குரு மாடி கட்டி கோடிகளை நிரப்புவார்.. இனி உங்கள் ராசி மீது பணமழை கொட்டும்.. தட்டி விட வாய்ப்பு இல்லை
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு மாடி கட்டி கோடிகளை நிரப்புவார்.. இனி உங்கள் ராசி மீது பணமழை கொட்டும்.. தட்டி விட வாய்ப்பு இல்லை

குரு மாடி கட்டி கோடிகளை நிரப்புவார்.. இனி உங்கள் ராசி மீது பணமழை கொட்டும்.. தட்டி விட வாய்ப்பு இல்லை

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 14, 2024 03:22 PM IST

Guru Bhagavan: குருபகவான் ரிஷப ராசியில் வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். குரு பகவானின் வக்கிர பயணத்தால் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

குரு மாடி கட்டி கோடிகளை நிரப்புவார்.. இனி உங்கள் ராசி மீது பணமழை கொட்டும்.. தட்டி விட வாய்ப்பு இல்லை
குரு மாடி கட்டி கோடிகளை நிரப்புவார்.. இனி உங்கள் ராசி மீது பணமழை கொட்டும்.. தட்டி விட வாய்ப்பு இல்லை

குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதியன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் என்ற ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் அக்டோபர் ஒன்பதாம் தேதி என்று குருபகவான் ரிஷப ராசியில் வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். குரு பகவானின் வக்கிர பயணத்தால் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் குருபகவான் வக்கிர நிலை அடைந்துள்ளார். அதனால் உங்களுக்கு மிகவும் அற்புதமான காலமாக இது அமைந்துள்ளது. வேலை செய்யும் இடத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சிய அதிகரிக்கும். கூட்டுத்தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

சிம்ம ராசி

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் குருபகவான் வக்கிரம் நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை யோகம் கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

கடக ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குரு பகவான் வக்ர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிதி நன்மைகள் கிடைக்கக்கூடும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

வசதி மற்றும் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீண்ட நாள் ஆசைகள் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நிறைவேறும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner