கலியுகத்திற்கு வரம் தர மறுத்த சிவபெருமான்.. தேடிச் சென்ற பூமாதேவி.. அருள்பாலித்த பூமிநாதர்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கலியுகத்திற்கு வரம் தர மறுத்த சிவபெருமான்.. தேடிச் சென்ற பூமாதேவி.. அருள்பாலித்த பூமிநாதர்

கலியுகத்திற்கு வரம் தர மறுத்த சிவபெருமான்.. தேடிச் சென்ற பூமாதேவி.. அருள்பாலித்த பூமிநாதர்

Suriyakumar Jayabalan HT Tamil
Oct 27, 2024 06:00 AM IST

Bhoominathar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் புதுக்கோட்டை மாவட்டம் செவலூர் அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் பூமிநாதருடைய தாயார் ஆரணவள்ளி எனவும் அழைக்கப்பட்டு வருகின்றனர்.

கலியுகத்திற்கு வரம் தர மறுத்த சிவபெருமான்.. தேடிச் சென்ற பூமாதேவி.. அருள்பாலித்த பூமிநாதர்
கலியுகத்திற்கு வரம் தர மறுத்த சிவபெருமான்.. தேடிச் சென்ற பூமாதேவி.. அருள்பாலித்த பூமிநாதர்

இந்த உலகத்தில் மனித உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. ஆதி கடவுள் ஆக திகழ்ந்துவரும் சிவபெருமான் கடவுளுக்கெல்லாம் கடவுளாக இருந்து வருவதாக புராணங்களில் கூறப்படுகிறது.

இந்தியாவில் எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு அப்பொழுது இருந்து இப்பொழுது வரை வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கக்கூடிய காசியில் சிவபெருமானின் பக்தனாக எத்தனையோ அகோரிகள் இன்று வரை வாழ்ந்து வருகின்றன.

மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் அனைத்து மன்னர்களும் சிவபெருமானின் தீவிர பக்தர்கள் ஆக திகழ்ந்து வந்துள்ளனர். அப்படிப்பட்ட மன்னர்கள் வானுயர்ந்த மிகப்பெரிய கோயில்களை கட்டி தங்கள் கலை நகத்தையும் சிவபெருமான் மீது கொண்ட அன்பையும் வெளிப்படுத்தி விட்டு சென்றுள்ளனர்.

பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை அந்த கோயில்கள் தரம் குறையாமல் வானுயர்ந்து காணப்படுகின்றது. குறிப்பாக தமிழ்நாட்டில் எத்தனையோ மிகப்பெரிய கோயில்கள் இருந்து வருகின்றன. சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் புதுக்கோட்டை மாவட்டம் செவலூர் அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் பூமிநாதருடைய தாயார் ஆரணவள்ளி எனவும் அழைக்கப்பட்டு வருகின்றனர்.

தல சிறப்பு

இந்த கோயிலில் இருக்கக்கூடிய தீர்த்தமானது தற்போது சாதாரணமாக மற்றவர்களுக்கு காட்சியளித்து வருகிறது. ஆனால் இந்த கோயிலில் குளம் மிகவும் மகிமை வாய்ந்தது. தர்ப்பணத்திற்கு ஏற்ற தீர்த்தம் என பல பட்டயங்களில் காணப்படுகிறது. இது மகாவிஷ்ணுவால் எழுப்பப்பட்ட கோயில் எனக் கூறப்படுகிறது இங்கு வீற்றிருக்கக்கூடிய லட்சுமி நரசிம்மர் மீது வருட முழுவதும் சூரிய ஒளி படுவது மிகவும் சிறப்பாக அந்த அளவிற்கு சிறப்பான கட்டுமானத்தில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோயிலில் வந்து வழிபட்டால் நில சிக்கல்கள், பூகம்பம் உள்ளிட்டவைகளிலிருந்து நிவர்த்தி பெறலாம் என கூறப்படுகிறது.

தல வரலாறு

இந்த உலகமானது தற்போது நான்கு யுகங்களை சந்தித்து இருக்கிறது. அதில் முதல் யுகம்தான் கிருதயுகம். அந்த யுகத்தில் பூமாதேவி கடுமையான தவம் இருந்தார். எதிர்வரும் யுகங்களிலும் இந்த பூமி பாரத்தை தாங்கும் சக்தியை அதிகமாக பெற வேண்டும் என்பது அவருடைய வேண்டுகோளாக இருந்தது.

உடனே சிவபெருமான் அவர் முன்பு தோன்றினார். உடனே சிவபெருமான் திரோதாயுதம், துவாபரயுகம் உள்ளிட்ட இரண்டு விகங்களிலும் பூமியை தாங்குவதற்கான சக்தியை உங்களுக்கு நான் தருகிறேன். ஆனால் தாயே கலியுகத்தில் இந்த பூமியை தாங்கும் சக்தியை பெறுவதற்கு நீங்கள் செய்த தவம் போதாது என கூறிவிட்டார்.

உலகத்தில் இருக்கக்கூடிய அத்தனை பக்தர்களும் உங்களை பூஜை செய்து வழிபடுவதன் மூலமாக உங்களுக்கு வலிமை கிடைக்கும். மேலும் விஷ்ணு பகவானின் கிருபை அதற்கு தேவை எனக் கூறிவிட்டு சிவபெருமான் மறைந்து விட்டார்.

இந்த உலகத்தில் நல்ல பக்தர்கள் யார் இருக்கிறார்கள் என பூமாதேவி பல்வேறு கோவில்களுக்கு சென்று தேடி அலைந்து உள்ளார். பூமாதேவி சென்ற இடமெல்லாம் சுயம்பு மூர்த்தியாக காட்சி கொடுத்த சிவபெருமானின் வழிபட்டார். பூமாதேவி வழிபட்ட மூர்த்திகளுக்கு பூமிநாதர், பூலோகநாதர் என பெயர் கொடுக்கப்பட்டது. அதில் ஒன்றுதான் செவலூர் பூமிநாதர் திருக்கோயில் ஆகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்