October Month Rasi Palan: 'விபரீத ராஜ யோகம், உச்சமா இருக்கார்.. குரு வக்கிரம்'-இந்த ராசிக்கு அக்டோபர் எப்படி இருக்கும்?-october month 2024 rasi palan viparitha raja yoga guru vakram read full details - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  October Month Rasi Palan: 'விபரீத ராஜ யோகம், உச்சமா இருக்கார்.. குரு வக்கிரம்'-இந்த ராசிக்கு அக்டோபர் எப்படி இருக்கும்?

October Month Rasi Palan: 'விபரீத ராஜ யோகம், உச்சமா இருக்கார்.. குரு வக்கிரம்'-இந்த ராசிக்கு அக்டோபர் எப்படி இருக்கும்?

Manigandan K T HT Tamil
Sep 21, 2024 09:39 AM IST

Rasipalan: எந்த பெரிய தொல்லையும் இல்லை. நீங்க தெளிவா உங்க டே டு டே டெய்லி லைஃப் மற்றும் உங்க வொர்க் லைஃப் பிளான்படி ரெகுலரா போயிட்டே இருந்தீங்கன்னா எந்த பெரிய தொல்லையும் இருக்காது. எந்த பெரிய கஷ்டமும் இல்லை.

October Month Rasi Palan: 'விபரீத ராஜ யோகம், உச்சமா இருக்கார்.. குரு வக்கிரம்'-இந்த ராசிக்கு அக்டோபர் எப்படி இருக்கும்?
October Month Rasi Palan: 'விபரீத ராஜ யோகம், உச்சமா இருக்கார்.. குரு வக்கிரம்'-இந்த ராசிக்கு அக்டோபர் எப்படி இருக்கும்?

அவரால முழுக்க செயல்பட முடியாத ஒரு இடத்துல அப்படியே புதன் கொஞ்சம் இருக்கு. புதன் அப்படியே சுக்கிரனோட ஷிப்ட் ஆயிடும். அக்டோபர் 10 இல் இருந்து கொஞ்சம் நல்ல ஸ்கோர் எடுக்கும். ஆறாம் இடத்தில் புதன் சுக்கிரன் சேர்க்கை அது நல்லா இருக்குமா என்றால், நல்லாதான் இருக்கும். ஆறாம் இடமா இருந்தாலும் புதன் வேலை செய்யும். சுக்கிரன் அதோட சொந்த வீடு. அது விபரீத ராஜ யோகம் என அழைக்கப்படுகிறது. ரிஷபத்துக்கு வேலை மற்றும் ப்ரொஃபைல் எப்படி இருக்கு என பார்ப்போம்.

எந்த பெரிய தொல்லையும் இல்லை. நீங்க தெளிவா உங்க டே டு டே டெய்லி லைஃப் மற்றும் உங்க வொர்க் லைஃப் பிளான்படி ரெகுலரா போயிட்டே இருந்தீங்கன்னா எந்த பெரிய தொல்லையும் இருக்காது. எந்த பெரிய கஷ்டமும் இல்லை.

ரிஷபத்துக்கு பிசினஸ் எப்படி?

பிசினஸ் சேஞ்ச் பண்ணனும், வேற எதாவது எக்ஸ்பாண்ட் பண்ணனும், புதுசா ட்ரை பண்ணனும், அதுக்கு கூட இது ஒன்னும் கெட்ட நேரம்னு கிடையாது. அந்த பிளான நல்லா திட்டமிட்டு இறங்கணும். குரு முதல் வீட்டில் இருக்கிறார். நம்ம ரொம்ப ஸ்மார்ட் ரொம்ப அறிவாளியா இருப்போம் திறமையா இருப்போம் நம்மளையே கூட மிஸ்டேக் பண்ண வைக்கும்.

அது மிஸ்டேக்னு சொல்றதுக்கு பதிலா நமக்கு ஒரு அனுபவத்தை கொடுக்கும். அந்த மாதிரி தவறு பண்றதுக்கு சின்ன சின்ன சான்ஸ இந்த குரு கொடுக்கும். நீங்க உங்க ஜாப்ல உங்க வொர்க்ல உங்க பிசினஸ்ல என்ன வேணாலும் பண்ணுங்க பட் ஒரு முறைக்கு நாலு முறை அந்த ப்ரீ வொர்க் பண்ணிட்டு அதுல இறங்குங்க.

நேரடியாவே உங்களுக்கு வெற்றியைக் கொடுத்துடும். செவ்வாய் ஒரு காரசார விவாதங்களை குடும்பத்துக்குள்ள பண்றதுக்கு வாய்ப்பு அப்படியே உண்டு. திடீர் திடீர்னு வேகமா பேச வைப்பார்.கொஞ்சம் அதுல கவனமா இருந்தா போதும், அதுல ரொம்ப சீரியஸா எடுத்துக்க வேணாம்.

எப்பெல்லாம் ஆறாம் இடத்தில் சுக்கிரன் வருதோ அது ரொம்ப நெருக்கமா இருக்குற உறவுகளோட தான் அது ஒரு அன்பான சண்டைன்னு சொல்றதா இல்ல இவங்கள விட்டா நமக்கு சண்டை கூட ஆள் இல்லைன்னு சொல்றதான்னு தெரியல.

அவங்களோட தான் அப்படியே வாக்குவாதம் வரும். செவ்வாய் இரண்டுலயும் சுக்கிரன் ஆறாம் இடத்துல இருக்கிறதுனால தேவையில்லாத வாக்குவாதம் உங்களுக்கு ரொம்ப பிடித்தமான நபரிடம் வந்தால் அதை தவிர்ப்பது நல்லது.

அதனால ஒரு பெரிய மன உளைச்சல் வராம இருக்கும். மாணவர்களை பொறுத்தவரைக்கும் இந்த மாதம் இந்த புதன் சுக்கிரன் சேர்ந்த பிறகு கொஞ்சம் ஆக்டிவேஷன் நல்லா இருக்கும்.

விபரீத ராஜயோகம்

ஆதித்ய யோகம் 16 ஆம் தேதி வந்துரும். விபரீத ராஜயோகம் இல்லத்தரசிகளுக்கு கைகொடுக்கும். சில பேருக்கு கழுத்து சில பேருக்கு ஜீரண மண்டலம் சில பேருக்கு வயிறு சம்பந்தப்பட்ட தொல்லை வரும்.

குரு வயிறை தொடர்புடைய கிரகம். அந்த வயிறுல இருந்து குடல், அதுல இருந்து மேல வரக்கூடிய ஜீரண மண்டலம், அதுக்கும் மேல இந்த த்ரோட்ல வந்து கனெக்ட் ஆயிடும்.

சீனியர்ஸுக்கு ரிஷபம் நல்லா இருக்கு. நீங்க சீனியர்னு ஃபீல் பண்ணாத அளவுக்கு உங்களுக்கு எந்த ஏழரை சனியோ அஷ்டம சனியோ அர்த்தாஷ்டம சனியோ ஒண்ணுமே இல்லை.

உங்க ரூட் கிளியரா இருக்கு உங்க பிளான் கிளியரா இருக்கு அப்படின்னா தாராளமா உங்க லைஃப் நீங்க எக்ஸ்ட்ராடினரியா பிளான் பண்ணி கொண்டு போயிட்டே இருக்கலாம்.

நீங்க போடுற பிளானுக்கு உங்களோட கிரக அமைப்புகள் எல்லாம் உதவியாக இருக்கும்.

இது ஒரு பொது பலன். ஒவ்வொருத்தருக்கும் ஒரு ராசி இருக்கும், ஒரு ஒரு லக்னம் இருக்கும், அதுக்குள்ள நட்சத்திரங்கள் இருக்கும். உங்களுடைய தசா புத்திகள் இருக்கும். உங்க பிறந்த ஜாதகத்துடைய அமைப்பு இருக்கும்.

இதெல்லாம் அடிப்படையாக வெச்சிதான் ஒரு மனிதனுடைய பலன்கள் என்ன நடக்கும்னா சரியா புரிஞ்சுக்க முடியும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner