதிலேயே மிகப்பெரும் சுபகிரகம். இதனால் நிச்சயமாக அக்டோபர் மாதத்தை பொறுத்தவரைக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகப்பெரும் முன்னேற்றங்கள் நிகழக்கூடிய ஒரு மாதமாக அமையும்.
அதே போல் மாதத்தின் பாதிக்கு மேல வந்து சூரிய பகவான் 11 ஆம் இடத்துல அமரக்கூடிய ஒரு நல்ல ஒரு காலகட்டம். நல்ல கிரக அமைப்பு அது. ஏன்னென்றால் ஒரு ஜாதகத்துல வந்து சூரியன் 11ல இருந்துட்டா பெரிய பெரிய தோஷங்கள் எதுவும் வேலை செய்யாது என்பார்கள். அந்த வகையில தனுசு ராசிக்கு அதாவது ஐப்பசி மாதம் ஆரம்பிக்கும் போது சூரிய பகவான் துலாம் ராசியில இருப்பார். இதனால் உங்க ராசிக்கு 11 ஆம் இடத்துல அவர் இருப்பார். அந்த வகையில வந்து பெரிய தோஷங்கள் எதுவுமே வேலை செய்யாத ஒரு நல்ல மாதமாக இருக்கும். நீங்க தொட்டது துலங்கும்.
அரசு வேலை ஆகட்டும், அரசிடமிருந்து வந்து வேற ஏதோ ஒரு ஆதாயத்தை தேடினாலும அது ரொம்ப ஈஸியா உங்களுக்கு நடக்கும். ஏன்னா 11ல சூரியன் இருக்கும்போது உங்களுக்கு வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாநிலத்தில் இருக்கக்கூடிய அரசு, வெளிநாட்டுல இருக்கக்கூடிய அரசு ஆதாயம். இந்த மாதிரி எந்த அரசாக இருந்தாலும் ரொம்ப ஈஸியாக உங்கள் வேலைகள் நடக்கும்.
அதேபோல் ஒன்பதுக்கு உடையவனும், பத்துக்கு உடையவரும் சேர்ந்து லாப ஸ்தானத்தில் 11 ஆம் இடத்துல இருக்கக்கூடிய ஒரு அமைப்பு. இதனால் யாருக்கெல்லாம் சூரிய தசை நடக்குதோ அவங்களுக்கும் இது ஒரு நல்ல நேரம். இந்த மாதம் வந்து நல்லா இருக்கும் சூரிய தசை, புதன் புக்தி, சூரிய புக்தி இது எல்லாம் நடக்குறவங்களுக்கு ஒரு நல்ல மாதமாக இருக்கும்.
பொதுவாக புதன் தசை பெரும்பாலும் தனுசு ராசிக்கு வருவது கிடையாது. சூரிய தசை, சூரிய புக்தி, புதன் புக்தி இந்த மாதிரி நடக்குறவங்களுக்கு எல்லாம் வந்து ரொம்ப சாதகமான மாதமாக இந்த அக்டோபர் மாதம் இருக்கும். திருமணம் நிச்சயிக்கக்கூடிய வாய்ப்பு வந்து அதிகமா இருக்கும். 11 ஆம் இடத்தில் இருக்கக்கூடிய சுக்கிரன் வந்து ஐந்தாம் இடத்தை பார்த்து வலுபடுத்துறதுனால குழந்தை பாக்கியத்துக்கும் பிரச்சனை நீங்கும்.
வழிபாடு
அதே மாதிரி உங்களுக்கு என்னதான் பிரச்சனை இருக்குன்னு கவனிங்க. உங்களுக்கு உடல் நன்றாக இருக்குது பினான்சியலாதான் பிரச்சனை அப்படின்னு நீங்கள் நினைத்தால், சனிக்கிழமைகளில் தொடர்ந்து பெருமாள் வழிபாடு பண்ணிட்டு வருவது நன்மை பயக்கும். இதை தொடர்ந்து பண்ணிட்டு வரும்போது உங்களுடைய நிதி நிலைமை நல்லா நன்றாக இருக்கும். அதே சமயம் பொருளாதார பிரச்சனைகள் இல்லை. உடல் நிலை தான் பிரச்சனை என நீங்கள் நினைத்தால் செவ்வாய்க்கிழமை செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருக வழிபாடு பண்ணுங்கள். உங்களுடைய கர்ம வினைகளும் வேகமாக கரையும். உங்க பிரச்சனைகளும் சரியாகும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!
தொடர்புடையை செய்திகள்