தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Ketu Peyarchi: கடன் தொல்லை நீங்குமா? - மிதுன ராசிக்காரர்களுக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்!

Rahu ketu Peyarchi: கடன் தொல்லை நீங்குமா? - மிதுன ராசிக்காரர்களுக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 29, 2023 12:15 PM IST

மிதுனராசிக்காரர்களுக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்களை பார்க்கலாம்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்!
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்!

இந்த நிலையில் மேஷ ராசிக்கு இந்தக்காலக்கட்டங்களில் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்."பத்தில் ராகு வருவது என்பது எல்லா கடவுளும் நம்மை ஆசீர்வதிப்பது போல நாம் எடுத்துக் கொள்ளலாம். ராகுவும் சனியும் கிட்டத்தட்ட ஒரே பண்பை கொண்டவர்கள் தான். இருவரும் களத்தில் இறங்கி நன்றாக வேலை செய்வார்கள்.

அதேபோலத்தான் அந்த ராசிக்காரர்களை ராகுவும் கேதுவும் எந்த ஏமாற்று வேலைகளையும் கொடுக்காமல் உழைக்க வைப்பார். உங்களுக்கு இதுவரை இருந்த கடன்கள் எல்லாமே அடையப் போகிறது.  

நான்காம் இடத்தில் கேது இடம் பெறுவதால் உங்களுக்கு உயர் பதவி, புகழ் உள்ளிட்ட விஷயங்கள் கிடைக்கும். இதுவரை வேலையில் யாருக்கெல்லாம் உயர் பதவி கிடைக்கவில்லையோ? அவர்கள் எல்லோருக்கும் இந்த காலகட்டத்தில் நிச்சயம் பதவி உண்டு. யாருக்கெல்லாம் வேலை கிடைக்கவில்லையோ அவர்கள் எல்லோருக்கும் இந்த காலகட்டத்தில் நிச்சயமாக வேலை கிடைக்கும்.  

அனைத்தும் அதற்காக கொட்டும் என்று அர்த்தம் கிடையாது. நீங்கள் இந்தக் காலகட்டத்தில் இது கிடைத்தால் இதை நகர்த்தி விடலாம் என்று சில விஷயங்களை நினைத்திருப்பீர்கள். அந்த விஷயங்கள் எல்லாமே நீங்கள் நினைத்தபடி நிறைவேறும்”  என்று பேசினார். 

தகவல் உதவி: பிஹைண்ட் வுட்ஸ்!

WhatsApp channel

டாபிக்ஸ்