தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Vakra Transit: குருவால் குடும்பமாக பணமழை பெறும் ராசிக்காரர்கள்

Guru Vakra Transit: குருவால் குடும்பமாக பணமழை பெறும் ராசிக்காரர்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 16, 2023 12:05 PM IST

குரு பகவானால் 2024 ஆம் ஆண்டு ராஜ வாழ்க்கையை பெறுகின்ற ராசிக்காரர்களை காண்போம்.

குரு வக்ர பெயர்ச்சி
குரு வக்ர பெயர்ச்சி

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருந்தாலும், சில கிரகங்களின் இடமாற்றம் பல்வேறு விதமான சுப பலன்களை கொடுக்கும். செல்வம், செழிப்பு, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், பணவரவு உள்ளிட்டவற்றிற்கு குரு பகவான் காரணியாக விளங்கி வருகிறார்.

நவகிரகங்களிலேயே குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கவனிக்கப்படுகிறது. அந்த வகையில் வரும் டிசம்பர் 31ஆம் தேதி அன்று குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் 2024 ஆம் ஆண்டு அதிர்ஷ்டத்தை பெறப்போகின்ற ராசிகள் குறித்து காண்போம்.

மகர ராசி

 

வேலைக்காக அணிந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் செலவுகள் குறைந்து வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிக்கல்கள் குறைந்து லாபம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் உண்டாகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் குரு பகவானின் அருளால் கிடைக்கும் என கூறப்படுகிறது. நீங்கள் எதிர் பார்த்து காத்திருந்த மன அமைதி கிடைக்கும் என கூறப்படுகிறது.

தனுசு ராசி

 

வேலைக்காக பயணங்கள் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரம் மற்றும் தொழிலில் இருந்த சிக்கல்கள் விலகும். புதிய முயற்சிகள் உங்களுக்கு லாபத்தை அதிகரிக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் இருந்த சிக்கல் உள்ள அனைத்தும் விலகும் என கூறப்படுகிறது. குடும்பத்தில் சகஜமான சூழ்நிலை திரும்பும் இளைய எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடு செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சிம்ம ராசி

 

தனக்கான காரியத்தை சாதித்துக் கொள்ள நல்ல தருணங்கள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் காத்துக் கொண்டிருந்த எதிர்பார்ப்புகளில் தருணங்கள் அமையும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வருமானம் குறையாத அளவிற்கு அனைத்து சூழல்களும் உங்களுக்கு ஏற்றார் போல் அமையும் எனக் கூறப்படுகிறது. அனைத்து வகையிலும் மகிழ்ச்சி உங்களைத் தேடி வரும் எனக் கூறப்படுகிறது.

மேஷ ராசி

 

சேமிப்பு அதிகரித்து உங்களுடைய செல்வங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திடீர் அதிர்ஷ்டம் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் உங்களுடைய மரியாதை அதிகரிக்கும். நல்ல முடிவுகள் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தி உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நினைத்த காரியங்கள் நிறைவேற அதிக வாய்ப்பு உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்