தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru 2024: குரு செய்யப் போவது உறுதி.. பணம் கொட்டும் ராசிக்காரர்கள் நீங்கள் தான்

Guru 2024: குரு செய்யப் போவது உறுதி.. பணம் கொட்டும் ராசிக்காரர்கள் நீங்கள் தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 22, 2023 11:29 AM IST

குரு பகவான் 2024 ஆம் ஆண்டு அதிர்ஷ்டத்தை கொட்டப் போகும் ராசிகளை காண்போம்.

குரு பகவான்
குரு பகவான்

குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக இவர் விளங்கி வருகிறார்.

மங்களநாயகனாக விளங்கக்கூடிய குருபகவான் வரும் டிசம்பர் 31ம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். இதன் காரணமாக வரக்கூடிய 2024 ஆம் ஆண்டு நான்கு ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும் சேமிப்பு அதிகரிக்கும். செலவுகள் குறையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கின்ற காரணத்தினால் முன்னேற்றங்கள் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருக்கும். வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நினைத்த காரியங்கள் நிறைவேற வாய்ப்பு உள்ளது.

சிம்ம ராசி

 

நல்ல வாய்ப்புகள் இந்த ஆண்டு உங்களுக்கு தேடி வரும். செல்வத்திற்கு உங்களுக்கு எந்த குறையும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். அற்புதமான யோகங்கள் உங்களைத் தேடி வரும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் மகிழ்ச்சிக்கு என்று குறையும் இருக்காது. ஆசைப்பட்ட காரியங்கள் நடக்கும்.

தனுசு ராசி

 

 

தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்லவிதமான லாபங்கள் கிடைக்கும். திருமணம் மற்றும் சுப காரியங்கள் வீட்டில் நிகழ உள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வேலைக்காக வெளிநாடு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. குழந்தைகள் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியாக நடந்து கொள்வார்கள்.

மகர ராசி

 

நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வீட்டில் மங்கல செலவுகள் நிகழும் மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். இதுவரை இருந்த சிக்கல்கள் அனைத்தும். குரு பகவானால் விலகும். வீடு தேடி அதிர்ஷ்டம் வரும். வெற்றிக்கு உங்களது கடின உழைப்பு விதையாக அமையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel