Sun Transit: கன்னி ராசியில் சூரியன் சஞ்சாரம்! பணப் பிரச்னை, திடீர் செலவுகள்..எந்தெந்த ராசிகளுக்கு சிக்கல்
Sun Transit in Virgo Horoscope: கன்னி ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இதன் விளையவாக பணப் பிரச்னை, திடீர் செலவுகள் போன்ற சிக்கலில் சில ராசிகள் மாட்டிக்கொள்ளும். சூரியா சஞ்சாரத்தால் எந்ததெந்த ராசிகளுக்கு தாக்கம் ஏற்படுகிறது என்பதை பார்க்கலாம்
கன்னி ராசியில் சூரியன் பெயர்ச்சி: கிரகங்களின் ராஜாவான சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறார். சூரியனின் மாற்றம் ஒவ்வொரு ராசியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
செப்டம்பர் 17ஆம் தேதி காலை 11:17 மணிக்கு சூரியன் கன்னி ராசிக்குள் நுழைகிறார். கன்னி ராசியிலும் கேது கிரகம் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், கன்னியில் சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை இருக்கும். சூரியன் கன்னி ராசிக்கு வருவதால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் வீட்டில் காரணமான சூரியன், ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இதனால், படிப்பு, கற்பித்தல் போன்றவற்றில் இடையூறு ஏற்படும். போட்டியில் வெற்றி பெறும் சூழ்நிலை உருவாகலாம். எதிரிகளை வெல்ல முடியும். மன அழுத்தத்தால் கண் பிரச்னைகள் வரலாம்.
தொலைதூரப் பயணங்களால் செலவுகள் கூடும். தந்தையின் உடல்நிலை குறித்து கவலைகள் ஏற்படலாம். பழைய நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு நான்காம் வீட்டின் காரணி கிரகமாக இருக்கும் சூரியன் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இதன் விளைவாக, பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கலாம். வீடு, வாகனச் செலவுகள் கூடும். ரியல் எஸ்டேட் தொடர்பான பணிகளுக்கான செலவுகள் அதிகரிக்கலாம். தாயின் உடல்நிலையில் கவலைகள் ஏற்படலாம்.
தாயாருக்கு காயம் அல்லது அறுவை சிகிச்சையை சந்திக்க நேரிடும். பிள்ளைகள் தரப்பிலிருந்து கவலை அல்லது செலவு ஏற்படும் சூழ்நிலை ஏற்படலாம். படிப்பு மற்றும் கற்பித்தலில் தடைகள் அல்லது மன அழுத்த சூழ்நிலைகள் இருக்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்கு மூன்றாவது வீட்டுக்கு காரணமான கிரகமாக சூரியன் நான்காவது வீட்டில் சஞ்சரிக்கிறார். இதன் விளைவாக, உடன்பிறப்புகள் மற்றும் நண்பர்களின் உடல்நிலை அல்லது வேலை தொடர்பாக பதற்றம் ஏற்படலாம். அரசு அமைப்புடன் தொடர்புடையவர்களுக்கு சற்று பாதகமான சூழ்நிலை உருவாகலாம்.
தாயின் உடல்நிலையில் கவலைகள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் மார்பு அசௌகரியம் அதிகரிக்கலாம். வாகனம் மற்றும் ரியல் எஸ்டேட் விஷயத்தில் மனக் குழப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தோள்பட்டை வலி அதிகரிக்கலாம்.
கடகம்
இரண்டாம் வீட்டுக்கு காரணமான கிரகமான சூரியன் மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இதனால் குடும்ப விஷயங்களில் குழப்பம் அதிகரிக்கும். திடீர் செலவுகள் செய்யும் சூழ்நிலை உருவாகலாம். வீரம் அதிகரிக்கும். பற்கள் மற்றும் கண்களில் பிரச்னைகள் இருக்கலாம்.
வேலையில் வெற்றிபெற நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். விளையாட்டுத் துறையில் தொடர்புடையவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் நண்பர்கள் விஷயத்தில் மனக்கசப்பு ஏற்படலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு சூரியன் லக்னத்துக்கு காரணமான கிரகமாக இருந்து இரண்டாம் வீட்டில் சஞ்சரிப்பார். இதன் விளைவாக, பேச்சின் தீவிரம் அதிகரிக்கலாம். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வரலாம், குடும்ப செலவுகள் அதிகரிக்கும். மன உறுதியில் திடீர் குறைவு ஏற்படலாம். பற்கள் மற்றும் கண் பிரச்னைகள் காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கலாம். காயம் அல்லது அறுவை சிகிச்சை சூழ்நிலை ஏற்படலாம். தோள்பட்டை அல்லது இடுப்பில் வலி இருக்கலாம். திடீர் பணச் செலவுகளால் நிதி நிலைமை பாதிக்கப்படலாம். மன உறுதியின்மை அதிகரிக்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சூரியன் பன்னிரண்டாம் வீட்டுக்கு காரணகர்த்தாவாகி உடல் வீட்டுக்குச் செல்வார். இதன் விளைவாக, ஆரோக்கியத்துக்கான செலவுகள் அதிகரிக்கும், இன்ப ஆசைகளுக்காக செலவுகள் அதிகரிக்கும். தொலைதூரப் பயணங்களால் செலவுகள் கூடும். திடீர் உடல் ஆற்றல் விரயம் ஏற்படும். தோள்பட்டை மற்றும் முதுகுவலி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். திருமண வாழ்க்கை மற்றும் காதல் உறவுகளில் மோதல் அல்லது தடைகள் ஏற்படலாம். தினசரி வேலை அல்லது தினசரி வருமானத்தில் குறுக்கீடு இருக்கலாம். கூட்டுப் பணியில் சச்சரவுகள் வரலாம்.
பொறுப்புதுறப்பு: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரிடம் ஆலோசனை பெறவும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்