Lord Mars: தலைகீழாக பணத்தில் குதிக்கும் ராசிகள்.. செவ்வாய் கொட்டுகிறார்.. உங்கள் ராசி என்ன?-let us see about the zodiac signs that are blessed by lord mars - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Mars: தலைகீழாக பணத்தில் குதிக்கும் ராசிகள்.. செவ்வாய் கொட்டுகிறார்.. உங்கள் ராசி என்ன?

Lord Mars: தலைகீழாக பணத்தில் குதிக்கும் ராசிகள்.. செவ்வாய் கொட்டுகிறார்.. உங்கள் ராசி என்ன?

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 12, 2024 03:03 PM IST

Lord Mars: செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் வரப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Mars: தலைகீழாக பணத்தில் குதிக்கும் ராசிகள்.. செவ்வாய் கொட்டுகிறார்.. உங்கள் ராசி என்ன?
Lord Mars: தலைகீழாக பணத்தில் குதிக்கும் ராசிகள்.. செவ்வாய் கொட்டுகிறார்.. உங்கள் ராசி என்ன?

அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு சென்றார். இது புதன் பகவானின் சொந்தமான ராசி ஆகும். செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் வரப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு வெற்றிகரமான வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

துலாம் ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். எதனால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். பண வரப்பில் எந்த குறையும் இருக்காது. நிது நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

மீன ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கும். வசதி மற்றும் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும். வெற்றிகரமாக முடிவடையும் வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். ஏலரை சனி நடந்து கொண்டிருக்கின்றது அதனால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner