Luck Zodiac: வயிறு குலுங்க சிரிக்க போகும் ராசிகள்.. சூரியன் செப்டம்பரில் நுழைகிறார்.. இனி ராஜ வாழ்க்கைதான்-let us see about the zodiac signs that sun lord will bring money from september onwards - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Luck Zodiac: வயிறு குலுங்க சிரிக்க போகும் ராசிகள்.. சூரியன் செப்டம்பரில் நுழைகிறார்.. இனி ராஜ வாழ்க்கைதான்

Luck Zodiac: வயிறு குலுங்க சிரிக்க போகும் ராசிகள்.. சூரியன் செப்டம்பரில் நுழைகிறார்.. இனி ராஜ வாழ்க்கைதான்

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 08, 2024 10:43 AM IST

September: சூரிய பகவானின் கன்னி ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் சூரிய பகவானால் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Luck Zodiac: வயிறு குலுங்க சிரிக்க போகும் ராசிகள்.. சூரியன் செப்டம்பரில் நுழைகிறார்.. இனி ராஜ வாழ்க்கைதான்
Luck Zodiac: வயிறு குலுங்க சிரிக்க போகும் ராசிகள்.. சூரியன் செப்டம்பரில் நுழைகிறார்.. இனி ராஜ வாழ்க்கைதான்

சூரிய பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் தற்போது சிம்ம ராசியில் பயணம் செய்து வரும் சூரிய பகவான் வருகின்ற செப்டம்பர் 16ஆம் தேதி அன்று கன்னி ராசிக்கு செல்கிறார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும்.

சூரிய பகவானின் கன்னி ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் சூரிய பகவானால் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

தனுசு ராசி

சூரிய பகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். எதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பளம் உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். 

நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். வியாபாரத்தில் பல மடங்கு லாபம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் சூரியன் பயணம் செய்யப்போகின்றார். எதனால் உங்களுக்கு நல்ல பொருள் மற்றும் இன்பங்கள் அதன் யோகங்கள் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

வியாபாரத்தை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். அறிவாற்றல் உங்களுக்கு அதிகரிக்கும். நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். கொடுக்கப்பட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

புதிய திட்டங்கள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களின் பேச்சு சுவாரசியத்தால் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். வணிகத்தில் சிக்கிக் கிடந்த பணம் உங்களைத் தேடி வரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner