Today Pooja Time: செவ்வாய்க்கிழமை வழிபாட்டின் விஷேசம்.. இன்று பூஜைக்கு உகந்த நேரம் மற்றும் வழிபாட்டின் பயன்கள் இதோ!
Today Pooja Time: செவ்வாய்க்கிழமை வழிபாட்டின் விசேஷம், இன்று பூஜைக்கு உகந்த நேரம் மற்றும் இன்றைய வழிபாட்டின் பயன்கள் பற்றி காண்போம்.
Today Pooja Time: 2024 செப்டம்பர் 10 ஆம் தேதியான இன்று காலை, மாலை நல்ல நேரம், எமகண்டம், எப்போது என்பதை பார்க்கலாம். மேலும் இன்று எந்த கடவுளை வணங்குவது உங்களுக்கு நன்மை பயக்கும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் கடவுகளாக போற்றப்படும் முருகப்பெருமான் செவ்வாய்க்குரியவர். இவரை வணங்கி தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதிலும் குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் பல நன்மைகள் கிடைக்குமாம்.
செவ்வாய்க் கிழமை தோறும் அதிகாலையில் எழுந்து நீராடி நித்தியக் கடன்களை முடித்து, அருகில் உள்ள முருகப் பெருமான் கோயிலுக்குச் சென்று வழிபடவேண்டும். பின்னர் வீட்டுக்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை கடைபிடிக்க வேண்டும். கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப் பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம்.
மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இந்த விரத்தை 9 செவ்வாய்க்கிழமைகளில் கடைபிடித்தால் செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும். வீட்டில் உள்ள பண கஷ்டமும் சரியாகிவிடும் என்பது மக்களின் நம்பிக்கை.
இன்றைய பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு : குரோதி வருடம்
மாதம் : ஆவணி மாதம்
தேதி: 25 (10.09.2024
கிழமை: செவ்வாய்க்கிழமை
திதி: ஸப்தமி:
இரவு: 07.10 வரை, பின்பு அஷ்டமி.
ஸ்ரார்த்த திதி: சுக்ல - ஸப்தமி.
நேத்திரம்: 1 - ஜீவன்: 1/2.
நாள்: செவ்வாய்கிழமை.
{ மங்கள வாஸரம் }
சம -நோக்கு நாள்
நக்ஷத்திரம்:
அனுஷம்:- மாலை: 05.13 வரை பின்பு கேட்டை.
நாம யோகம்:
இரவு: 10.00. வரை விஷ்கம்பம், பின்பு ப்ரீதி.
அமிர்தாதி யோகம்:
இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம்.
கரணம்: 07.30 - 09.00.
காலை: 06.48 வரை கரசை, பின்பு இரவு: 07.10 வரை வணிசை, பின்பு பத்திரை.
நல்ல நேரம்
காலை: 07.45 மணி முதல் 08.45 வரை
மாலை: 04.45 முதல் 05.45 வரை
கௌரி- நல்ல நேரம்:
காலை: 10.45 மணி முதல் 11.45 மணி வரை
இரவு : 07.30 மணி முதல் 08.30 வரை
ராகு காலம்:
மாலை: 03.00 மணி முதல் 04.30 வரை
எமகண்டம்:
காலை: 09.00 மணி முதல் 10.30 மணி வரை
குளிகை:
பிற்பகல்: 12.00 மணி முதல் 01.30 மணி வரை
(குளிகை காலத்தில் ஒரு செயல் செய்தால் மீண்டும் அதே போல் நடைபெறும், எனவே செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)
சூரிய உதயம்:
காலை: 06 மணி 04 நிமிடம்
சூரிய-அஸ்தமனம்:
மாலை: 06 மணி 09 நிமிடம்
சந்திராஷ்டம - நட்சத்திரம்:
அஸ்வினி, - பரணி.
௲லம்: வடக்கு.
பரிகாரம்: பால்.
லக்ன- நேரம்:
(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது)
கடகம் - லக்னம்:-
காலை: 02.52 மணி முதல் 04.59 வரை.
சிம்மம் - லக்னம்:-
காலை: 05.00 - 07.05 AM வரை.
கன்னி - லக்னம்:-
காலை: 07.06 - 09.05 AM வரை.
துலாம் - லக்னம்:-
காலை: 09.06 - 11.11 PM வரை.
விருச்சிகம் -லக்னம்:-
பகல்: 11.12 - 01.22 PM வரை.
தனுசு - லக்னம்:-
பகல்: 01.23 - 03.29 PM வரை.
மகரம் -லக்னம்;-
மாலை: 03.30 - 05.24 PM வரை.
கும்பம் - லக்னம்:-
மாலை: 05.25 - 07.07 PM வரை.
மீனம் - லக்னம்:-
இரவு: 07.08 மணி முதல் 08.48 மணி வரை.
மேஷம்- லக்னம்:
இரவு: 08.49 மணி முதல் 10.33 மணி வரை.
ரிஷபம் - லக்னம்:-
இரவு: 10.34 மணி முதல் அதிகாலை 12.35 வரை
மிதுனம் - லக்னம்:-
இரவு: 12.36 மணி முதல் 02.47 மணி வரை.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!
டாபிக்ஸ்