தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Chithirai Festival: தஞ்சை பெரிய கோயில் - தேரில் நடப்பட்ட முகூர்த்தக்கால்

Chithirai Festival: தஞ்சை பெரிய கோயில் - தேரில் நடப்பட்ட முகூர்த்தக்கால்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 25, 2023 01:41 PM IST

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

தஞ்சை பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயில்

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த தஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையார் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். பல கலை நுணுக்கங்களை தன் வசம் வைத்துள்ள இந்த திருக்கோயிலில் பெரியநாயகி அம்மன், வாராஹி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர் சன்னதி என அனைத்து சன்னதிகளும் உள்ளன.

உலக சிறப்புப் பெற்ற இந்த திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 18 நாட்கள் சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சித்திரைத் திருவிழா தொடங்கியது முதல் காலை மற்றும் மாலை வேளையில் சுவாமிகள் வீதி உலா நடைபெற்று வருகிறது. இந்த சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் மே ஒன்றாம் தேதி அன்று நடக்க உள்ளது.

அப்போது அந்த தேர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேல வீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி, கீழ வீதி என நான்கு வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும். இந்நிலையில் தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு தஞ்சை மேல வீதியில் தேர்நிலையில் உள்ள தேரில் முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக முகூர்த்தக் காலுக்குப் பால், திரவிய பொடி, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தேரில் முகூர்த்த நாள் நடப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சியில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் செயல் அலுவலர், கோயில் ஊழியர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

WhatsApp channel

டாபிக்ஸ்