Sani Bagawan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் லக்னங்களும் சனி பகவானும்! வாழ்கையில் சோதனையா? சாதனையா?-how lord saturn affects thulam viruchigam dhanushu magaram kuambam meenam lagnam - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Bagawan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் லக்னங்களும் சனி பகவானும்! வாழ்கையில் சோதனையா? சாதனையா?

Sani Bagawan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் லக்னங்களும் சனி பகவானும்! வாழ்கையில் சோதனையா? சாதனையா?

Kathiravan V HT Tamil
Sep 24, 2024 04:24 PM IST

துலாம் முதல் மீனம் வரையிலான லக்னங்களுக்கு சனி பகவான் தரும் நன்மைகள் மற்றும் தீமைகள்…!

Sani Bagawan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் லக்னங்களும் சனி பகவானும்! வாழ்கையில் சோதனையா? சாதனையா?
Sani Bagawan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் லக்னங்களும் சனி பகவானும்! வாழ்கையில் சோதனையா? சாதனையா?

விருச்சிகம் 

விருச்சிக லக்னத்திற்கு சனி லக்ன சுபர் அல்ல; ஆயினும் ஒரு இயற்கை பாவி என்கின்ற முறையில் புகழ் ஸ்தானம் மற்றும் நாலாம் வீடு ஆகிய இரண்டுக்கும் ஆதிபத்தியம் கொண்டவர். இதில் நான்காம் அதிபதியாகி ஆறில் இவர் நீச்சம் என்கின்ற வலிமையும் 12 ஆம் இடத்தில் உச்சம் என்கின்ற வலிமையையும் தரும்போது விருச்சிக லக்னக்காரர்களை தூண்டிவிட்டு தவறான செயல்களில் ஈடுபடவும் செய்வார். 

தனுசு 

தனுசு லக்னத்துக்கு இரண்டாம் இடமான தன ஸ்தானத்திற்கும், மூன்றாம் இடம் என்கின்ற புகழ் ஸ்தானத்திற்கும் அதிபதியாக சனி பகவான் உள்ளார். ராகு, கேது போன்ற கிரகங்களோடு சேராத நிலையில் இருக்கும் போது பெருமளவு நன்மைகளை சனி பகவான் செய்வார். மக்கள் அபிமானம், குடும்ப ஆதரவு, நண்பர்கள், உறவுகள் மூலம் நன்மைகளை சனி பகவான் கொடுப்பார். 

மகரம் 

மகர லக்னத்தில் லக்னாதிபதி மற்றும் இரண்டாம் வீட்டுக்கு அதிபதியாக சனி பகவான் உள்ளார். படிப்பினைகள், பொருளாதார வெற்றி,  குடும்ப அன்யோன்யம் ஆகியவற்றை கொடுப்பார். சனி பகவான் உடன் புதன், சுக்கிரன் தொடர்பு இருந்தால் மேலும் நன்மைகள் கிடைக்கும். சனி திசை காலத்தில் மிகச் சிறந்த பலன்களை சனி பகவான் கொடுப்பார்.  

கும்பம்

கும்பம் லக்னத்த்கிற்கு லக்னாதிபதியாகவும் விரையாதிபதியாகவும் சனி பகவான் உள்ளார். வீடு கட்டும் அமைப்பு, சொத்து சேர்க்கும் அமைப்பு, வெளிநாட்டு வாழ்க்கை, நீண்ட நாள் வெளிநாட்டில் வசிக்கும் சூழ்நிலைகள், தலைமறைவு, யோகங்கள், அதிர்ஷ்ட வாய்ப்புகள், மறைமுக முதலீடுகள் போன்றவற்றை சனி பகவான் கொடுப்பார். குரு, சுக்கிரன், புதன் உடன் சனி பகவான் தொடர்பு இருந்தால் மிகுந்த நன்மைகள் கிடைக்கும். 

மீனம்

மீன லக்ன ஜாதகர்களுக்கு 11 மற்றும் 12 ஆம் இடத்தில் சனிபகவான் ஆதிபத்தியம் பெறுகிறார். குருவுக்கு சமம் என்கின்ற நிலையில் இவர் 11 ஆம் இடத்தோடு தொடர்பு கொண்ட நிலையில் தசை நடத்தும்போது ஜாதகருக்கு வெற்றி மேல் வெற்றிகளை சனி பவான் கொடுபார். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner