தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vaikunta Ekadasi: சொர்க்கவாசல் திறக்கும் நாள் தெரியுமா!

Vaikunta Ekadasi: சொர்க்கவாசல் திறக்கும் நாள் தெரியுமா!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 17, 2022 02:15 PM IST

கொந்தகை தெய்வநாயக பெருமாள் திருக்கோயிலில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் தேதி அன்று வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு திருவிழா நடைபெற உள்ளது.

வைகுண்ட ஏகாதசி
வைகுண்ட ஏகாதசி

வரலாற்று புகழ் பெற்ற இக்கோயிலில் நடைபெற உள்ள வைகுண்ட ஏகாதசி திருநாள் குறித்து அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சார்பில் செய்தி குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில்," மதுரை மாவட்ட அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் உபக்கோவிலான குந்தகை தெய்வநாயக பெருமாள் திருக்கோயிலில் வரும் ஜனவரி மாதம் இரண்டாம் தேதி அன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற உள்ளது. மேலும் அன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் தெய்வநாயக பெருமாள் சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற உள்ளது.

அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணிக்குள் திருமஞ்சனம், திருவாராதனம் தொடர்ந்து தீபாராதனை மற்றும் தீர்த்த கோஸ்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக திருக்கோயில் அதிகாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தல சிறப்புகள்

அருள்மிகு தெய்வநாயகப் பெருமாள் கோயில் அமைந்திருக்கும் குந்தகை என்ற கிராமம் ஆனது பாண்டவர்களின் தாயாரான குந்திதேவி அவர்களின் பெயரால் குந்தீ நகர் என அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வரால் திருவாய்மொழி என்ற திவ்ய பிரபந்தத்தில் ஊரின் பெயர் இடம் பெற்றுள்ளது. மணவாள மாமுனி தனது திருவாய்மொழி பிள்ளை குருவிடம் உபதேச சாரங்களை இங்கே கற்றுத் தெரிந்தார் என கூறப்படுகிறது.

இ கோயிலில் உள்ள பெருமாளை வழிபட்டால் திருமண தடை விலகும், கல்வியில் உயர்வு கிடைக்கும், பதவி உயர்வுகள் கிட்டும், ஞானத்தில் சிறந்து விளங்குவர் என்பது அதிகமாகும்.

WhatsApp channel