தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Two Lucky Zodiac Signs : ராகு கேது இந்த இரண்டு ராசிகளுக்கு மட்டும் அதிர்ஷ்டத்தை அள்ளித்தர போகிறார்!

Two Lucky Zodiac Signs : ராகு கேது இந்த இரண்டு ராசிகளுக்கு மட்டும் அதிர்ஷ்டத்தை அள்ளித்தர போகிறார்!

Divya Sekar HT Tamil
Sep 04, 2023 10:44 AM IST

திடீர் அதிர்ஷ்டம் இந்த இரண்டு ராசிகளுக்கு மட்டும் ராகு கேது தர போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காண்போம்.

ராகு கேது
ராகு கேது

இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றி கொள்கின்றனர். இரண்டு கிரகங்களும் ஒரே நாளில் தனது ராசியை மாற்றுகிறார்கள்.

இந்த ஆண்டு வரும் அக்டோபர் 30-ஆம் தேதி அன்று ராகு கேது பெயர்ச்சி நடைபெற உள்ளது. ராகு பகவான் மேஷ ராசியிலும் கேது பகவான் துலாம் ராசியிலும் தற்போது அமர்ந்துள்ளனர். அக்டோபர் 30ஆம் தேதி அன்று ராகு பகவான் மீன ராசியிலும் கேது பகவான் கன்னி ராசியிலும் சஞ்சாரம் செய்ய உள்ளன.

சனிபகவானை கண்டால் பயம் கொள்வது போல ராகு கேதுவை கண்டாலும் அனைவரும் அச்சம் கொள்வார்கள். ஆனால் அச்சப்படத் தேவையில்லை செய்யும் செயல்களுக்கு ஏற்ப பிரதிபலன்களை கொடுப்பவர்கள் தான்.

குரு பகவானைப் போல ராகுவும் புதன் பகவானைப் போல கேதுவும் செயல்படப்போவதால் 18 ஆண்டுகளுக்குப் பின் திடீர் அதிர்ஷ்டம் இந்த இரண்டு ராசிகளுக்கு மட்டும் தர போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காண்போம்.

துலாம்

நீண்ட நாள் கனவான குழந்தை பாக்கியம் கிடைக்கும். மோட்ச ஸ்தானத்தில் மோட்சகாரகன் கேது வருவதால் புது முயற்சிகள் கை கூடும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். பதவி உயர்வு கிடைக்கும். 

இந்த ராகு கேது பெயர்ச்சி திடீர் யோகத்தை கொடுத்து உங்களுக்கு செல்வம், செல்வாக்கை அதிகரிக்கப்போகிறது. விரைய செலவுகள் குறைந்து சுப செலவுகள் உயரும்.

வருமானம் அதிகரிக்கும் வீடு மனை வாங்கும் யோகம் வரும். உங்களின் நீண்ட நாள் கடன்களும் அடையும். குரு பகவானைப் போல செயல்படும் ராகு அள்ளித்தரப்போகிறார்தடைபட்ட திருமணம் நடைபெறும்.

தனுசு

திடீர் அதிர்ஷ்டம் யோகத்தை கொடுக்கும். வசதி வாய்ப்புகள் கூடும். உங்களுடைய வாழ்க்கையில் எதிர்பாராத திடீர் திருப்பம் உண்டாகும். கேந்திரத்தில் வரும் ராகு கேது இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவுவார்கள். 

கடனுக்கு வட்டி கட்டிய நேரம் மாறி வரவுகள் சேமிப்பாக உயரும். தொழில் உத்தியோகம் வேலை வாய்ப்பு ஆகிய ஸ்தானங்களுக்கு கேது வருகிறார். 

தொழிலில் இடமாற்றம் உத்தியோக உயர்வு கிடைக்கும். தனம் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பழைய கடன்கள் அடைப்படும். பிள்ளைகளின் திருமணம் படிப்புக்கு செலவு செய்வீர்கள்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்