Sun Transit: 2 ராஜயோகங்களை உருவாக்கும் சூரிய பகவான்.. சிம்ம ராசியில் பெயரும் சூரியனால் டாப் கியரில் செல்லும் 4 ராசிகள்
Sun Transit: 2 ராஜயோகங்களை உருவாக்கும் சூரிய பகவான் மற்றும் சிம்ம ராசியில் பெயரும் சூரியனால் டாப் கியரில் செல்லும் 4 ராசிகள் குறித்துக் காண்போம்.
Sun Transit: வேத ஜோதிடத்தின்படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. இது மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்து பஞ்சாங்கத்தின்படி, சூரிய பகவான், வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி அன்று இரவு 07:53 மணிக்கு கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ந்து வரும் செப்டம்பர் 16ஆம் தேதி வரை, சிம்ம ராசியில் பயணிப்பார்.
புதன் பகவானும் சுக்கிர பகவானும் ஏற்கனவே சிம்ம ராசியில் அமர்ந்துள்ளனர். இந்த கிரகங்கள் இந்த சூரியன்களுடன் இணையும்போது 2 அபூர்வ இராஜயோகங்கள் உருவாகும்.
சூரியன்-புதன் சேர்க்கை ஆனது புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்கும். அதேநேரத்தில் சூரியன்-சுக்கிரன் சேர்ந்து சுக்ராதித்ய ராஜயோகத்தை உருவாக்குவார். ஜோதிடத்தில், இந்த இரண்டு இராஜ யோகங்களும் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
இது மரியாதையை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. பண வரவு அதிகரித்து ஒவ்வொரு துறையிலும் பெரும் வெற்றி கிடைக்கும். சூரிய பகவானின் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.
மேஷம்:
ஆகஸ்ட் மாதத்தில் நடக்கயிருக்கும் சூரிய பெயர்ச்சியினால் மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இந்த நேரத்தில் நீங்கள் திடீரென நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். முன்னேற்றப் பாதையில் இருந்த தடைகள் நீங்கும். தொழில் செய்பவர்கள் எளிதாக வெற்றி பெறுவீர்கள். பொருளாதாரம் வலுவாக இருக்கும். வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் கிடைக்கும்.
ரிஷபம்:
சூரிய பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கும். இந்த நேரத்தில், உங்கள் பணிகள் அனைத்தும் எந்த இடையூறும் இல்லாமல் வெற்றிகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடையும். பணியிடத்தில் புதிய வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அமையும் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த பணிகள் வெற்றிபெறும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு வாய்ப்புகள் கூடும். வருமானம் அதிகரிக்கும்.
சிம்மம்:
சூரியனின் பெயர்ச்சியால் உருவாகும் 2 ராஜயோகங்கள் சிம்ம ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தைப் பிரகாசமாக்கும். இந்த காலகட்டத்தில் சரியான வாய்ப்புகள் இன்றி சிக்கித்தவிப்பவர்களுக்கு, வேலை கிடைக்கும். பொருளாதார சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். பணவரவுக்கு குறைவிருக்காது. பாசிட்டிவ் எனர்ஜி வாழ்க்கையில் நிறைந்து இருக்கும். ஒவ்வொரு துறையிலும் வெற்றியின் படிக்கட்டுகளில் ஏறுவீர்கள். ஆன்மிக காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எல்லா வேலைகளிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
துலாம்:
சூரியன், புதன், சுக்கிரன் சேர்க்கையினால், துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்படும். எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பழைய முதலீடுகள் நல்ல வருமானத்தைத் தரும். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாக்கப்படும். புதிய வேலைகளைத் தொடங்க இது மிகவும் நல்ல நேரமாக இருக்கும்.
மீனம்:
சுக்ராதித்ய மற்றும் புதாதித்ய ராஜ யோகத்தினால் மீன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கையில் எது வேண்டுமோ அது கிடைக்கும். வெளிநாட்டுப் பயணம் கைகூடும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் சிறப்பான வெற்றி பெறுவார்கள். வருமானம் அதிகரிக்கும். சுகபோகங்களில் வாழ்வீர்கள். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். ஒவ்வொரு செயலும் சாதகமான பலன்களைப் பெறும்.
பொறுப்பு துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்