October Rasi Palan: 12-ல் இருந்து முதல் வீட்டுக்கு நகரும் செவ்வாய்.. இந்த ராசிக்கு அடுத்த மாதம் எப்படி இருக்கும்?-october rasi palan sevvai moves from 12th to 1st house for this rasi read more - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  October Rasi Palan: 12-ல் இருந்து முதல் வீட்டுக்கு நகரும் செவ்வாய்.. இந்த ராசிக்கு அடுத்த மாதம் எப்படி இருக்கும்?

October Rasi Palan: 12-ல் இருந்து முதல் வீட்டுக்கு நகரும் செவ்வாய்.. இந்த ராசிக்கு அடுத்த மாதம் எப்படி இருக்கும்?

Manigandan K T HT Tamil
Sep 25, 2024 06:00 AM IST

Rasi Palan: மாணவர்களை பொறுத்தவரைக்கும் அக்டோபரில் கடக ராசிக்கு குரு வக்கிரம் அடையற இந்த நேரம். எப்போதெல்லாம் சுப கிரகங்கள் வக்கிரமடையுதோ அப்போது மாணவர்களுக்கு அறிவை நன்றாக வளர்க்கும்.

October Rasi Palan: 12-ல் இருந்து முதல் வீட்டுக்கு நகரும் செவ்வாய்.. இந்த ராசிக்கு அடுத்த மாதம் எப்படி இருக்கும்?
October Rasi Palan: 12-ல் இருந்து முதல் வீட்டுக்கு நகரும் செவ்வாய்.. இந்த ராசிக்கு அடுத்த மாதம் எப்படி இருக்கும்?

உங்க பொருளாதாரத்தில், உங்க வேலை மாற்றத்தில், உங்க முன்னேற்றத்தில், உங்களுக்கு தேவையான ஒரு தொழில் வளர்ச்சியில் என அதற்கெல்லாம் வாய்ப்புகள் உருவாக்கக்கூடிய ஒரு காலமாக அக்டோபர் அமையும்.

திருமணத்தில் கவனம் தேவை

திருமணம் கைகூடி வரும் சூழல் இருப்பதால், கொஞ்சம் யோசித்து முடிவு செய்வது நல்லது. ஏனெனில், சனி இன்னமும் 8-இல் தான் இருக்கிறார். அவர் ஏதாவது இடையூறு பண்ணாம இருக்க வேண்டும் என்பதற்காகவே ஜோதிடர்கள் இவ்வாறு தெரிவிக்கின்றனர்.

மாணவர்களை பொறுத்தவரைக்கும் அக்டோபரில் கடக ராசிக்கு குரு வக்கிரம் அடையற இந்த நேரம். எப்போதெல்லாம் சுப கிரகங்கள் வக்கிரமடையுதோ அப்போது மாணவர்களுக்கு அறிவை நன்றாக வளர்க்கும்.

அறிவும் திறமையும் ஒரு மனிதனுக்கு வளர வேண்டும் என்றால், குரு, சூரியன், புதன் ஆகிய இந்த 3 கிரகங்கள் வலிமைப் பெற்று இருக்க வேண்டும்.

குடும்பம், ஆரோக்கியம் எப்படி இருக்கும்?

அக்டோபர் மாதத்தில், கடக ராசிக்காரர்களுக்கு குடும்பம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என பார்க்கலாம்.

உங்களுக்கு குரு 11ல் தேவையான பொருள் பணம் என்ன தேவையோ குடும்பத்துக்கு பணம் என்ன தேவையோ அதற்கு ஆதரவு அளிக்கும் சூழல் தான் காணப்படுகிறது. செவ்வாய் 12 ல் இருந்து முதல் வீட்டுக்கு நகர்கிறது. அப்படி வரும்பொழுது செவ்வாயுடைய தன்மை எப்படி இருக்கும்? சந்திரன் வீட்டில் செவ்வாய் நெருங்கும் பொழுது நீச்சம் அடைவார். வலிமை இழப்பார். அதனால், உங்கள் சிந்திக்கு சற்றே முன் பின் முரணாக இருக்கும். எந்த விஷயத்தையும் பொறுமையாக அணுக வேண்டியதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இறை பக்தியில் நாட்டம் காட்டுங்கள். தினமும் பூஜை செய்யுங்கள். பொறுமையுடன் காணப்படுவீர்கள்.

இது ஒரு பொது பலன். ஒவ்வொருவருக்கும் ஒரு ராசி இருக்கும், ஒரு லக்னம் இருக்கும், அதில் நட்சத்திரங்கள் இருக்கும். உங்களுடைய தசா புத்திகள் இருக்கும். உங்க பிறந்த ஜாதகத்துடைய அமைப்பு இருக்கும்.

இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்துதான் ஒருவரின் பலன்கள் என்ன, அவருக்கு எப்படி இருக்கும் என்பதை சரியாக ஜோதிட நிபுணர்களால் கணிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்