Chevvai Bagavan: ’மேஷம் முதல் மீனம் வரை!’ 12 வீடுகளில் செவ்வாய் நின்று கொடுக்கும் பலன்களும் பாதங்களும்…!-astrological effects of lord chevvai bagavan in 12 zodiac houses benefits and drawbacks - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Chevvai Bagavan: ’மேஷம் முதல் மீனம் வரை!’ 12 வீடுகளில் செவ்வாய் நின்று கொடுக்கும் பலன்களும் பாதங்களும்…!

Chevvai Bagavan: ’மேஷம் முதல் மீனம் வரை!’ 12 வீடுகளில் செவ்வாய் நின்று கொடுக்கும் பலன்களும் பாதங்களும்…!

Kathiravan V HT Tamil
Sep 15, 2024 05:50 PM IST

Chevvai Bagavan: பூமி மற்றும் சகோதர காரர்கர் ஆன செவ்வாய் பகவான் ஆனவர் நமது பற்கள், ரத்தம், எலும்பு ஆகியவற்றின் அதிபதியாக உள்ளார். பொருள் காரகத்துவத்தில் வீடு, மனை, வாகனம், நிலங்கள், கனரக வாகனங்களை செவ்வாய் குறிக்கின்றது.

Chevvai Bagavan: ’மேஷம் முதல் மீனம் வரை!’ 12 வீடுகளில் செவ்வாய் நின்று கொடுக்கும் பலன்களும் பாதங்களும்…!
Chevvai Bagavan: ’மேஷம் முதல் மீனம் வரை!’ 12 வீடுகளில் செவ்வாய் நின்று கொடுக்கும் பலன்களும் பாதங்களும்…!

பூமி மற்றும் சகோதர காரர்கர் ஆன செவ்வாய் பகவான் ஆனவர் நமது பற்கள், ரத்தம், எலும்பு ஆகியவற்றின் அதிபதியாக உள்ளார். பொருள் காரகத்துவத்தில் வீடு, மனை, வாகனம், நிலங்கள், கனரக வாகனங்களை செவ்வாய் குறிக்கின்றது. 

லக்னம்

லக்னத்தில் செவ்வாய் பகவான் இருக்கும் போது ஜாதகருக்கு சகோதர பாசம் அதிகம் இருக்கும். ஜாதகருக்கு தலைக்காயமும், தாயாருக்கு அறுவை சிகிச்சையும் வருவதற்கான வாய்புகள் அதிகம் இருக்கும். வேகமாக செயல்படும் எண்ணம் கொண்ட இவர்களது வீட்டில் பலரும் கோபக்காரர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு எளிதில் வீடு, மனை உள்ளிட்ட சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். 

2ஆம் இடத்தில் செவ்வாய்

இரண்டாம் இடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பவர்களுக்கு வார்த்தைகள் வீரியமாக இருக்கும். இவர்கள் பேசும் போது எளிதில் காயப்படுத்திவிடுவார்கள். இவர்கள் வாழ்வது, கெடுவதும் பேச்சாகத்தான் இருக்கும். 

3ஆம் இடத்தில் செவ்வாய்

மூன்றாம் இடத்தில் செவ்வாய் பகவான் உள்ளது சககோதர்கள் உடன் பிரச்னை உண்டாகும். சொத்துக்களை இழக்கும் நிலை ஏற்படலாம். குழந்தை பிறப்புக்கு பிறகு புதிய சொத்துக்களை வாங்கும் நிலை உண்டாகும்.

4ஆம் இடத்தில் செவ்வாய்

நான்காம் இடத்தில் செவ்வாய் பகவான் இருந்தால் பெண்களுக்கு கணவர் மற்றும் சகோதர்களால் பிரச்னைகள் உண்டாகும். வீடு, மனை, வாகனம் மூலம் இவர்களின் நிம்மதி கெடும். உடலில் தழும்பு, வயிறு சார்ந்த உபத்திரம் உள்ளிட்டவை ஏற்படும். அண்டை அயலார் உடன் பிரச்னைகள் ஏற்படும். 

5ஆம் இடத்தில் செவ்வாய்

ஐந்தாம் இடத்தில் செவ்வாய் பகவான் உள்ளவர்களுக்கு ஆன்மீக ஈடுபாடு அதிகம் இருக்கும். சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் தெய்வ காரியங்கள் மீது மிகுந்த ஈடுபாடு காட்டுவீர்கள். குழந்தைகள் பிறந்ததற்கு பின்னர் வளர்ச்சி சீராக இருக்கும்.

6ஆம் இடத்தில் செவ்வாய்

ஆறாம் இடத்தில் செவ்வாய் இருந்தால் பணியிடத்தில் நிம்மதி கெடும். நெருக்கடிகளும் போராட்டமும் நிறைந்த பணி சூழல் இருக்கும். இவர்களுக்கு எதிரிகளால் அழிவு ஏற்படாது. 

7ஆம் இடத்தில் செவ்வாய்

ஏழாம் இடத்தில் செவ்வாய் உள்ளவர்கள் எப்போதும் கோபக்காரர்களாக இருப்பார்கள். இரண்டாவது குழந்தை பிறப்புக்கு பின்னர் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். வெளிநாடு, வெளிமாநிலம் அல்லது வெளியூர்களில் புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். 

8ஆம் இடத்தில் செவ்வாய்

எட்டாம் இடத்தில் செவ்வாய் இருந்தால் புதையல் ஆசை அதிகம் இருக்கும். ரகசியங்களை கண்டறியும் உளவுத்துறை, செய்தித்துறைகளில் அதிக நாட்டம் இருக்கும். ஜோதிட மற்றும் சாஸ்திரங்களில் ஞானத்தை வளர்த்துக் கொள்வார்கள். 

9ஆம் இடத்தில் செவ்வாய்

ஒன்பதாம் இடத்தில் செவ்வாய் உள்ளவர்களுக்கு தந்தை உடனான உறவு நன்றாக இருக்கும். தந்தை சொத்துக்கள் உடையவர் ஆக இருப்பார். ஜாதகர் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

10ஆம் இடத்தில் செவ்வாய்

பத்தாம் இடத்தில் செவ்வாய் திக்பலம் பெறுகிறார். உணவு, வாகனம், ஜவுளி, டிரான்ஸ்போர்ட், ரியல் எஸ்டேட், மண் சார்ந்த தொழில்கள் வளம் தரும். வாழ்கையில் வளர்ச்சி முன்னேற்றம் இருக்கும்.

11ஆம் இடத்தில் செவ்வாய்

11ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பது நல்ல பலன்களை ஏற்படுத்தி தரும். ஜாதகருக்கு சில நேரம் மதமாற்ற சிந்தனை வரலாம். 

12ஆம் இடத்தில் செவ்வாய்

12ஆம் இடத்தில் செவ்வாய் இருந்தால் ஒரு காலத்துல சொத்துக்கள் விரயமாகும். எதிர்த்து போராடும் குணம் குறையும். ஜாதகர் முன்கோபியாக இருப்பார். உணவு பழக்க வழக்கம் பாதிப்பை ஏற்படுத்தும். 

Whats_app_banner